பிக் பாஸ் பிரதீப்புக்கு கல்யாணம் முடிந்தது.. கிறிஸ்தவ முறைப்படி நடந்த திருமணம்.. வெளியான புகைப்படம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பிரதீப்பிற்கு இன்று அவருடைய காதலியோடு திருமணம் நடைபெற்று இருக்கிறது. அவருடைய புகைப்படங்களை நடிகர் மற்றும் பிக் பாஸ் பிரபலமான சுரேஷ் சக்கரவர்த்தி வெளியிட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் பிரதீப். இவர் இதற்கு முன்பு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் அதில் கூட அவருக்கு கிடைக்காத பெயரும் புகழும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்தது.

நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து இவர் தன்னுடைய விளையாட்டை தொடங்கியிருந்தார். ஆனால் உள்ளிருக்கும் சில போட்டியாளர்கள் இவருக்கு எதிராக சிவப்பு கொடி தூக்கியதால் இவர் இருப்பது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தை சொல்லி இவர் நிகழ்ச்சியில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார்.

ஆனால் அதற்கு பிறகு தான் இவருக்கு பெரிய அளவில் சப்போர்ட் கிடைத்தது. அதுபோல இவர் ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன் என்று அப்போதே சொல்லி இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணோடு பிரதீப்பிற்கு எங்கேஜ்மென்ட் நடைபெற்று இருந்த நிலையில் இன்று திருமணம் நடைபெற்றிருக்கிறது.

காலையில் பிரதீப் பட்டு வேஷ்டி சட்டையில் இருக்கும் புகைப்படத்தை பிக் பாஸ் பிரபலமான சுரேஷ் சக்கரவர்த்தி பகிர்ந்து இருந்தார். இந்த நிலையில் இப்போது கிறிஸ்தவ முறைப்படி சர்ச்சில் நடந்த திருமண புகைப்படங்களையும் சுரேஷ் சக்கரவர்த்தி பகிர்ந்து இருக்கிறார். பிரதீப் மற்றும் அவருடைய மனைவிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

-
சிறகடிக்க ஆசை: முத்துக்கு மட்டும் சோதனை மேல் சோதனையா? ரோகிணியால் அழியும் விஜயா.. செம சம்பவம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications