எனக்கு டைட்டிலை விட பெரிய விஷயம் நடந்திருக்கு! கண்கலங்கி கையெடுத்து கும்பிட்ட ராணவ்..குவியும் ஆறுதல்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்து கடந்த வாரத்தில் எவிக்ஷனான ராணவ் தன்னுடைய எவிக்ஷனுக்கு பிறகு முதல்முறையாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக ராணவ் அறிமுகமானார். அவர் ஏற்கனவே ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டரில் நடித்திருக்கிறார்.

அதிலும் நடிகர் விஜய் சேதுபதி நடித்த இறைவி திரைப்படத்திலும், நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது அவர் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்தத் திரைப்படம் இன்னும் சில மாதங்களில் வெளியாக இருக்கிறது.
ஆனால் பிக் பாஸ் வீட்டிற்குள் ராணுவ அறிமுகமான முதல் நாளிலிருந்து அவர் வெளியேறும் கடைசி நாள் வரைக்கும் உள்ளிருந்த பல போட்டியாளர்கள் அவரை ஒதுக்கி வைத்தனர். அதோடு ராணவ்க்கு எதுவும் தெரியவில்லை, அவருக்கும் கூமுட்டை என்றெல்லாம் சௌந்தர்யா உட்பட சிலர் முகத்துக்கு நேராகவே அவரை அவமானப்படுத்தி வந்தனர்.
அது போல அவருக்கு கீழே விழுந்தபோது கையில் அடிபட்ட நிலையில் அப்போது கூட சிலர் நடிக்கிறான் என்று சொல்லியது ரசிகர்கள் மத்தியில் ராணவிற்க்கு பெரிய அனுதாபத்தை ஏற்படுத்தியது. அதற்கு பிறகு அதிகமான ரசிகர்கள் ராணவிற்கு சப்போர்ட் செய்து வருகிறார்கள். ஆனாலும் கடந்த வாரத்தில் அவர் வெளியேற்றப்பட்டார். அது அன்ஃபேர் எவிக்ஷன் என்று பலர் விஜய் சேதுபதியை டேக் செய்து போஸ்ட் போட்டு வருகிறார்கள்.

இப்படியான நிலையில் வெளியே வந்த பிறகு ராணவ் முதல் வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அதில் ரசிகர்கள் எனக்கு இந்த அளவிற்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நான் நினைக்கவே இல்லை. வந்து பார்த்தால் அவ்வளவு மெசேஜ் இருக்கிறது என்னால் எல்லோருக்கும் மெசேஜ் செய்ய முடியவில்லை. ஆனால் எல்லோரையும் நேரில் சந்திக்க வேண்டும் எனக்கு என்று எனக்கு ரொம்ப ஆசையாக இருக்கிறது.
இதுவரைக்கும் நான் ஒரு போஸ்ட் போட்டால் ஒரு கமெண்ட் வருவதே பெரிய அதிசயமாக பார்ப்பேன். ஆனால் இப்போது எனக்காக எத்தனை பேர் கமெண்ட் கொடுத்திருக்கிறார்கள். எனக்காக இத்தனை பேர் சப்போர்ட் செய்கிறார்கள். இது என்னை என்னவோ செய்கிறது. என்னுடைய நெஞ்சில் இருந்து எல்லோருக்கும் நன்றி சொல்கிறேன்.
அதோடு லவ் யூ ன்னு சொல்கிறேன். உங்களுக்கு பதிலுக்கு என்னால் என்ன செய்ய முடியும் என்று தெரியவில்லை. கண்டிப்பாக எல்லோரையும் சந்தித்து பேசுவதற்காக முயற்சி செய்கிறேன். அது கூடிய சீக்கிரத்தில் நடக்கும். அதுபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து நான் வெளியே வந்த பிறகு ராணவா... என்று எல்லோரும் கூப்பிடுவது எனக்கு என்னவோ செய்கிறது அவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறேன்.

என்னுடைய சந்தோஷத்தை வெளியே சொல்ல வார்த்தைகள் இல்லை. எனக்கு டைட்டிலை விடவும் பெரிய சந்தோஷம் கிடைத்திருக்கிறது. ஒருவேளை நான் டைட்டில் ஜெயித்திருந்தால் கூட எனக்கு இந்த அளவிற்கு சப்போர்ட்டும் சந்தோஷமும் கிடைத்திருக்குமா என்றால் தெரியாது. ஆனால் மக்கள் எனக்கு கொடுக்கும் ஆதரவு பார்க்கும் போது எனக்கு அப்படியே பறப்பது போல இருக்கிறது. எல்லோருக்கும் ரொம்ப நன்றி... என்று அந்த வீடியோவில் ராணவ் பேசி இருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications