பிக் பாஸ் 8ல் ஒரு ஆம்பள கூட இதை பண்ணல.. ரொம்ப பீல் பண்ணுனேன்! மாயா வெளியிட்ட வீடியோ
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் ஆண்களின் நடவடிக்கையை பார்த்து பிக் பாஸ் தமிழ் சீசன் 7 போட்டியாளராக இருந்த மாயா வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் அதிகமான கமெண்ட்களை பெற்று வருகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியதும் பல பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை ரிவ்யூ செய்ய தொடங்கி விடுவார்கள். அந்த வகையில் வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ் வரிசையில் இப்போது நடிகை மாயா கிருஷ்ணனும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியை ரிவ்யூ செய்து இருக்கிறார். இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் இரண்டு அணியாக ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதுவரை எல்லாரும் சமம் என்கிற ரீதியில் தான் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் நடத்தப்படுவார்கள். ஆனால் கடந்த சீசனில் ஆண் போட்டியாளரான பிரதீப்பால் எங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பெண் போட்டியாளர்களில் மாயா, பூர்ணிமா உட்பட ஒரு சிலர் கம்ப்ளைன்ட் செய்ததன் எதிரொலியாகவோ என்னவோ இந்த முறை வீட்டிற்கு நடுவே கோடு போட்டு போட்டியாளர்களை ஆண்கள், பெண்கள் என பிரித்து இருக்கிறார்கள்.
அதுபோல இந்த சீசனில் 24 மணி நேரத்திற்குள் சாச்சிகா தான் முதல் எலிமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார். அதுபோல இந்த வாரத்திலும் எலிமினேஷனுக்கான நாமினேஷன் செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் ஆறு போட்டியாளர்களின் பெயர் இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சி பற்றி மாயா பேசியிருக்கிறார், மாயை ஏற்கனவே கடந்த சீசனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர். சிலர் பாசிட்டிவ் கேரக்டரால் பிரபலம் அடைவார்கள், ஒரு சிலர் நெகட்டிவ் கேரக்டரால் பிரபலம் ஆவார்கள், அந்த வரிசையில் நெகட்டிவாக பிரபலமானவர்தான் மாயா.

மாயா பேசுகையில், இந்த சீசனில் ஆண் போட்டியாளர்கள் பெண் போட்டியாளர்களை சமைக்க வைக்க வேண்டும், அவர்களை பாத்திரம் கழுவ வைக்க வேண்டும் என்று பிளான் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்க்கும்போது கோபமாக இருக்கிறது. ஒரு ஆம்பள கூட இத்தனை வருஷமா பெண்கள் தானே அடிமையாக வீட்டு வேலை செஞ்சுட்டு இருக்கிறாங்க இதை நாம மாற்றுவோம் என்று சொல்லவில்லை.
ஆண்களின் நடவடிக்கையை பார்க்கும்போது கஷ்டமா இருக்கிறது. போட்டியாளர்களில் ஜாக்குலின் சிறப்பாக விளையாடி வருகிறார். அவர் நிஜத்தில் ஜாலியான நபர். அதுபோல ஆண்களில் முத்துக்குமார் உட்பட ஒரு சிலர் சுயநலமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய மனதிற்கு தெரிந்த வகையில் கானா பாடகர் ஜெஃப்ரி தான் இயல்பாக இருக்கிறார் என்று அந்த வீடியோவில் மாயா பேசியிருக்கிறார். இது இணையத்தில் அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications