Bigg Boss Raanav: பிக் பாஸில் நடந்த அசம்பாவிதம்.. ராணவை அடித்த ஜெஃப்ரி? மருத்துவமனையில் அனுமதி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் டிசம்பர் 17ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோவில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அதாவது இந்த நிகழ்ச்சியில் நடந்த டாஸ்க்கில் ஜெஃப்ரி அடித்து தள்ளியதில் கீழே விழுந்த ராணவ் அடிபட்டு வலியில் துடிக்கிறார். பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இதுவரைக்கும் நடக்காத பல சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அதிகமானோர் விஜய் டிவி பிரபலங்களாக தான் இருக்கின்றனர். அதே நேரத்தில் ஜெஃப்ரி, ராணவ் போன்ற ஒரு சிலர் மட்டும்தான் விஜய் டிவி பிரபலமாக இல்லாமல் வெளியில் இருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அதுபோல நேற்று இரவு நடந்த டாஸ்க்கில் ராணவிற்கு பெரிய அடி விழுந்திருக்கிறது. அதனால் அவரால் இனி மூன்று வாரத்திற்கு எந்த வேலையும் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே பொம்மை டாஸ்க் விளையாடும் போது ராணவ் கழுத்தில் ஜெஃப்ரி முழங்கையை வைத்து இடித்திருந்தார்.
இதனால் எனக்கு கழுத்து வலிக்கிறது என்று ராணவ் சொல்லி இருந்தார். அது குறித்து ஒரு பேட்டியில் அவருடைய அம்மா பேசும்போது கூட என்னுடைய மகன் எவ்வளவு வலி இருந்தாலும் அதை வெளியில் சொல்ல மாட்டான். அவனால் முடியாத பட்சத்தில் தான் எனக்கு வலிக்கிறது என்று வெளியே சொல்வான்.
அதுவும் எங்க வீட்டில் யாரிடமும் கூட அவன் தனக்கு வலிக்கிறது என்று சொல்ல மாட்டான். என்னிடம் மட்டும்தான் வலிக்கிறது அம்மா என்று சொல்லுவான். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளையாடும் போது ஜெஃப்ரி கழுத்தில் குத்தியது அவனுக்கு முதலில் பெரியதாக தெரியவில்லை, டாஸ்க் என்று விட்டுவிட்டான்.
பிறகு அவனால் வலி தாங்க முடியாத அளவிற்கு ஆன பிறகுதான் அவன் தன்னுடைய வலியை வெளியே சொல்லி இருக்கிறான் என்று என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. அதனால் என்னுடைய மகனின் கஷ்டத்தை பார்த்து என்னால் தூங்க முடியாமல் நான் ரொம்பவும் அவதிப்பட்டேன்.
அதோடு என்னுடைய மகனை பார்த்து பார்த்து நான் வருத்தப்பட்டதால் எனக்கு அன்று நெஞ்சுவலி வந்துவிட்டது என்று கூட பேசி இருந்தார். இந்த நிலையில் நேற்று நடந்த டாஸ்கில் ஜெஃப்ரி ராணவ் மீது விழுந்து உருண்டதில் அவருடைய கை ஜாயினிங் பகுதியில் வலி அதிகமாகி துடித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அப்போது கூட அன்ஷிதாவும் சௌந்தர்யாவும் இவன் நடிக்கிறான் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது ராணவ் வலியில் துடித்துக் கொண்டிருப்பதை பார்த்து வெளியே இருந்த அருண் மற்றும் விஷால் வந்து தூக்கிக்கொண்டு கன்ஃபெஷன் ரூமுக்கு கூட்டிக்கொண்டு போகின்றனர்.
அப்போது கூட ஜெஃப்ரி ரயான் கீழே விழுந்தது இந்தப் பக்கமா அவனுக்கு எப்படி இந்த பக்கம் கை வலிக்கும் என்று விதண்டாவிதமாக பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் பிக் பாஸ் ராணவ் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார் என்று சொல்கிறார். இது உள்ளிருப்பவர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
அதோடு தற்போது வெளியான தகவலின் படி ராணவ் மூன்று வாரங்களுக்கு எந்த வேலைகளையும் செய்ய முடியாது என்று கூறி இருப்பதால் அவர் இந்த நிகழ்ச்சியில் தொடர்வாரா? என்பது சந்தேகம் தான். இந்த நிகழ்ச்சியில் எப்படியாவது கலந்து கொள்ள வேண்டும் என்று நான்கு வருடங்களாக காத்திருந்த ராணவிற்கு கடைசியில் இப்படி ஒரு நிலைமையா? என்பது வருத்தமாக இருக்கிறது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.
அதோடு அதிகமான ரசிகர்கள் ராணவ் வலியில் துடித்துக் கொண்டிருக்கும் போது கூட உள்ளிருந்த போட்டியாளர்கள் அலட்சியமாக இருந்ததை பற்றி திட்டி வருகிறார்கள். இதற்கு முன்பு தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுபோல நடந்ததில்லை. ஆனால் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுபோல நடந்திருந்தது. அதில் இரண்டு போட்டியாளர்கள் சண்டை போட்டதில் ஒருவர் அடித்ததில் இன்னொரு போட்டியாளர் மருத்துவமனைக்கு போயிருந்தார்.
அடித்த போட்டியாளருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டிருந்தது அதுபோல இப்பொழுது ஜெஃப்ரிக்கு கொடுக்கப்படுமா? என்பதும் கேள்வியாக இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications