பிக் பாஸ்க்குள் நடந்தது இதுதான்! நீங்க நினைக்கிற மாதிரி இல்ல! எவிக்ஷன் பற்றி ரவீந்தர் பகிர்ந்த பகீர் தகவல்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த அடிப்படையில் நடைபெறுகிறது என்று பேட்டியில் விளக்கம் கொடுத்திருக்கிறார். அதோடு விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய விதம் குறித்தும் தன்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு ஜனவரி மாதத்தோடு முடிவுக்கு வந்தது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியை பற்றிய பேச்சு இணையத்தில் இருந்து கொண்டே இருக்கிறது. இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தொடர்ச்சியாக பேன்ஸ் மீட்டிங் நடத்தி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதல் எவிக்ஷன்: அதே வரிசையில் தயாரிப்பாளரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் போட்டியாளருமான ரவீந்தர் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி பேசி இருக்கிறார். ரவீந்தர் ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் இருந்து ஏழாவது சீசன் வரைக்கும் ரிவ்யூ செய்திருக்கிறார். ஆனால் பிக்பாஸ் எட்டாவது சீசனில் முதல் வாரத்தில் முதல் போட்டியாளராக வெளியேற்றப்பட்டார். இது பெரிய அளவில் பேசப்பட்டது.
ரவீந்தர் பேட்டி: ரவீந்தர் இன்னும் கொஞ்சம் சில வாரங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தால் நிகழ்ச்சிக்கு அதிக கன்டென்ட் கிடைத்து இருக்கும் என்பது பலருடைய எதிர்பார்ப்பாகவும் கருத்தாகவும் இருந்தது. இந்த நிலையில் இது பற்றிய ரவீந்தர் பேசுகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இருக்க வேண்டும் யார் வெளியே அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்வது பிக் பாஸ் தான்.

மக்கள் ஓட்டு : என்னதான் மக்கள் ஓட்டு போட்டாலும் அந்த வாரத்தில் உள்ளே இவர்கள் இருக்க வேண்டும் என்று இறுதியில் பிக் பாஸ் குழுவினர்கள் தான் முடிவெடுக்கிறார்கள் இது எல்லாருக்குமே தெரிந்திருக்கும். தீபாவளி வாரத்தில் நோ எவிக்ஷன் என்று சொல்லியிருந்தார்கள். தீபாவளி என்ன திடீரென்று வந்ததா? ஒரு வாரத்தில் தீபாவளி இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே? அப்போ எதற்கு அந்த வாரம் எவிக்ஷனுக்கான நாமினேஷன் நடத்தணும்? அதற்காக மக்களை ஏன் ஓட்டு போட சொல்லணும்?
பிக் பாஸ் அதிரடி முடிவு : மக்கள் ஓட்டு போட்டு தங்களுக்கு பிடிக்காதவர்களை வெளியேற்றலாம் என்று நினைத்திருக்கும் போது இவர்கள் திடீரென்று தீபாவளி வாரம் அதனால் நோ எவிக்ஷன் என்று சொல்கிறார்கள். இதிலிருந்து மக்கள் புரிந்து கொள்ளலாம் என்ன தான் மக்கள் ஓட்டு போட்டாலும் முடிவு பிக் பாஸ் அணியினர் எடுப்பது தான்.
ஏமாற்றம்: நான் முதல் வாரத்தில் வெளியேற்றப்பட்டபோது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. என்னுடைய விளையாட்டை ஆரம்பிக்கல அதுக்குள்ள அனுப்புறாங்களே.. சரி மக்கள் விரும்பலையோ என்று நினைத்தேன். ஆனால் அதிகமான மக்கள் என்னை உள்ளே இருக்க வைக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள் ஆனால் அங்கு நடந்தது தான் வேறாக இருந்தது.
விஜய் சேதுபதியின் பாரபட்சம்: அதுபோல இதுவரைக்கும் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த போட்டியாளரும் சரியாக விளையாடவில்லை என்றால் கூட தொகுப்பாளர் அவருக்கு சரியாக விளையாடவில்லை என்ற மனநிலை வராத வகையிலே பேசுவார்கள். ஆனால் இந்த சீசனில் மட்டும் விஜய் சேதுபதி அதை செய்யவில்லை.

ரவீந்தர் குற்றச்சாட்டு: உள்ளிருக்கும் போட்டியாளர்களில் சிலரால் சரியாக விளையாட முடியவில்லை என்றால் நீ எதற்கும் லாயக்கு இல்லை என்பது போலவே அவர்களுடைய மனதில் சிந்தனையை வர வைப்பது போல பல இடங்களில் பேசியிருக்கிறார். அதுபோல விஜய் சேதுபதி போட்டியாளர்கள் சிலரிடம் பார்சியாலிட்டி காட்டி இருந்தார் என்று அந்த பேட்டியில் ரவீந்தர் பேசியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications