இதை ஏற்றுக்கொள்ள முடியல! பிக் பாஸிலிருந்து வெளியே வந்த ரியா வெளியிட்ட வீடியோ.. பகீர் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சியில் ஆறாவது வாரத்தில் எலிமினேஷன் ஆன ரியா முதல்முறையாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இந்த வீடியோவில் தனக்கு எதற்காக ரசிகர்கள் வாக்கு செலுத்தவில்லை என்று மனவேதனையாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக அறிமுகமானவர்தான் ரியா தியாகராஜன். இவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து இரண்டு வாரத்திலேயே வெளியேற்றப்பட்டு விட்டார். நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற கனவோடு சென்று ரியாவிற்கு இது பெருத்த ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அந்த ஏமாற்றத்தை ஒரு வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டு இருக்கிறார்

bigg boss tamil 8 bigg boss 8 8

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் இருந்தனர். அதற்குப் பிறகு 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் அறிமுகமானார்கள். இவர்களில் நான்கு போட்டியாளர்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டு இருந்தனர்.

ஐந்தாவதாக ரியா வெளியேற்றப்பட்டு இருந்தார். ரியா பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில சுவாரசியமான சம்பவங்களையும் செய்திருந்தார். சில நேரங்களில் பிரச்சனைகளில் வாண்டடாக போய் தலையை நுழைத்து அதில் பல்பு வாங்கிய சம்பவமும் உண்டு. பொதுவாக வைல்ட் கார்டு போட்டியாளர்களை உள்ளே ஏற்கனவே இருக்கும் போட்டியாளர்கள் அவ்வளவு சீக்கிரமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்‌.

அதுபோல் தான் ரியாவின் செயல்கள் குறித்து கூட உள்ளிருக்கும் போட்டியாளர்கள் அதிகமாக விமர்சித்து வந்தனர். ஆனால் இரண்டு வாரத்திற்குள் இவர் வெளியேற்றப்பட்டது உள்ளிருக்கும் போட்டியாளர்களையும் பீல் பண்ண வைத்தது. இந்த நிலையில் வெளியே வந்த ரியா வெளியிட்ட வீடியோவில் எமோஷனலாக பேசி இருக்கிறார்.

அதில் அவர் இந்த வீடியோ பதிவு பண்ணும் போது நான் ரொம்ப மென்டலா டவுன் ஆகி இருக்கிறேன். இந்த வாய்ப்பு கிடைக்கும்போது எனக்கு பலரும் சொன்ன விஷயம் என்னவென்றால் நீ பிஆர் செட் பண்ணு. நீ இப்படி ஒர்க் பண்ணு, அப்படி ஒர்க் பண்ணு என்று நிறைய அட்வைஸ் செய்தாங்க.

ஆனாலும் நான் எனக்கு பிஆர் ஒன்றும் தேவையில்லை. நான் உள்ளே போய் என்னால் என்ன பண்ண முடியுமோ அதை நிச்சயம் பண்ணுவேன். அதை பார்த்து மக்களுக்கு என்ன தோன்றுகிறதோ அவங்க சின்னதா சப்போர்ட் பண்ணி இருந்தாலும் எனக்கு போதும் என்று தான் நினைத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றேன். அங்கே என்னால எவ்வளவு முடியுமோ அவ்வளவு விஷயங்களும் கேட்க வேண்டிய இடத்தில் நியாயமானதாக நடந்து கொண்டேன்.

ஆனாலும் எனக்கு ஒரே ஒரு விஷயம் தான் மண்டைக்குள்ள ஓடிக்கிட்டே இருக்கு. எதற்காக மக்கள் என்னை ரிஜெக்ட் பண்ணினார்கள் என்று தான்... ஒருவேளை நான் ஏற்கனவே பிரபலம் இல்லை அதனால் அவர்களுக்கு என்னைப் பற்றி யார் என்று தெரியாததால் எனக்கு சப்போர்ட் செய்யவில்லையா? என்றும் எனக்கு வேதனையாக இருக்கிறது என அந்த வீடியோவில் ரியா எமோஷனலாக பேசியிருக்கிறார். இவருக்கு ரசிகர்கள் பலரும் ஆறுதல் கூறி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+