தாத்தாகிட்ட பேச கடைசிவரை வாய்ப்பு கிடைக்கல.. இப்போ வந்தா இதை மட்டும் கேட்பேன்! கண் கலங்கிய சிவகுமார்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து சமீபத்தில் வெளியே வந்த நடிகர் சிவகுமார் தன்னுடைய தாத்தா நடிகர் சிவாஜியிடம் தான் கடைசிவரை பேசவே இல்லை, ஆனால் அவர் இப்போது என்னுடைய முன்பு வந்தால் இதை மட்டும் கேட்பேன் என்று சில வார்த்தைகளை சொல்லியிருக்கிறார்.
நடிகர் சிவகுமார் நடிகர் சிவாஜியின் பேரன் தான். நடிகர் சிவாஜியின் மகன் ராம்குமார்க்கும் மீனாட்சி என்பவருக்கும் பிறந்தவர்தான் சிவகுமார். மீனாட்சி என்பவர் நடிகை ஸ்ரீபிரியாவின் சகோதரி தான். ராம்குமாருக்கு ஏற்கனவே கண்ணம்மாள் என்ற மனைவியும் இருந்தார். இந்த ஜோடிக்கு பிறந்தது தான் நடிகர் துஷ்யந்த் மற்றும் தர்ஷன்.

ராம்குமார் தன்னுடைய மனைவி மீனாட்சி மற்றும் மகன் சிவக்குமார் என்று அறிவித்துவிட்டாலும் சிவாஜியின் குடும்பத்தினர் மீனாட்சியையும் அவருடைய மகன் சிவகுமாரையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
அதுபோல தன்னை வளர்த்தது தன்னுடைய பெரியம்மா தான் என்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்கலங்க சிவகுமார் பேசியிருந்தார். அதுபோல தன்னுடைய அம்மாவின் கடைசி காலகட்டத்தில் கூட அவருடைய அப்பாவின் குடும்பத்தினர் எந்த உதவியும் செய்யவில்லை என்றும் பேசி இருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் சிவகுமார் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட போது நான் கடைசி வரைக்கும் சிவாஜியிடம் பேசியதே இல்லை என்று கூறி இருக்கிறார். அதோடு நான் அவருடைய பெரிய ரசிகர் இப்ப கூட அவர் என் கண் முன்பு வந்தால் நான் உங்களுடைய பேரன் என்று எந்த இடத்திலும் உரிமை கொண்டாடவில்லை. ஆனால் உங்களுடைய ரசிகர் என்று உரிமையை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன்.

நான் உங்களுடைய ரசிகராக மட்டும்தான் இருக்க விரும்புகிறேன். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் உங்களைப் போலவே என்னுடைய நடிப்பு திறமையால் முன்னேறி வரவேண்டும் என்று நினைக்கிறேன். எவ்வளவு அடி வாங்கி கீழே விழுந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் நான் மேலே வந்து கொண்டு தான் இருக்கிறேன்.
எனக்கு என்னதான் திறமை இருந்தாலும் நான் உங்கள் குடும்பத்தின் அடையாளம் என்று வரும்போது என்னுடைய திறமைகள் எல்லாமே அடிபடுகிறது, அதுவெல்லாம் எனக்கு தேவையில்லை. என்னுடைய திறமையை வைத்து நான் முன்னேறி உங்கள் முன்பு வருவேன் என்று கையெடுத்து கும்பிட்டு சொல்ல வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என்று அந்த பேட்டியில் சிவகுமார் உருக்கமாக பேசியிருக்கிறார்.

அதுபோல சிவகுமார் நடிகையும் பிக் பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் போட்டியாளருமான சுஜா வருணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிக் பாஸ் தமிழ் சீசன் எட்டாவது நிகழ்ச்சியில் சிவகுமார் கலந்து கொள்ளும்போது இவரால் நிகழ்ச்சி சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பெரிய அளவில் நிகழ்ச்சியில் ஸ்பேஸ் கிடைத்தது போல தெரியவில்லை.
ஆனாலும் தனக்கு வாய்ப்பு கிடைத்த இடங்களில் எல்லாம் சிவக்குமார் ஏதாவது செய்து கொண்டே இருந்தார். ஆனாலும் அவர் சில வாரங்களிலேயே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அது அவருக்கு மட்டும் அல்ல அவருடைய ரசிகர்களுக்கும் ஏமாற்றம்தான்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications