3 வாரத்தில் கண்ணீரோடு பிக் பாஸிலிருந்து வெளியேறிய வர்ஷினி.. வாங்கிய சம்பளம் இவ்வளவா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் இருந்து ஆறாவது போட்டியாளராக வர்ஷினி நேற்று வெளியேற்றப்பட்டார். அவர் வாங்கிய சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8வது நிகழ்ச்சி கடந்த அக்டோபர் ஆறாம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதிகமான விஜய் டிவி பிரபலங்களை இந்த சீசனில் கலந்து கொண்டதால் நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் பெரிய அளவில் போட்டியாளர்கள் கண்டண்ட் கொடுக்கவில்லை.

இதனாலேயே சில வாரங்களில் 6 வைல்ட் கார்டு போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டனர். அதில் பலர் புது முகங்களாக இருந்தனர். இவர்கள் வந்த பிறகு நிகழ்ச்சி பெரிய அளவில் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் அதுவும் மக்கள் மத்தியில் பிரபலமாகவில்லை. அதற்கு முக்கிய காரணம் விஜய் டிவி கேபிள் டிவியில் கனெக்ட் ஆகாதது கூட இருக்கலாம்.
அதுபோல இணையத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் அதிகமான ரசிகர்கள் தங்களுக்கு சரியான கண்டன்ட் கிடைக்கவில்லை நிகழ்ச்சியில் சுவாரசியமாக செய்ய வேண்டும் என்று நினைக்காமல் அடிக்கடி சண்டைகளை போட்டியாளர்கள் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறி வந்ததால், பிக் பாஸ் கூட பல்வேறு டாஸ்க் வைத்து போட்டியாளர்களுக்கு மேலும் பிரச்சினை ஏற்படுத்தும் வகையில் முயற்சி செய்தனர்.
ஆனால் அங்கு பிராங் செய்து கடைசியில் போட்டியாளர்கள் ஏமாற்றி விடுகிறார்கள். இப்படியான நிலையில் முதல் எலிமினேஷனாக ரவீந்தர் வெளியேற்றப்பட்டார். அவரைத் தொடர்ந்து அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா என்று ஐந்து போட்டியாளர்கள் வெளியேறி இருந்தனர். அடுத்ததாக ஆறாவது போட்டியாளராக நேற்று யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு வர்ஷினி வெளியேற்றப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான அன்அபிசியல் ஓட்டிங் லிஸ்டில் சாச்சிகா தான் கடைசி இடத்தில் இருந்தார். ஆனால் திடீரென வர்ஷினி வெளியேற்றப்பட்டது இணையத்தில் அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட்டாக வந்து மூன்று வாரங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த வர்ஷினி வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
அதன்படி வர்ஷினிக்கு ஒரு நாளைக்கு 12000 சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. ஒரு நாளைக்கு 12000 என்கிற கணக்கில் மூன்று வாரங்களுக்கு இரண்டு லட்சத்து 52 ஆயிரம் சம்பளம் பெற்றுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதில் டேக்ஸ் எல்லாம் போக இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து தான் இந்த பணம் வர்ஷினியின் கைக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications