பிக் பாஸ்க்குள் அரசியல் நடக்குது! நறுக்குன்னு விஜய் சேதுபதி கேட்ட கேள்வி.. சிக்கிய போட்டியாளர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8-வது நிகழ்ச்சியில் டிசம்பர் 12ஆம் தேதிக்கான எபிசோடின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் அரசியலை விஜய் சேதுபதி அம்பலப்படுத்தி இருக்கிறார். விஜய் சேதுபதி சொன்ன வார்த்தைகளை கேட்டு தலைகுனிந்து நிற்கிறார்.

இன்று சனிக்கிழமை எபிசோடு என்பதால் பிக் பாஸ் ரசிகர்கள் இன்றைய ப்ரோமோவை ஆவலோடு எதிர்பார்த்து இருந்தனர். அதற்கு சரியான தீனியை ஒவ்வொரு ப்ரோமோவும் போட்டுக் கொண்டிருக்கிறது. இன்று என்ன நடக்கப்போகிறதோ என்று எதிர்பார்க்கும் ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி செம கன்டென்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

இந்த சீசன் தொடங்கப்பட்ட போது விஜய் சேதுபதி எப்படி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்று எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. ஆனால் விஜய் சேதுபதி தன்னுடைய தனித்துவத்தால் வித்தியாசமாக தொகுத்து வழங்கி வந்தார். இரண்டு வாரம் அது பெரிய அளவில் பாராட்டப்பட்டது. ஆனால் அதை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்த போட்டியாளர்களை பேசவிடாமல் பேசுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்து வந்தது.

ஆனால் கடந்த வாரத்தில் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை சரியாக கொண்டு போய் இருந்தார். இதனால் பெரிய அளவில் அவருக்கு பாராட்டு கிடைத்தது. அதேபோல இந்த வாரமும் ரசிகர்கள் எதிர்பார்த்ததை செய்திருக்கிறார். இந்த வாரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் தொழிலாளர்கள், மேனேஜர் என்ற இரண்டு அணியாக போட்டியாளர்கள் விளையாடியிருந்தனர்.

இதுவரைக்கும் போட்டியாளர்கள் எல்லா டாஸ்க்குகளையும் கத்தி கத்தி சண்டை போட்டு வீண் பண்ணியது போல இந்த டாஸ்கிலும் அருண், ஜாக்குலின், சௌந்தர்யா போன்றோர் நடந்து கொண்டது டாஸ்க்கை கெடுத்து விட்டது. அதேபோல தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் இந்த வார டாஸ்க்கில் யார் நிர்வாகத்தை சிறப்பாக செய்தது என்று விஜய் சேதுபதி கேட்க, அதற்கு ஜாக்லின் எழுந்து மஞ்சரி மற்றும் தீபக் என்று சொல்கிறார்.

television bigg boss tamil 8 bigg boss 8 8

அடுத்ததாக சௌந்தர்யா மற்றும் விஜே விஷால் இருவரும் தீபக் பெயரை சொல்கின்றனர். அடுத்ததாக அருணிடம் நீங்க ஒருத்தங்க டிசைட் பண்ணி இருப்பீங்கல்ல பெஸ்ட் மேனேஜர் என்று அது யாரு என்று கேட்க, அதற்கு அருண் ஜெஃப்ரி என்று சொல்கிறார். அதற்கு விஜய் சேதுபதி நீங்க என்ன அடிப்படையில் அவருக்கு பெஸ்ட் என்று அவார்ட் கொடுத்தீங்க என்று கேட்கிறார்.

அதோடு ஜெஃப்ரியிடம் யாருக்கு அதிகமாக ஓட்டு கிடைத்தது என்று கேட்க தீபக் சார் மற்றும் மஞ்சரி என்று ஜெஃப்ரி சொல்கிறார். அதற்கு விஜய் சேதுபதி உங்களுக்கு கிடைத்த பாஸ்க்கு நீங்க தகுதியானவரா? என்று சொல்லுங்க? அவங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணுகிறோம் என்று உன்னை வீக் கண்டஸ்டண்டா காட்டி இருக்காங்க என்று சொன்னதும் மஞ்சரி கைதட்டுகிறார்.

அரசியல் நம்மை சுத்தி நடக்கும், நம்மை வச்சும் நடக்கும் என்று விஜய் சேதுபதி சொல்ல ஜாக்குலின் கைதட்டி கொண்டாடுகிறார். ஏற்கனவே இந்த வாரத்தில் சத்யா மற்றும் ஜெஃப்ரி பெரிய அளவில் எந்த விளையாட்டுகளிலும் ஈடுபடவில்லை. அவர்கள் எந்த இடத்திலுமே வெளியே தெரியவில்லை.

television bigg boss tamil 8 bigg boss 8 8

ஆனால் சிறப்பாக விளையாடியவர்களுக்கு பாஸ் கொடுக்காமல் ஜெஃப்ரிக்கு கொடுத்தது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதையே ப்ரோமோவில் விஜய் சேதுபதி கேள்வி கேட்டு இருப்பது பெரிய அளவில் பாராட்டப்படுகிறது. இதனால் இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் எகிறி இருக்கிறது. காரணம் இன்று வெளியான மூன்று ப்ரோமோக்களும் தீயாக இருக்கிறது.

அதுபோல உள்ளிருக்கும் போட்டியாளர்கள் சிலர் சோகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். இதனால் விஜய் சேதுபதி இன்று எல்லாரையும் கிழித்துவிட்டார் என்று தெரிகிறது. அதோடு இந்த சீசனில் இதுவரைக்கும் இல்லாத வகையில் சனிக்கிழமை ஒரு எவிக்ஷன் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறார். அது சத்யா தான் என்று ரசிகர்களுக்கு தெரிந்தாலும் உள்ளிருக்கும் போட்டியாளர்களுக்கு தெரியாததால் அனைவரும் கலவரத்தில் இருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+