சட்டையை கழட்டிய திவாகரை கண்டித்த கனி! நீங்க FJவை கட்டி பிடிக்கிறீங்க, கொதித்த வாட்டர் மெலன் ஸ்டார் வெளியேற்றம்?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி, சண்டைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், 24 மணி நேர லைவ்வில் இன்று நடந்த ஒரு சம்பவம், பிக் பாஸ் வீட்டில் பெரும் கலவரத்தைத் தூண்டிவிட்டது. கேமரா முன்பு ரீல்ஸ் மோகம் கொண்ட ஒரு திவாகரின் வரம்பு மீறியச் செயலும், அதைத் தட்டிக் கேட்ட பெண் போட்டியாளரிடம் அவர் வன்மத்துடன் பேசியப் பேச்சும் இணையத்தில் கடும் விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.

சட்டையை கழட்டி ரீல்ஸ் மோகம்
இன்று போட்டியாளர் திவாகர், கமல்ஹாசன் நடித்த 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' படத்தில் வரும் காட்சிகளைக் கிரியேட் செய்யப் போவதாகக் கூறி, சட்டையைக் கழட்டிக் கொண்டு கேமரா முன்பு நிற்கிறார். அப்போது இந்த வாரத் தலைவராக இருக்கும் பிரவீன், டாஸ்க்கிற்காக எல்லோரும் உடையைச் சரியாகப் போட்டுத் தயாராக இருக்கிறார்களா என்று செக் பண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தார். பிரவீன், திவாகரிடம் "சட்டையைப் போட்டு ரெடியாகி கிளம்புங்க" என்று சொல்ல, திவாகரோ முடியாது என்று சொல்லி ரீல்ஸ் செய்வதிலேயே குறியாக இருந்தார்.
பிரவீனை தள்ளிய திவாகர்
இதனால் ஆத்திரமடைந்த பிரவீன், கேமராவை மறைத்துக் கொண்டு நிற்க, திவாகர் கோபமாகிப் பிரவீனை பிடித்துத் தள்ளிவிட்டார். இதில் பிரவீன் கீழே விழுந்தாரர். திவாகர், பிரவீனைத் தள்ளிவிட்டச் சம்பவம் நடந்தபோதுதான், கனியின் எதிர்ப்பு தொடங்கியது.
நடிகை கனி உடனடியாகக் களமிறங்கி, "நீங்க ரீல்ஸ் பண்ணுங்க, அதுல பிரச்சனை இல்லை. ஆனா, நீங்க எப்பவுமே சட்டையைக் கழட்டிப் போட்டுட்டு நின்னு ரீல்ஸ் பண்ணுறீங்க. இதை வெளியில் பலர் பார்ப்பாங்க. இது அநாகரிகமாக இருக்கிறது" என்று ஒரு வார்த்தை மட்டும் கூறினார்.
திவாகரின் வன்மம் நிறைந்த பதில்
கனியின் இந்தக் கருத்துக்குத் திவாகர் மிகவும் தரக்குறைவாகப் பதிலளித்தார். "நீங்கதான் FJ-யை கட்டிப்பிடிச்சுப் பேசுறீங்களே... அதுவும் பார்க்க அநாகரிகமாக இருக்கு" என்று கூறி, கனியை அசிங்கப்படுத்துவது போலப் பேசினார். உடனே கனி அழுது கொண்டு தனியாக சென்று விட்டார்.
திவாகர் மீதான குற்றச்சாட்டுகள்
திவாகர் இவ்வாறாகச் செயல்படுவது இது முதல் முறையல்ல. சண்டைக் கண்டென்ட்டுக்காகவே அவர் வரம்பு மீறிச் செயல்படுவதாகப் போட்டியாளர்கள் மத்தியில் ஏற்கெனவேப் புகார் உள்ளது. திவாகர் செய்யும் கோமாளித்தனத்தை யாராவது குறை சொன்னாலோ அல்லது "இது தவறு" என்று சுட்டிக்காட்டினாலோ, உடனே அவர் எதிரே இருப்பவர் யார் என்னவென்று பார்க்காமல், அவர்கள் மீது பெரிய பழியைத் தூக்கிப் போடுகிறார். அல்லது அவர்களை அசிங்கப்படுத்துவது போலப் பேசுகிறார். திவாகரின் உள் மனதிற்குள் இருக்கும் வன்மம் எல்லாம் இதுபோன்றச் சூழல்களில்தான் வெடிக்கிறது.
சினிமாப் பிரபலம் இல்லாத ஒரு போட்டியாளராக உள்ளே வந்த திவாகர், தனதுக் கவன ஈர்ப்புச் செயல்களுக்காகவும், வரம்பு மீறியப் பேச்சுகளுக்காகவும் தற்போது கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறார். இவரது இதுபோன்றச் செயல்பாடுகள் இந்த வாரம் அவருக்குப் பெரிய மைனஸை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. இவர் இப்படித்தான் ஆணவமாக பேசுவதற்கு இவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்ப வேண்டும் என்று பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications