Bigg Boss: பிக் பாஸில் திவ்யாவிடம் அத்துமீறும் தர்பூசணி திவாகர்.. நேற்று நடந்த சம்பவம்! வலுக்கும் கண்டனம்
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் நேற்று நடந்த சம்பவம் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. அதாவது திவாகர் ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது உள்ளிருக்கும் பெண்களிடம் வலிந்து கொண்டிருக்கிறார், தங்கச்சி என்று சொல்லிக்கொண்டு கூட பிறகு காதல் கண்டென்ட் பண்ண போகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்தது. இப்போது நேற்று திவ்யா போட்டோவை வைத்துக்கொண்டு திவாகர் போட்ட நாடகத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து பஞ்சாயத்துக்கு பஞ்சம் இல்லாமல் தான் இருக்கிறது. நாளையுடன் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வர இருக்கிறது. ஆனாலும் இந்த நிகழ்ச்சியில் சண்டைகள் மட்டும்தான் நிறைந்து இருக்கிறது. எதற்கு சண்டை போடுகிறார்கள் என்று உள்ளிருப்பவர்களுக்கும் தெரியாது, அது இதை பார்க்கும் ரசிகர்களுக்கும் புரியப்போவதில்லை அந்த அளவிற்கு தான் இவர்களுடைய சண்டை போய்கொண்டு இருக்கிறது.

அதிலும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் சோசியல் மீடியா பிரபலங்கள் அதிகமானோர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களை மேலும் பிரபலமாக்கி கொள்ள வேண்டும் என்றால் இங்கே சண்டை போட்டால் தான் நடக்கும் என்று புரிந்து கொண்டார்கள் போல. எதற்கெடுத்தாலும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் நான்தான் ஹீரோ என்று நிரூபிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
அதிலும் தர்பூசணி திவாகரை சொல்லவே வேண்டாம். இவர் ரீல் பண்ணுகிறேன் என்று கேமரா முன்பு ஆடிக் கொண்டு இருப்பார். அது போகாத குறைக்கு உள்ளிருக்கும் போட்டியாளர்களிடம் ஏதாவது வம்பு இழுப்பது, அவர்கள் திருப்பி பேசினால் ட்ரிக்கர் ஆகி அவர்களை மட்டம் தட்டுவது அல்லது தரக்குறைவாக பேசுவது போன்ற வேலையை செய்து கொண்டிருக்கிறார். அதனாலேயே அவரை சீக்கிரமாக வெளியேற்றி இருந்தனர். ஆனால் இப்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் அனுப்பப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் திவ்யா பின்னாடி சுற்றிக்கொண்டு காதல் கண்டன்ட் கொடுக்க ட்ரை பண்ணி கொண்டு இருக்கிறார், ஆனால் திவ்யா கண்டுகொள்ளவில்லை. நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் நான்கு பைனல் போட்டியாளர்களின் மெமரிஸ் உள்ள புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது.
அதில் திவ்யா தலைவராக இருக்கும்போது எடுத்த புகைப்படம் ஒன்று இருந்தது. அதை திவாகர் எடுத்து தன்னுடைய பேக்குக்குள் வைத்துக்கொண்டு, திவ்யாவை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன். அதனால அவளோட போட்டோ எனக்கு வேண்டும் என்று கேமரா முன்பு சொல்ல, அப்போது அங்கிருந்த எல்லோரும் அதை எதிர்க்காமலேயே அவரிடம் கிண்டல் செய்வது போலவே பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த திவ்யா கடுப்பாகி திவாகரிடமிருந்த போட்டோவை பிடிங்கி இருந்தார். பிறகு பிக் பாஸ் இங்கிருந்த போட்டோவை யாரும் எடுக்க கூடாது என்று சொல்கிறார். அப்போது கூட திவாகர் எனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைத்தேன், அதேபோல நடந்துட்டு என்று நெளிந்து கொண்டே சொல்லி கொண்டிருக்கிறார். இதைத்தான் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
ஒரு பொண்ணுக்கு பிடிக்கவில்லை என்றாலும் இவ்வாறு தொடர்ந்து அந்த பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொண்டே இருக்கிறார். இதை யாரும் கண்டிக்க மாட்டாங்களா என்று குரல் எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சரவணன் பஸ்ஸில் போகும்போது பெண்களை இடிப்போம் என்று சொன்னதற்காக அவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றினார்கள். ஆனால் இப்போ திவாகர் செய்வதற்கு மட்டும் ஏன் கண்டனம் இல்லை என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது.
-
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க












Click it and Unblock the Notifications