Divakar: அடுத்த விஜயகாந்த் நான் தான்.. விஜயை விட பெரிய ஆளு.. வாட்டர் மெலன் திவாகர் சொன்னதை கேளுங்க
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமான வாட்டர் மெலன் திவாகர், சமீபத்திய பேட்டியில் தனது சினிமா கனவுகள் குறித்து பேசிய கருத்துகள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
அந்த பேட்டியில் திவாகர், "நடிப்பு என்றால் சிவாஜி கணேசனுக்கு அடுத்தபடியாக கமல்ஹாசன். அதற்கு அடுத்து நான் தான். ஹீரோவாக அனைத்து திறமைகளும் எனக்கிருக்கிறது. என்னை பார்த்து சிலர் பயந்து சூழ்ச்சிகள் செய்கிறார்கள்" என கூறியிருந்தார்.

வாட்டர் மெலன் திவாகர் பேச்சு
மேலும், "விஜய் சேதுபதி, விஜயகாந்த், சரத்குமார் எல்லாரும் பாடியான ஆட்கள். அவர்களெல்லாம் தெற்கிலிருந்து வந்தவர்கள். அவர்களைப் போல மாஸ் ஹீரோவாக வந்து மக்கள் மனசுல இடம் பிடிக்க வேண்டும். மதுரையிலிருந்து விஜயகாந்துக்கு பிறகு பெரிய என்ட்ரி இல்லை. அந்த இடத்தை நிரப்ப நான் வந்திருக்கிறேன்" என்றும் தன்னம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் வைரலான பேட்டி
இந்த பேட்டி வெளியான சில மணி நேரங்களிலேயே, திவாகரின் பேச்சை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக "சிவாஜி - கமல் - திவாகர்" என்ற வரிசை அமைப்பை பலரும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டுள்ளனர்.
ஒரு நெட்டிசன், "சிவாஜி, கமல் இடையில் எத்தனை ஜாம்பவான்கள் இருக்கிறார்கள்... அவங்கள எல்லாம் தாண்டி நேரா நீங்களா?" என்று கமெண்ட் செய்துள்ளார்.
மற்றொருவர், "பாடி லாங்குவேஜ் இருந்தாலே மாஸ் ஹீரோவா ஆகிட முடியாது. அதுக்கு நடிப்பும், படங்களும் ஹிட் ஆகணும்" என்று விமர்சித்துள்ளார்.
அடுத்த விஜயகாந்த்
"விஜயகாந்த் விட்ட இடத்தை நான் நிரப்ப வருகிறேன்", "நாளைக்கு நடிகர் சங்க தலைவர் கூட ஆகலாம்" என திவாகர் கூறிய கருத்துகளும் நெட்டிசன்கள் மத்தியில் கலகலப்பான விமர்சனங்களை உருவாக்கியுள்ளது.
ஒரு நெட்டிசன், "விஜயகாந்த் இடத்தை நிரப்புவதற்கு முன், இரண்டு மூன்று படமாவது ரிலீஸ் ஆகட்டும்" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "நடிகர் சங்க தலைவராக ஆகுறதுக்கு முதல்ல நடிகராக ஒரு இடம் பிடிக்கணும்" என்று கிண்டலுடன் குறிப்பிட்டுள்ளார்.
விஜயை விட பெரிய ஆளு
"விஜய், சிவகார்த்திகேயன் அளவுக்கு எனக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்" என்ற திவாகரின் பேச்சை பலரும் ஏற்றுக்கொள்ளாமல் விமர்சித்து வருகின்றனர். "பிக்பாஸ் மூலம் கிடைத்த பிரபலத்தையும், சினிமா ரசிகர் பட்டாளத்தையும் ஒப்பிட முடியாது"என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
"விஜய், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உருவானது பல வருட உழைப்பால். அதை ஒரு ரியாலிட்டி ஷோவோட ஒப்பிடுவது கொஞ்சம் ஓவர்" என்றும் மற்றொரு கருத்து வைரலாகியுள்ளது.
தன்னம்பிக்கையா? - திமிரா?
திவாகரின் பேச்சு சிலருக்கு "அதிக தன்னம்பிக்கை" போலவும், சிலருக்கு "திமிர்" போலவும் தோன்றியதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். "கனவு காண்றது தவறு இல்லை. ஆனால் தன்னை லெஜெண்ட்களோடு ஒப்பிட்டு பேசுறது கொஞ்சம் ஓவரா இருக்கு"
என்று ஒருவர் எழுத, "சினிமாவுக்கு வர்ற எல்லாருக்கும் கனவு இருக்கணும். ஆனா அது பேசுற அளவுக்கு செயலிலும் காட்டணும்" என்று மற்றொருவர் பதிவிட்டுள்ளார்.
அதே நேரத்தில், திவாகரின் தன்னம்பிக்கையை பாராட்டும் சிலரும் இருக்கிறார்கள். "கனவு பெரியதாக இருந்தால் தான் ஒரு நாள் எதாவது ஆகும். அவன் பேசுறது ஓவரா இருந்தாலும் முயற்சி பண்ணட்டும்" என்று ஒரு ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.
நெட்டிசன்களின் ரியாக்ஷன்
மொத்தத்தில், வாட்டர் மெலன் திவாகரின் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் கலாய்ப்புக்கும், விவாதத்துக்கும் இடம் கொடுத்துள்ளது. "பெரிய கனவு காண்றது தவறு இல்லை, ஆனால் அதற்கு முன் நடிப்பிலும் படங்களிலும் தன்னை நிரூபிக்க வேண்டும்" என்பதே பெரும்பாலான நெட்டிசன்களின் பொதுவான கருத்தாக காணப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications