பிக் பாஸ் 9 ஃபினாலே சர்ச்சை: ரெட் கார்டு போச்சு.. கம்ருதீனை கட்டி அணைத்த விஜய் சேதுபதி! ரசிகர்கள் கமெண்ட்ஸ் பாருங்க
சென்னை: "ரெட் கார்டு என்றால் அவுட் தானே... இல்ல இது VAR ரிவ்யூ எடுத்து மீண்டும் கிரவுண்டுக்குள் வர்ற மாதிரியா?" - பிக் பாஸ் தமிழ் சீசன் 9 ஃபினாலேவை பார்த்த ரசிகர்களின் முதல் கேள்வி இதுதான். காரணம், ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீனை மீண்டும் ஃபினாலே மேடையில் விஜய் சேதுபதி நிற்க வைத்து பேச வைத்த அந்த காட்சி.
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் பினாலேவில் கூட அதிகமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது, "அந்த நாள் ரெட் கார்டு காட்டினாங்க. 'இதோட முடிஞ்சுது'ன்னு நாங்க நிம்மதியா தூங்கிட்டோம். இப்ப ஃபினாலே மேடையில் 'Welcome Back Kamrudeen'னு பேனர் போட்டு நிறுத்துறாங்க. அப்போ ரெட் கார்டு எதுக்கு? லேசா பயமுறுத்தி அனுப்புற டெம்பரரி அவுட்டா?" என்று சில ரசிகர்கள் கமெண்ட்ஸ் கொடுத்திருக்கின்றனர்.

அதுபோல , இதுவரை பிக் பாஸ் வரலாற்றிலேயே ரெட் கார்டு வாங்கினா அது கடைசி தீர்ப்பு. ஆனால் சீசன் 9-ல் மட்டும் அந்த விதி 'டிஆர்பி அப்டேட்' வாங்கியிருக்கிறது போல. "ஃபினாலே டிஆர்பி சரியா போகலையா? உடனே சர்ச்சை கார்டை டிரா பண்ணுங்க" என்ற பிளான்தான் இது என்று ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள்.
மேடையில் விஜய் சேதுபதி கம்ருதீனை நிற்க வைத்து பேசும்போது, பலருக்கு ஒரே டவுட், "இவரை தவறு செய்ததால்தானே வெளியே அனுப்பினீங்க? அப்போ இப்போ இந்த ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் எதுக்கு?" என்று சொல்லுறாங்க, "வெளியில சப்போர்ட் இருக்குன்னா தவறை மறந்துடலாமா? அப்படின்னா நாளைக்கு யாராவது விதி மீறினா 'எனக்கும் ஃபினாலே ரீ-என்ட்ரி வேணும்'ன்னு கேட்பாங்க."
இதெல்லாம் பார்த்து இன்னொரு ரசிகன் சொல்ற கமெண்ட் தான் ஹிட், "இது பிக் பாஸ் வீடா... இல்ல பப்ளிக் மெமரி டெஸ்ட் சென்டரா? நாலு நாள் கழிச்சா எல்லாம் ரீசெட் ஆகிடுமா?"
ஃபினாலே நாளில் சர்ச்சை, கலாய்ப்பு, மீம்ஸ் இல்லாம போனா தான் ஆச்சரியம். ஆனால் இந்த முறை கொண்டாட்டத்தை விட கோபமே அதிகம். "விதிகள் எல்லாருக்கும் சமமா? இல்ல டிஆர்பி வந்தா விதிகளே ஃபினாலேக்கு விடுமுறையா?" என்ற கேள்வியோடு தான் பிக் பாஸ் 9 முடிந்திருக்கிறது.
ஒரு வார்த்தையில் சொன்னா, "ரெட் கார்டு காட்டினாலும்... ரிட்டர்ன் டிக்கெட் பிக் பாஸ்கிட்டே ரெடியா இருக்கு!"
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications