Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bigg Boss: இதை நான் எதிர்பார்க்கவே இல்ல, பிளான் பண்ணி வெளியே அனுப்பிட்டாங்க! பிக் பாஸ் ப்ரஜன் முதல் வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரஜன் வெளியேற்றப்பட்டார். இது யாரும் எதிர்பார்க்காத விஷயம் தான். காரணம் இரண்டு வாரங்களுக்கு முன்பு இவர் வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்ப்பட்ட நிலையில் அப்போது அவருக்கு விஜய் சேதுபதி அட்வைஸ் கொடுத்திருந்தார். பிறகு தன்னுடைய விளையாட்டை பிரஜன் மாற்றி இருந்தார். ஆனால் திடீரென வெளியேற்றப்பட்டதும் வருத்தத்தோடு பிரஜன் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு 60 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக பிரஜன் கலந்து கொண்டார். இவர் இதற்கு முன்பு சின்னத்திரையில் சில சீரியல்களில் நடித்திருக்கிறார். அதுபோல ஒரு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகர் விஜய் சேதுபதியின் நண்பர் தான்.

Bigg Boss Bigg Boss Tamil Vijay Sethupathi Kemi

இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் திருமணம் ஆன தம்பதிகளாக கலந்து கொள்ளவில்லை. இதற்கு முன்பு தாடி பாலாஜி அவருடைய மனைவியோடு கலந்து கொண்டாலும் அவர்கள் இருவருமே அப்போது பிரிந்து இருந்தனர். ஆனால் மனம் ஒத்த காதல் தம்பதிகளாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரஜன் மற்றும் சான்ராவின் விளையாட்டால் பிக் பாஸ் சுவாரஸ்யமாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கமாக உள்ளே எல்லா போட்டியாளர்களும் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை போலவே இவர்களும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அதனால் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு விஜய் சேதுபதி பிரஜனை சரமாரியாக கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பிரஜனும் பதிலுக்கு பதில் கொடுத்திருந்தார். இது அதிகமாக ட்ரோல் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத ஒரு அன்ஃபேர் எவிக்ஷனாக பிரஜன் வெளியேற்றப்பட்டு இருக்கிறார். இது குறித்து அவர் வெளியே வந்ததும் முதல் வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

அந்த வீடியோவில், எல்லோருக்கும் வணக்கம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் 30 நாட்களுக்கு மேலே இருந்திருக்கிறேன் அதற்கு காரணம் ரசிகர்களாகிய நீங்கள் தான். நீங்கள் கொடுத்த சப்போர்ட்டால்தான் என்னால் இவ்வளவு நாட்கள் இருக்க முடிந்தது. அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான் வெளியேற்ற பட்டது கூட எனக்கு எதிர்பார்க்காத ஒன்றாக தான் இருக்கிறது. நான் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இரண்டு வாரத்திற்கு முன்பு நான் வெளியேற மாட்டேன் என்று உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தேன்.

அந்த காரில் என்னை வெளியே அனுப்பும் போது மீண்டும் வருவேன் என்று சொன்னேன் அதேபோல நடந்தது. ஆனால் இப்போது அது மாறிவிட்டது. சிலர் எனக்கு மெசேஜ் செய்து உங்கள அனுப்புனது அன்பேர் எவிக்ஷன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்க்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்கிறது. நாம் ஏதோ விளையாடி இருக்கிறோம் என்று புரிகிறது.

அதோடு என்னுடைய விளையாட்டில் சில மாற்றம் தேவை என்று விஜய் சேதுபதி சொன்னதும் நான் என்னுடைய விளையாட்டை மாற்றினேன். ஆனால் அதிரடியாக வெளியேற்றப்பட்டுவிட்டேன். அதுதான் கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. நன்றாக விளையாட வேண்டும் என்று நினைத்த நேரத்தில் இப்படி நடந்தது என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை. சிலர் நீங்க உங்களை பிளான் பண்ணி தூக்கிட்டாங்கன்னு சொல்றாங்க. இது ஒரு விளையாட்டு அது அப்படித்தான் இருக்கும்.

எது நடந்ததோ அதை விட்டு நாம நகர தொடங்கி விட வேண்டும். அதுபோல என்னுடைய வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நான் நகர போகிறேன்... இனி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க போகிறேன். அதற்கு மக்கள் எனக்கு சப்போர்ட் கொடுக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் பிரஜன் பேசி இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+