Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்வதிக்கு ரெட் கார்டு கொடுக்க உண்மை காரணம் இதுதானா? கேமராவுக்கு பின்னாடி விஜய் சேதுபதி போட்ட சண்டை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவி பிக் பாஸ் தமிழ் சீசன் 9 குறித்து கடந்த சில நாட்களாக பேசப்படாத விஷயமே இல்லை. குறிப்பாக, கம்ருதீன் - பார்வதி - சான்ட்ரா சம்பவம் நிகழ்ச்சியை பார்க்காதவர்களையும் கூட பிக் பாஸ் ஸ்கிரீன் முன்னால் கொண்டு வந்துவிட்டது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் காரில் வைத்து சான்ட்ராவை கம்ருதீன் மற்றும் பார்வதி இருவரும் தள்ளிவிட்ட சம்பவம், பார்ப்பவர்களையே பதட்டப்படுத்தும் அளவுக்கு சென்றது. அந்த சண்டை ஒளிபரப்பானதுமே, "இவர்களுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும்" என்று ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை ஒரே குரலில் பேச ஆரம்பித்தனர்.

Bigg Boss Bigg Boss Tamil vijay tv

குரல் கொடுத்த தருணம்

இந்த சீசனில் இதுவரை பிக் பாஸ் பார்க்காதவர்களே கூட, அந்த காட்சிகளை பார்த்து "இவர்களுக்கு உடனே ரெட் கார்டு கொடுக்கணும்" என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டது தான் ஆச்சரியம். ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் - எங்கு பார்த்தாலும் இதே விவாதம் தான்.

எதிர்பார்த்தது போல வந்த ரெட் கார்டு

நேற்று அனைவரும் எதிர்பார்த்தபடியே, கம்ருதீன் மற்றும் பார்வதி இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து விஜய் சேதுபதி வெளியே அனுப்பிவிட்டார். ஆச்சரியம் என்னவென்றால், ரெட் கார்டு கொடுத்த பிறகு அவர்களிடம் விஜய் சேதுபதியும் பிக் பாஸும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

அதற்கு கொஞ்ச நேரத்திற்கு முன்பே, இருவரும் ஜாலியாக டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர். ஆனால், சில நிமிடங்களில் நிலைமை முழுக்க மாறி, விஜய் சேதுபதி கடுமையாக கண்டித்ததும், சான்ட்ராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட காட்சிகள் பார்ப்பவர்களை உறைய வைத்தது. அந்த நேரத்தில் சான்ட்ரா கதறி அழுததும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

இது அழுகையா நடிப்பா

ஒருபக்கம், "சான்ட்ராவுக்காக தான் இந்த ரெட் கார்டு" என்று மக்கள் நிம்மதி அடைந்தாலும்,
மற்றொரு பக்கம், "சான்ட்ரா தொடர்ந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்வது நாடகம் போல இருக்கிறது" என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன. இதனால், இந்த சம்பவமே ஒரு புதிய சர்ச்சையாக மாறியுள்ளது.

பிக் பாஸ் டீம் போட்ட பிளான்

பிக் பாஸ் சம்பந்தமாக உள்ளிருப்பவர்களிடம் பேசும்போது கிடைத்த தகவல்களின்படி, பார்வதியை உடனடியாக வெளியேற்ற பிக் பாஸ் டீம் முதலில் சம்மதிக்கவே இல்லை என கூறப்படுகிறது. காரணம், கம்ருதீன் - பார்வதி இருவரை வைத்து தான் நிகழ்ச்சியில் தேவையான "கண்டென்ட்" கிடைத்துக் கொண்டிருந்தது.

"ஒரு படம் ஹிட் ஆக வில்லன் முக்கியம்" என்பதுபோல், இவர்களின் வில்லத்தனத்தால் தான் மற்ற போட்டியாளர்கள் ஹீரோவாக மாறிக் கொண்டிருந்தார்கள் என்பதும் பிக் பாஸ் கணக்கு. அதனால், கம்ருதீனுக்கு மட்டும் ரெட் கார்டு கொடுத்து அனுப்பி, பார்வதியை வைத்து மீதமுள்ள இரண்டு வாரங்களையும் ஓட்டலாம் என்ற பிளான் இருந்ததாகவும் பேசப்படுகிறது.

விஜய் சேதுபதி வைத்த கண்டிஷன்

ஆனால், "எனக்கு அதிகமான மெயில்களும் மெசேஜ்களும் வருகிறது" என்று சொல்லி, விஜய் சேதுபதி தான் பார்வதிக்கும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று உறுதியாக நின்றாராம். "அப்படி செய்யவில்லை என்றால், இதற்கு முந்தைய சீசன் போல சில நாட்களுக்கு வேறு ஒருவரை வைத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்குங்கள். இந்த சீசனிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்" என்று கூட அவர் சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தான் பார்வதிக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

முடிந்தது ஒரு அத்தியாயம்

இதனால் பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த இந்த விவகாரம், ஒரு முழு பிரளயம் முடிந்தது போல அமைந்துள்ளது. இனி பார்வதி அல்லது கம்ருதீன் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், அவர்கள் வீடியோ வெளியிடக் கூடாது என்று ரூல்ஸ் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

அதோடு, பிக் பாஸ் கொண்டாட்டம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளிலும் இவர்கள் இருவரும் இனி கலந்து கொள்ள முடியாது என்றும், வீட்டிற்குள் விளையாடிய 90 நாட்களுக்கான சம்பளமும் கிடைக்காது என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொதுவாக, நிகழ்ச்சி முடிந்து 100 நாட்கள் கழித்தே சம்பளம் வழங்கப்படும் நிலையில், இவர்கள் இருவருக்கும் அந்த வாய்ப்பும் இல்லை என்கிறார்கள்.

கம்ருதீனுக்கு மட்டும் ரிலீஃப்

இதற்கிடையில், கம்ருதீன் மீண்டும் மகாநதி சீரியலில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. காரணம், அவருக்கு ரெட் கார்டு கிடைத்தது பிக் பாஸில் தான்; சீரியலில் இல்லை என்பதால், அந்த வாய்ப்பு தொடரலாம் என சேனல் தரப்பில் பேசப்படுவதாக தகவல்.

இன்னொரு வெளியேற்றம்

இதையெல்லாம் தாண்டி, இன்றைய எபிசோடில் சுபிக்ஷா வெளியேற்றப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதால், பிக் பாஸ் சீசன் 9 ரசிகர்களுக்கு அமைதியே இல்லாத நிலை தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+