பிக் பாஸ் தமிழ் 10 நிகழ்ச்சியில் இவங்க எல்லாம் வராங்களா? வெளியான 21 பேர் லிஸ்ட்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே யாரெல்லாம் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்ற உத்தேச பட்டியல் ஒவ்வொரு சீசனிலும் வெளியாகிவிடும். அது போல தான் தற்போதைய பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 21 போட்டியாளர்கள் பெயர் லிஸ்ட் வெளியாகி இருக்கிறது. லிஸ்டில் இருப்பவர்கள் எல்லாம் கலந்து கொண்டால் வேற லெவலில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இப்போது சோசியல் மீடியாவில் கிளம்பிவிட்டது.
வழக்கமான சீசனாக இல்லாமல் இந்த முறை நிகழ்ச்சியில் சுவாரசியத்தை கூட்டுவதற்காக விஜய் டிவி தரப்பில் இருந்து பல முயற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சீசனில் டாஸ்க் பெரிய அளவில் சுவாரஸ்யமாக இல்லை, உள்ளே போட்டியாளர்கள் சண்டை போட்டுக் கொண்டே இருந்தனர். இதனால் இந்த முறை மக்கள் மத்தியில் மீண்டும் பழைய இடத்தை பிடிப்பதற்காக தீவிரமான வேலை நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின் படி 21 போட்டியாளர்கள் பெயர் வெளியாகி இருக்கிறது.

அந்த லிஸ்ட் இதோ:
1. ஜாய் கிரிசில்டா - Stylist
2. பிரியா ராமன் - நடிகை
3. ஜனனி அசோக் - விஜய் டிவி பிரபலம்
4. டாலி - விஜய் டிவி பிரபலம்
5. முரளி விஜய் - முன்னாள் கிரிக்கெட் வீரர்

6. ஆர்யன் - சீரியல் நடிகர்
7. புவியரசு - சீரியல் நடிகர்
8. Review Volcano பிரசாந்த் - விமர்சகர் / சமூக வலைதள பிரபலம்
9. நவீன் - விஜய் டிவி பிரபலம்
10. வினோத் பாபு - விஜய் டிவி சீரியல் நடிகர்

11. குரோஷி - விஜய் டிவி காமெடி நடிகர்
12. சிந்தியா வினோலின் - டான்சர்
13. அக்ஷிதா அசோக் - விஜய் டிவி பிரபலம்
14. ஃபரினா - விஜய் டிவி பிரபலம்
15. ஹேமா ராஜ்குமார் - விஜய் டிவி பிரபலம்

16. பானுமதி - விஜய் டிவி பிரபலம்
17. கரிஷ்மா - Common Man
18. முனியம்மா - Common Man
19. ஜேசன் கௌஷி - Common Man
20. ஸ்வப்னா - Makeup Artist
21. காயு ஸ்ரீ - விஜய் டிவி பிரபலம் என்று கூறப்படுகிறது.

இதற்கு முந்தைய சீசன்களிலும் இதுபோல உத்தேச பட்டியலில் இருக்கும் அதிகமான போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். அதேபோல இந்த முறை நடக்குமா? அல்லது இதில் ஏமாற்று வேலை நடக்குமா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications
