வைல்டு கார்டில் TTF வாசன் உடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும் 2 போட்டியாளர்கள்! ஆரம்பமே அதிரடி
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இன்று வைல்டு கார்டு போட்டியாளராக 3 போட்டியாளர்கள் உள்ளே செல்ல இருக்கிறார்கள். அதில் டிடிஎஃப் வாசன் ஒருவர் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். ஆனால் அவருடன் மேலும் 2 போட்டியாளர்கள் போக போகிறார்கள். அவர்களும் ஏற்கனவே ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்கள் தான். நூலிழலையில் வாய்ப்பை பறிகொடுத்தவர்களுக்கு இப்போது மீண்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

பிக் பாஸ் அப்டேட்
ஏற்கனவே கடந்த வாரம் வெளியேறிய 3 போட்டியாளர்களை வீட்டிற்குள் அனுப்பி வைத்து உள்ளிருக்கும் 3 போட்டியாளர்களை வெளியே அனுப்பப் போவதாக கூறி இருந்தார்கள். உள்ளே அனுப்பப்பட்ட 3 போட்டியாளர்கள் தங்களுக்கு போட்டியாக நினைக்கும் 3 போட்டியாளர்களை கையில் லாக் செய்து ஒரு வாரம் முழுக்க சுற்ற விட்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல் போனவரை 3 எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் இருப்பதாக சொல்லப்பட்டது.
பிக் பாஸ் எபிசோடு
அதனாலயே வாக்குவாதம் அளவுக்கு அதிகமாக போய்க்கொண்டிருந்தது. அடிதடி மட்டும் தான் நடக்கவில்லை. ஒரு சில போட்டியாளர்கள் மட்டும் சில நேரங்களில் சுவாரசியமாக அடுத்தவர்களையும் சிரிக்க வைக்கிற மாதிரி பேசிக் கொண்டிருந்தனர். அதனால் இந்த வாரம் யாருக்கு எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் கிடைக்கப் போகிறது என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதற்கிடையே இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் போகப் போகும் 3 போட்டியாளர்கள் யார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள்
அது வேறு யாருமில்லை முதல் போட்டியாளராக டிடிஎஃப் வாசன். பிறகு அன்ஷிதா அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அவினாஷ் தங்கச்சி தான். அவரை தொடர்ந்து பிக் பாஸ் காமன் மேன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கரிஷ்மாவும் உள்ளே போகிறார். ஏற்கனவே காமன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டிற்குள் போன முனியம்மா, ஜெய்சன், சாமா 3 பேரும்தான் வீட்டிற்குள் உருப்படியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்ற பேச்சு ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கும் போது இப்போ கரிஷ்மாவும் வரும்போது விளையாட்டு சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று டிடிஎஃப் வாசன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார் என்றதுமே பிக் பாஸ் சூட்டிங் நடக்கும் EVP செட்டை சுற்றி அவருடைய ரசிகர்கள் சுற்று போட்டு விட்டார்கள். அதிகமான ரசிகர்கள் இவிபி செட்டுக்கு வந்து குவிந்து விட்டார்கள். இதனால் இவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகு என்ன மாதிரி விளையாட்டை கொண்டு போகப் போகிறார்? ரசிகர்கள் ரியாக்சன் எப்படி இருக்க போகிறது என்பது போகப் போக தெரியும்.


Click it and Unblock the Notifications
