பிக் பாஸ்க்கு வந்த காரணமே இதுதான்.. இவங்கள சுத்தமா பிடிக்காது! முதல் நாளே ஓபனாக பேசிய லட்சுமி பிரியா

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி இன்று செப்டம்பர் 6ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கி இருக்கிறது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே விஜய் டிவி சீரியல் நடிகை லட்சுமி பிரியாவும் போட்டியாளராக கலந்து கொண்டு இருக்கிறார். அவர் இந்த நிகழ்ச்சிக்கு எதற்காக வந்தேன்? நிகழ்ச்சியில் தான் என்னவெல்லாம் செய்யப் போகிறேன் என்று நம்மிடம் பேசி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஒரு வழியாக ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே இன்று பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி தொடங்கிவிட்டது. அதுவும் யாரும் எதிர்பார்க்காத பல அதிரடியான சம்பவங்களும் இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே சில போட்டியாளர்களை மேடையில் வைத்து டாட்டா காட்டி அனுப்பி வைத்து விட்டார்கள். இது நிகழ்ச்சியை பற்றிய இன்னும் எதிர்பார்ப்பை கூட்டி இருக்கிறது. ஆரம்பமே இப்படி இருக்கிறதே போக போக என்ன மாதிரி இருக்குமோ என்று எல்லோரும் யோசித்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ரசிகர்களின் செல்லப்பிள்ளையான லட்சுமி பிரியா தான் எதற்காக இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன் என்று பேசி இருக்கிறார்.

Bigg Boss Bigg Boss Tamil Vijay TV

நடிகை லட்சுமி பிரியா பேட்டி

அதில் அவர் பேசும்போது, நான் இந்த நிகழ்ச்சிக்கு செலக்ட் ஆகி இருக்கிறேன் என்று சொல்லும்போது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. பொதுவாக நடிகைகள் என்றாலும் சின்னத்திரை, சினிமா என்று இரண்டு துறைக்கும் இடையே அதிக வித்தியாசம் இருக்கிறது. ஆரம்பத்தில் நானும் சினிமாவில் நடித்துதான் சீரியலுக்கு வந்தேன். ஆனாலும் பாகுபாட்டை நானே உணர்ந்து இருக்கிறேன். இது ஒரு பக்கம் இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் என்னை முழுமையாக புரிந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

பிக் பாஸ் வந்த காரணம்

இதுவரைக்கும் என்னை சினிமாவிலும் சரி, சீரியலிலும் சரி அந்த கேரக்டராக ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் இனி என்னுடைய ஒரிஜினல் கேரக்டரை பார்ப்பார்கள். இதில் சில விஷயங்கள் ரசிகர்களுக்கு பிடிக்கும் சில விஷயங்கள் பிடிக்காது. ஆனால் அதுவெல்லாம் சேர்ந்தது தான் நான். இதுவரைக்கும் எனக்கு சப்போர்ட் கொடுத்த ரசிகர்கள் இன்னமும் சப்போர்ட் பண்ணுவாங்க என்று நம்புகிறேன் என்று பேசினார்.

அப்போது அவரிடம் காமன்மேன் நிகழ்ச்சியில் இருந்தும் இந்த நிகழ்ச்சிக்கு சில போட்டியாளர்கள் வந்திருக்கிறார்கள் அது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், எங்களுக்கும் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு தெரிந்திருக்கிறது. அதேபோல காமன்மேன் நிகழ்ச்சிகளில் இருந்து வருபவர்களுக்கும் மக்கள் அதே அன்பை கொடுப்பார்கள். அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வருவதால் எனக்கு எந்த விதமான வித்தியாசமும் தெரியவில்லை என்று சொல்லியிருந்தார்.

பிடித்த, பிடிக்காத போட்டியாளர்கள்

அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சியில் சாண்டி மாஸ்டர், கவின் போன்ற போட்டியாளர்கள் வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். நான் அவர்களுடன் எளிதாக கனெக்ட் ஆகி விடுவேன். அதே நேரத்தில் போன சீசன்னில் இருந்த மாதிரி பாரு, வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கம்ருதீன் போன்றவர்களைப் போல யாரேனும் வந்தால் எனக்கும் அவர்களுக்கும் செட்டாகாது. அந்த இடத்தில் நானும் அவர்களைப் போலத்தான் நடந்து கொள்வேன் என்று நினைக்கிறேன். அதனால் அப்படிப்பட்டவர்கள் வந்தாலே ஒன்னு தள்ளி போய் இருப்பேன், அல்லது அவர்களுடன் நேருக்கு நேராக போட்டியிடுவேன் என்று சொல்லி இருக்கிறார்கள். இனி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய விளையாட்டு எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+