பிக் பாஸ் 10ல் கலந்து கொள்ளும் ஜீ தமிழ் நடிகை.. கூடவே வரும் எதிர்பாராத நபர்! இதுவரை நடக்காத சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 6 தேதியிலிருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்கி 10வது ஆண்டு என்பதால் இந்த வருஷம் பல சர்ப்ரைஸ் இருக்கிறது என்று கூறப்படுகிறது. இதற்கிடையே இந்த சீசனில் கலந்து கொள்ளும் 2 போட்டிகளின் தகவலும் இப்போது கிடைத்திருக்கிறது. அதில் ஒருவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற சீரியல்களில் நடித்த டாப் ஹீரோயினி தான். இன்னொருவர் யாரும் யூகிக்க கூட செய்யாத ஒரு துறையில் இருந்து வருகிறார்.

பிக் பாஸ் காமன் மேன் வெற்றியாளர்கள்

இந்த சீசனில் காமன் மேன் 3 பேர் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்று ஏற்கனவே சேனல் தரப்பினர் அறிவித்துவிட்டார்கள். இதற்காக ஆடிஷனும் நடந்து முடிந்து விட்டது. இந்த ஆடிஷனில் கலந்து கொள்ள லட்சக்கணக்கானோர் லெட்டர் போட்டிருந்த நிலையில் அவர்களிலிருந்து 20 பேரை செலக்ட் செய்து அவர்களிலிருந்து கடைசியாக மூன்று பேரை மட்டும் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்புகிறார்கள். இதற்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய பிறகு தான் சர்ச்சைகள் வரும். ஆனால் இப்போ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு காமன் மேன் அனுப்புவதில் இருந்து சர்ச்சை தொடங்கிவிட்டது.

Bigg Boss Bigg Boss Tamil Vijay TV

பிக் பாஸ் நிகழ்ச்சி சர்ச்சை

காமன் மேன் நிகழ்ச்சியின் ஆடிஷனில் போட்டியாளர்களிடம் நடுவர்கள் நடந்து கொண்ட விதம் பெரிய அளவில் சர்ச்சையாக பேசப்பட்டது. ஆனால் அதை எல்லாம் நாங்க கண்டுக்க மாட்டோம் அடுத்த கட்ட வேலையை பார்ப்போம் என்பது போல ஏற்கனவே 3 போட்டியாளர்கள் தேர்வு செய்ததும் அடுத்ததாக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான செலபிரிட்டிஸ்கிளையும் தேர்ந்தெடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

Bigg Boss Bigg Boss Tamil Vijay TV

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 போட்டியாளர்

அதில் லுங்கி பாய் ராஜ்பிரியன், ஷப்பனம் உள்ளிட்ட ஒரு சில பெயர் ஏற்கனவே அடிபட்டு இருக்கிறது. இப்போது அந்த வரிசையில் நடிகை ஆலியா மானசா கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. ஆலியா மானசாவிற்கு பிரபலம் கொடுத்தது விஜய் டிவி தான். அந்த சேனலில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் தன் அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து சன் டிவி சீரியலில் நடித்தார். இப்போது ஜீ தமிழில் பாரிஜாதம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிக் பாஸ் காமன்மேன் சர்ச்சை: பேசும்போதே முகத்துல பந்தை வீசிய ஆரி! நடிகர் மாறன் மகள் குற்றசாட்டு
இந்த நிலையில் இவர் மீண்டும் விஜய் டிவியில் அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சும்மாவே குழந்தைத்தனமா பேசிக் கொண்டிருக்கும் ஆலியா மானசா இந்த நிகழ்ச்சியில் எப்படி நடந்து கொள்ளப் போகிறார்? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Bigg Boss Bigg Boss Tamil Vijay TV

கிரிக்கெட் வீரர்

அதே போல இன்னொரு போட்டியாளரும் எதிர்பார்க்காத துறையிலிருந்து வருகிறார் என்று சொன்னமே அது கிரிக்கெட் துறையில் தான். இதுவரைக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர் ஒருவர் போட்டியில் கலந்து கொண்டது கிடையாது. ஆனால் முதல் முறையாக கிரிக்கெட்டர் முரளி விஜய் போட்டியாளராக கலந்து கொள்ளப் போகிறாராம். அவர் தமிழ்நாட்டு அணிக்காகவும், ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் ஆடி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து இனி எப்படி சண்டை போட போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+