பிக் பாஸில் நடந்த அடிதடி.. TTF வாசன் மனைவி வெளியிட்ட கண்ணீர் பதிவு.. ரசிகர்கள் ஆறுதல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டுக்குள் டிடிஎஃப் வாசன் போனதே இந்த சீசனில் ஒரு பெரிய மாற்றமாகத்தான் பார்க்கப்பட்டது. ஏற்கனவே நிகழ்ச்சி கொஞ்சம் மெதுவாக போய்க்கொண்டிருக்கிறது, இப்போதாவது ஏதாவது நடக்குமா? என்று எதிர்பார்த்தவர்களுக்கு வாசன் வந்த வேகத்திலேயே ஒரு சண்டை, அதற்கடுத்து அவரது மனைவியின் கண்ணீர் பதிவு என்று அடுத்தடுத்த சம்பவங்கள் பரபரப்பை கூட்டிவிட்டன. அதுவும் வாசன் வீட்டுக்குள் சென்று இன்னும் முழுசாக 1 வாரம் கூட முடியவில்லை. அதற்குள்ளேயே ஜேசனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

பிக் பாஸ் தமிழ் 10-வது சீசனில் டிடிஎஃப் வாசன், அக்‌ஷிதா, கரீஷ்மா ஆகிய மூவரும் ஒரே நேரத்தில் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்கள். ஏற்கனவே சவின்யா, ஜாவித் உள்ளிட்டோர் வெளியேறிய நிலையில், இந்த 3 பேரின் வருகை நிகழ்ச்சிக்குள் புதிய பரபரப்பை கொண்டு வந்திருக்கிறது. ஆனால் வாசன் உள்ளே வந்த முதல் நாளிலேயே இப்படியொரு சம்பவம் நடக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

Bigg Boss Tamil season

பிக் பாஸுக்குள் சண்டை

படுக்கையறை பகுதியில் செருப்பை எங்கே வைப்பது என்பதில் ஆரம்பித்த ஒரு சின்ன பிரச்சனைதான் பின்னர் வாசனுக்கும் ஜேசனுக்கும் இடையிலான கடுமையான வாக்குவாதமாக மாறியிருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கி ஆவேசமாக சண்டை போட, வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்கள் இடையில் வந்து பிரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதுதான் இப்போது பிக் பாஸ் பார்வையாளர்களிடம் பேசுபொருளாகி இருக்கிறது.

வந்த முதல் நாளே இப்படியா?" என்ற கேள்வி ஒரு பக்கம் இருக்கிறது. வாசன் உள்ளே வந்ததால் இனிமேல்தான் நிகழ்ச்சி சூடாகப்போகிறது என்று எதிர்பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். உண்மையை சொல்லப்போனால், வாசன் வருவதற்கு முன்பே அவரைப் பற்றி எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக இளம் ரசிகர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் வரவேற்பு காரணமாக, அவருடைய வருகை நிகழ்ச்சியின் கவனத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்போது அவர் வந்தவுடன் நடந்த இந்த மோதல் அந்த எதிர்பார்ப்புக்கு இன்னும் தீனி போட்டிருக்கிறது.

Bigg Boss Tamil season

டிடிஎஃப் வாசன் மனைவி பதிவு

ஆனால் பிக் பாஸ் வீட்டுக்குள் இந்த பரபரப்பு நடந்து கொண்டிருக்கும்போது, வெளியே வாசனின் மனைவி வெளியிட்ட பதிவு இன்னொரு விதமான கவனத்தை ஈர்த்திருக்கிறது. வாசன் பிக் பாஸ் வீட்டுக்குள் கிளம்பிச் செல்லும் நேரத்தில் அவர் அழுத காட்சிகளையும், கணவரை மிஸ் செய்வதாக உணர்ச்சிவசப்பட்டிருக்கும் தருணங்களையும் அவரது மனைவி பிரகாஷினி சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறார். அதோடு வாசன் வழக்கமான கெத்தான தோற்றத்தில் இருக்கும் ஒரு வீடியோவையும் வெளியிட்டு, அவரது பயணத்தை நினைவுபடுத்தியிருக்கிறார்.

ரசிகர்கள் ஆறுதல்

அந்த வீடியோக்களை பார்த்த வாசனின் ரசிகர்கள்தான் இப்போது அவருடைய மனைவிக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அழாதீங்க அண்ணி... வாசன் அண்ணன் டைட்டில் வின்னராகத்தான் வெளியே வருவார் என்று பலரும் நம்பிக்கை கொடுத்து வருகிறார்கள். இதுதான் ரசிகர் கூட்டம் என்றால் என்ன என்பதையும் காட்டுகிறது. வாசன் உள்ளே சண்டையில் சிக்கிக்கொண்டிருக்கிறார். வெளியே அவருடைய மனைவி கணவரை நினைத்து வருத்தப்படுகிறார்.

ஆனால் ரசிகர்களோ "எதுவாக இருந்தாலும் நாங்க இருக்கோம்" என்று அவர்களுக்கு தைரியம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்த கப்பை வாசன் உண்மையிலேயே தூக்கப் போகிறாரா, இல்லை பிக் பாஸ் வீடு அவருக்கு வேறொரு பாடத்தை கற்றுக்கொடுக்கப் போகிறதா என்பதுதான் இனிமேல் பார்க்க வேண்டிய சுவாரஸ்யம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+