Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பலருடைய முயற்சியால் தாமரை செல்வியின் அம்மாவிற்கு கட்டப்படும் வீடு..அம்மாவை அழைத்து சென்று நெகிழ்ச்சி

பிக் பாஸ் தாமரை செல்வியின் அம்மாவுக்காக பலர் உதவி செய்து வீடு கட்டி கொண்டு இருக்கின்றனர் அந்த வீடியோவை தாமரை செல்வி பகிர்ந்து இருக்கிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாக அனைவருக்கும் பரிச்சயம் ஆனவர்தான் தாமரை செல்வி.

தாமரை செல்வி டைட்டில் ஜெயிக்கவில்லை என்றாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தாமரை செல்வி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல்வேறு வாய்ப்புகள் வந்த வண்ணமாக இருக்கிறது.

இந்த நிலையில் தாமரை செல்வியின் அம்மாவிற்காக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் சிலர் இணைந்து ஒரு அழகான வீடு கட்டிக் கொண்டிருக்கின்றனர். அந்த வீட்டின் வீடியோவை தற்போது தாமரை செல்வி பகிர்ந்து இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகம்

பிக் பாஸ் நிகழ்ச்சி பலருடைய வாழ்க்கையை மாறி இருக்கிறது. ஒரு சிலருக்கு அதுவரைக்கும் இருந்த நல்ல பெயர் அந்த நிகழ்ச்சியில் காத்தோடு காத்தாக மாறி இருந்தது. ஆனால் ஒரு சிலர் அவ்வளவாக பிரபலமாகாமல் இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் மூலமாக பட்டித்தொட்டி எல்லாம் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் தாமரை செல்வியும் ஒருவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு, அந்த நிகழ்ச்சியில் இவர் அதிக நாட்கள் உள்ளே இருந்தாலும் கடைசியில் இவர் வெற்றி பெறாமல் வெளியேறியது அவருடைய ரசிகர்களை அதிகமாக பாதித்தது.

புதிய வாய்ப்புகள்

புதிய வாய்ப்புகள்

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் தனி ஆளாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாமரை செல்விக்கு அதிகமான ரசிகர்கள் கிடைத்து விட்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு அடுத்ததாக ஒளிபரப்பான பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையில் அதற்கு பிறகு அதிகமான திரைப்படங்களிலும் இவருக்கு வாய்ப்பு வந்ததாக இருக்கிறது. சமீபத்தில் கூட முடிவடைந்த பாரதி கண்ணம்மா சீரியலிலும் இவர் முக்கியமான கதாபாத்திரமாக நடித்திருந்தார்.

ஏழ்மையான குடும்பம்

ஏழ்மையான குடும்பம்

இந்த நிலையில் ஆரம்பத்தில் இருந்தே ஏழ்மையான சூழ்நிலையில் பிறந்து வளர்ந்து வந்த தாமரை செல்வி குடும்பத்திற்காக தன்னுடைய படிப்பை விட்டு விட்டு சிறு வயதிலேயே மேடை நாடகங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். அது மட்டுமல்லாமல் அம்மாவிற்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்து தங்கச்சியை இவர் தான் படிக்க வைத்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தாமரை செல்வியின் அம்மா ஒரு ஓலை வீட்டில் மிகவும் ஏழ்மையில் வசித்து வரும் வீடியோ வெளியான நிலையில், தாமரை செல்வியின் ரசிகர்கள் மற்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போன்ற பிரபலங்களின் உதவியால் தற்போது தாமரை செல்வியின் அம்மாவிற்கு ஒரு வீடு கட்டப்பட்டு வருகிறது.

அம்மாவிற்கு கிடைத்த வீடு

அம்மாவிற்கு கிடைத்த வீடு

அந்த வீட்டை சுற்றி காட்டி தாமரை செல்வி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பலருடைய முயற்சியால் தனது அம்மாவுக்கு இந்த ஒரு உதவி கிடைத்திருக்கிறது. இது என்னுடைய பல வருட கனவு தற்போது அது நிறைவேறி வருகிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. பலர் இதை பாராட்டி வருகிறார்கள். திறமைக்கு கிடைத்த அங்கீகாரம் என்று தாமரை செல்விக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+