என் எதிரியாய் இருக்க உனக்கு ஒரு தகுதியும் இல்லை.. சக போட்டியாளருக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்த அசீம்
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அசீம்,சமயம் பார்த்து சாயம் பூசி சாதகமாய் சாயும் சகுனி அல்ல நான் என ஏடிகேக்கு மறைமுகமாக பதில் கொடுத்திருக்கிறார்.
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டில் வின்னர் அசீம் தன்னுடைய twitter பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அது ஏற்கனவே ஏடிகே, அசீம் மற்றும் தனலட்சுமி இருவருக்கும் அறிவுரை கூறி வெளியிட்ட பதிவிற்கு பதிலாக இருக்கும் என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
அசீம் தன்னுடைய பதிவில் என் நண்பனாய் இருக்க தனித் தகுதி தேவை இல்லை, ஆனால் என் எதிரியாய் இருக்க உனக்கு ஒரு தகுதியும் இல்லை என்று கூறியிருக்கிறார்.

கருத்து மோதல்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி முடிவடைந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் முடியப்போகும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்த போட்டியாளர்களும், ரசிகர்களும் அடிக்கடி கருத்து மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சீசன் டைட்டில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டது சமூக வலைத்தளத்தில் இப்ப வரைக்கும் அதிகமான விமர்சனங்களை பெற்று வருகிறது. விக்ரமன் டைட்டில் ஜெயிக்க வேண்டும் என்று அவருடைய ரசிகர்கள் விருப்பப்பட்டு இருந்த நிலையில் அது நடைபெறவில்லை என்பதால் அசீமுடைய கேரக்டரை பற்றி சமூக வலைத்தளத்தில் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முடிவடையாத குற்றச்சாட்டுகள்
அதில் அசீமை அப்யூஸர் அசீம் என்று பலர் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அசீம் அபியூசர் இல்லை என்றும் பிக் பாஸ் வீட்டிற்குள் விக்ரமனும் அப்படித்தான் நடந்து கொண்டார் என்றும் தன்னை சின்னப் பெண் என்று பேசும் விக்ரமன் அவருக்கு சாதகமாக என்னை பயன்படுத்திக் கொண்டார் என்றும் ஏடிகே விளையாட்டில் ஆடையை கிழிக்கும் போது கூட அவருக்கு சாதகமாக விக்ரமன் இருந்தார் என்று பல்வேறு குற்றசாட்டுகளை தொடர்ந்து கூறி வந்தார். இதற்கு விக்ரமன் மற்றும் அசீம் இருவருக்கும் நண்பர்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வந்த ஏடிகே ஒருவரை தவறாக தொடுவதற்கும் ஆரோக்கியமான விளையாட்டின் போது துணி லேசாக கிழிப்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று பதிவிட்டு இருந்தார்.

அடுத்தடுத்த பதிவுகள்
அது மட்டுமல்லாமல் இன்னொரு பதிவில் பிக் பாஸ் புகழ் எல்லாம் அடுத்த சீசன் வரைக்கும் தான். அதனால் பேட்டிகளில் மற்றவர்களை தரம் தாழ்த்த வேண்டாம். சக போட்டியாளர்களை பற்றி வன்மத்கை கக்குவதை விட்டுவிட்டு உங்களின் அடுத்த வேலைக்காக மீடியாவை பயன்படுத்துங்கள். இந்த ஷோ முடிந்துவிட்டது எனவே நிஜ வாழ்க்கைக்கு திரும்புங்கள் என்று பதிவிட்டிருந்தார். தற்போது அதற்கு பதில் கூறும் விதமாக அசீம் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில் ஒரு விஷயத்தை பற்றி பேசும்போது முதலில் அதை ஆரம்பித்தார்கள் யார் என்பதை பாருங்கள். உங்களுக்கு அபிமான போட்டியாளர் குறை சொன்னால் அமைதியாக இருப்பீர்கள். இதுவே உங்களைச் சொன்னால் மட்டும் கொந்தளிப்பீர்களா? பிக் பாஸ் முடிந்து விட்டது. நான் தற்போது என்னுடைய அடுத்தடுத்த வேலைகளில் பிஸியாக இருக்கிறேன். உங்களின் புகழை சரியாக பயன்படுத்தி வளருங்கள் நண்பா என்று பதிவிட்டு.

அசீம் வெளியிட்ட பதிவு
அதுபோல மற்றொரு பதிவில் சமயம் பார்த்து சாயம் பூசி சாதகமாய் சாயும் சகுனி நான் அல்ல. ஏழை பணக்காரன் என பாகுபாடு இல்லாமல் ஒன்றுபோல் மேல் நோக்கி எரியும் தீபம் என்றும், என் பேச்சு ஒன்றுதான். என் நண்பனாய் இருக்க தனி தகுதி தேவையில்லை. என் எதிரியாய் இருக்க உனக்கு தகுதி இல்லை. வளர்த்துக் கொள்ள வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவிற்கு அதிகமான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.
-
ரீல்ஸ் மோகம்.. மகனுக்கு உதட்டில் முத்தம்.. சீரியல் நடிகையை திட்டும் நெட்டிசன்கள்.. அவரே கொடுத்த விளக்கம் -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications