டாஸ்க்காக அம்மாவை திட்டிய போட்டியாளர்.. இந்த வாரம் வெளியேறுபவர் இவரா? லீக்கான வீடியோ
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஷிவின் கணேசனை தனலட்சுமி டாஸ்க்காக அம்மாவை குறித்து பேசி அழ வைத்து இருக்கிறார்.
என்னதான் டாஸ்க்காக இருந்தாலும் இப்படியா பேசுவார்கள் என்று நெட்டிசன்கள் பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
வழக்கம்போல தனலட்சுமி குறித்து அதிகமான நெகட்டிவ் கருத்துக்கள் வந்து கொண்டிருந்தாலும் இதைத்தானே பிக் பாஸ் விதிமுறையில் கூறியிருந்தால் அழுதாலோ சிரித்தாலோ அவர்கள் டாஸ்கில் தோற்றவர்கள் என்பதை அதை புரிந்து கொள்ளாமல் எப்படியா என சிலர் பதில் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

கதறி அழுத ஷிவின்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் டப் போட்டியாளராக இருக்கும் ஷிவின் மற்றும் தனலட்சுமி பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருகிறது. ஆதிவாசிகள் அணியில் இருக்கும் ஷிவினை ஏலியன்ஸ் அணியில் இருக்கும் தனலட்சுமி டாஸ்க்காக எதையோ கூறி இருக்கிறார். ஆனால் டாஸ்க்காக எதை வேணாலும் சொல்லுவியா? எங்க அம்மாவை எனக்கு எவ்ளோ பிடிக்கும் என்று உனக்கு தெரியும் தானே? ஆனால் அதை எப்படி நீ சொல்லாம் என்று ஷிவின் கோபமாக பேச தனலட்சுமி சாந்தமாக சிரித்தபடியே, டாஸ்க்காக தான ஷிவின் என்று பேசிக் கொண்டிருக்கிறார். டாஸ்க்காக நான் எப்போதாவது உன்னை கேவலப்படுத்தி இருக்கனா? என கேட்டு ஷிவின் கோபப்பட்டு விட்டார் என்றதும் தனலட்சுமி கைதட்டி சிரிக்க, சீரியஸா பேசிக்கிட்டு இருக்காங்க தனலட்சுமி என அசீம் குரல் கொடுத்து கொண்டிருக்கிறார். வெளியே வந்த ஷிவின் ரட்சிதாவை கட்டியணைத்து அழுது கொண்டிருக்கிறார்.

புதுசா ட்ரை பண்ணுகிறாரா
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 51 வது நாளில் மேற்கண்ட கலவரங்கள் நடந்து கொண்டிருந்தாலும் ,ஏற்கனவே பிக் பாஸ் டாஸ்கில் போட்டியாளர்கள் யாரேனும் அழுதுவிட்டால் அல்லது தன்னுடைய உணர்ச்சிகளை காட்டி விட்டாலோ அவர்கள் எதிர் அணியில் ஒரு நபராக மாறிவிட வேண்டும் என்று விதிமுறையை கூறி இருந்தனர். அதனால் டாஸ்க்காக ஷிவின் இப்படி கோபப்படுவது போல நடித்துக் கொண்டிருக்கிறாரா? என்று குழப்பமாக தான் இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இதற்கு முந்தைய டாஸ்கில் கூட ஷிவின் தான் ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக யாரும் எதிர்பார்க்காத பல செயல்களை செய்து வந்தார். அதுபோலத்தான் இப்போதும் ட்ரை பண்ணிக் கொண்டிருக்கிறாரா என்று பலர் கூறி வருகிறார்கள்.

அம்மாவை திட்டலாமா
தனலட்சுமி பலமுறை தன்னுடைய விளையாட்டை காண்பிக்கின்ற மாதிரி எனக்கு டாஸ்க் கொடுங்கள் என்று பிக்பாஸிடம் கேட்டுக் கொண்டதற்கு போல தான் இப்போதைய டாஸ்க் வந்து இருக்கிறது அதில் ஏலியனாக மாறி தன்னுடைய விளையாட்டை தொடங்கி விட்டார் என்று அவருடைய ரசிகர்கள் பலர் தனலட்சுமி பாராட்டி வருகின்றனர். ஆனால் நெட்டிசன்கள் என்னதான் டாஸ்க்காக இருந்தாலும் அம்மாவை எப்படி ஒருவர் திட்ட முடியும் அம்மாவைப் பற்றி பேசியது தவறுதான் என்று வாதிட்டு வருகிறார்கள்.

இந்த வாரம் வெளியேறுபவர் இவரா
நேற்று எபிசோடில் தனலட்சுமி மற்றும் ஜனனி இருவரும் அமர்ந்திருக்கும் போது ஜனனி, தனலட்சுமி இடம் ரட்சிதாவின் சேலை கட்டி இருப்பதை குறித்து ரட்சிதாவுக்கு எருமை மாட்டுக்கு கட்டின மாதிரி இருக்கிறது என கூறியதை தொடர்ந்து நெட்டிசன்கள் பலர் அதிகமாக கலாய்த்து வருவதால் தனலட்சுமி மற்றும் ஜனனியின் வாக்குகள் அதிகமாக குறைய தொடங்கியிருக்கிறது. முதல் நாளில் முதல் இடத்தில் இருந்த ஜனனி இப்போது மூன்றாவது இடத்திற்கு வந்திருக்கிறார். இதே நிலையில் போய்க்கொண்டிருந்தால் இந்த வாரம் வெளியேறுவது ஜனனியாகத்தான் இருக்குமோ என்று பலர் கூறி வருகிறார்கள்.
-
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை..! ஏமாற்றிவிட்டார், ஆதாரத்தை வெளியிட போகிறேன்.. மிரட்டும் நபர்! -
சூப்பர் சிங்கர் அஜய் கிருஷ்ணாவிற்க்கு இரண்டாவது குழந்தை பிறந்தது.. உருக்கமான பதிவு! குவியும் கமெண்ட்ஸ் -
‘சிங்கிள் பசங்க’ நிகழ்ச்சியில் இருந்து விலக காரணம் இதுதான்.. ஒபனாக பேசிய ஸ்ருதிஹா! இவ்வளவு விஷயம் நடந்ததா? -
Youth Review : யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! கென் கலக்கினாரா? கலங்க வைத்தாரா? ரிவ்யூ இதோ -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம்












Click it and Unblock the Notifications