கணவர் கூறிய ரகசியத்தால் அதிரடியாக மாற்றம் காட்டும் மைனா.. விக்ரமனுக்கு எதிராக இப்படி ஒரு செயலா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் 82 ஆவது நாளில் முதல் ப்ரோமோவில் விக்ரமன் மற்றும் மைனா இடையே வாக்குவாதம் தொடங்கி இருக்கிறது.
விக்ரம் என்னிடம் மைனா நந்தினி ஒப்பினியனை மட்டுமே வேலையாக வைத்துக் கொண்டு இருக்கக் கூடாது என்று புது குற்றசாட்டை வைத்து கொண்டிருக்கிறார்.
மைனா நந்தினியின் கணவர் ஏற்கனவே விக்கிரமனை போல நீ விளையாட வேண்டும் என்று சொன்னதாலே என்னவோ விக்ரமனையை டார்கெட் செய்ய தொடங்கி விட்டார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

சண்டை சச்சரவுகள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் ஆரம்பமான முதல் நாளிலிருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் சட்டை சச்சரவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. போட்டிகள் என்று வந்துவிட்டால் போட்டியாளர்கள் நீ நான் என்று சண்டையிட்டுக் கொண்டு போட்டி முடிந்தவுடன் சமரசம் ஆகி விடுவது வழக்கமாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது 80 நாட்களில் தாண்டிவிட்டது. ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களில் இருந்து இப்போது ஒன்பது போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். ரசிகர்களை கவர்ந்த நிகழ்ச்சிக்கு விறுவிறுப்பை ஏற்படுத்திய பல போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டனர். இது பலருக்கு ஏமாற்றமாக இருக்கிறது.

கணவர் கூறிய வார்த்தை
இந்த நிலையில் இந்த வாரம் முழுக்க ஃப்ரீஸ் டாஸ்க் தொடங்கப்பட்டு சண்டை சச்சரவுகள் இல்லாமல் சந்தோஷமாக குடும்பத்தினரின் வருகை இருந்து வந்தது. ஒன்பது போட்டியாளர்களின் குடும்பத்தினரும் ஒரு நாளைக்கு மூன்று போட்டியாளர்கள் என மூன்று நாட்களாக வந்த வண்ணமாகவே இருந்தனர். இது போட்டியாளர்களுக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் இந்த வாரத்திற்கான அடுத்த டாஸ்க் இன்று தொடங்கி இருக்கிறது. ஏற்கனவே ஃப்ரீஸ் டாஸ்க்கில் முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டிற்குள்ளே வந்த மைனாவின் கணவர் யோகேஷ் நீ இந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சரியான நபர் கிடையாது. பிரச்சனை நடந்தால் உடனே தட்டிக் கேட்க வேண்டும் உதாரணத்திற்கு விக்ரமனை பார் என்று கூறி சென்றிருந்தார். இந்த நிலையில் இன்று மைனா தன்னுடைய விளையாட்டை வேற விதமாக விளையாடத் தொடங்கி இருக்கிறார்.

தப்பா புரிஞ்சுகிட்டாரோ
இன்றைய எபிசோடுக்காண முதல் பிரமோ ஒளிபரப்பாகி இருக்கிறது. அதில் மைனா நந்தினி அனைவருக்கும் முன்னிலையில் மைக்கில் விக்ரம் ஒபினியன் சொல்வது எல்லோருக்கும் வேணும், ஆனால் ஒபினியனே வேலையா வச்சுக்கிட்டு இருக்கக் கூடாது, அந்த விஷயத்தை நான் பண்ணல, ஏன்னா நான் எதார்த்தமாக இருக்கிறேன். என்று மைனா கூற, சாப்பிட்டு கொண்டிருக்கும் விக்ரமன் எல்லாருமே கேம் விளையாட வந்திருக்கோம். சக பிளேயர்ஸ் விளையாடும் போது அவர்களுக்கு டிஸ்டர்பன்ஸ் ஏற்படும் போது அதை நீங்க எந்த இடத்திலும் சுட்டிக்காட்டியோ, அதை தடுத்து, அவங்களுக்கு பக்கமாக நீங்க நின்னு நான் பார்த்ததே இல்லை என விக்ரமன் பதில் கூறுகிறார்.

உண்மை யார் பக்கம்
விக்ரமனின் பதிலுக்கு மைனா அது உங்களுடைய புரிதலா கூட இருக்கலாம். அந்த உண்மையை நீங்க உங்களுக்குள்ளே வச்சுக்கோங்க, என்னுடைய உண்மையும் இருக்குன்னு நான் சொல்றேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார். இந்த பிரமோவை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே உங்க கணவர் இதைத்தானே உங்களிடம் சொன்னார். இன்று அதையே விக்ரமனும் உங்களிடம் சொல்கிறார். பிரச்சனை நடக்கும் இடத்தில் அமைதியாக மிச்சர் சாப்பிட்டுக்கொண்டு இருக்கக் கூடாது. அங்கே என்ன நடக்கிறது என்று தன்னுடைய கருத்தை எடுத்து வைக்க வேண்டும் என்று மைனாவுக்கு சிலர் அறிவுரையை கூற, இன்னும் ஒரு சில ரசிகர்கள் விக்ரமனை எதிர்த்து பேசும் அடுத்த ஆள் வந்துவிட்டார் என்று மைனாவை பாராட்டவும் செய்கின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: ஒரு வழியாக மாறிய கதைக்களம்.. வீட்டை மீட்ட கையோடு நடந்த தரமான சம்பவம்! மனோஜுக்கு புதிய அதிர்ச்சி! -
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications