Grand Finale:நீங்கள் வித்தியாசமான எடுத்துக்காட்டு பிக் பாஸ் பேசிய வார்த்தை.. கதறி அழுத அசீம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 கிராண்ட் பினாலே நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இறுதி கட்ட போட்டியாளராக இருக்கும் ஷிவின், விக்ரமன், அசீம் முதலியோர் மேடைக்கு வருவதற்கு முன்பு பிக் பாஸ் அவர்களிடம் பேசி இருக்கிறார்.
அப்போது அசீம் குறித்து பிக் பாஸ் கூறிய வார்த்தையை கேட்டு அசீம் கதறி அழுதி இருக்கிறார்.
ஆரம்பத்தில் இருந்து நடந்து கொண்ட விதத்தை மறைமுகமாக தாக்கி உங்களை போல எந்த சீசனிலும் ஒரு நபர் வர முடியாது என்ற நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வித்தியாசமான எடுத்துக்காட்டு என்று கூறி இருக்கிறார்.

கிராண்ட் பினாலே
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே நடைபெற்று வருகிறது. 100 நாட்களுக்கு மேலே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்த நிலையில் 105வது நாளில் இந்த நிகழ்ச்சி முடிவடைய இருப்பது ரசிகர்களுக்கு சிறு வருத்தமாக இருக்கிறது. அதுவும் கடைசி நேரத்தில் எதிர்பாராத நிகழ்வுகள் பல நடந்து கொண்டிருக்கின்றது. இது உண்மையிலேயே பலரும் எதிர்பார்க்காத திருப்பம் தான் என்று கூறி வருகின்றனர். அந்த வகையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக அசையும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்ற தகவல்கள் பரவி வருகிறது.

எல்லோருக்கும் விதிவிலக்கு
அதே நேரத்தில் அசீம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டை விட்டு கிராண்ட் பினாலே ஸ்டேஜ்க்கு வருவதற்கு முன்பு பிக் பாஸ் அவரிடம் சில மோட்டிவேஷன் வார்த்தைகளை கூறியிருக்கிறார்.அதில் ஆரம்பத்தில் அசீம் பேசிய வார்த்தையை பிக் பாஸ் நினைவுபடுத்தி இருக்கிறார். அசீம் இந்த வீட்டிற்குள் வந்த பலபேர் இப்படித்தான் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ள நினைத்து அதற்கு தகுந்த மாதிரி தங்களை வெளிக்காட்டிக்கொள்ள நினைத்துக் கொண்டு இருந்தார்கள் ஆனால் நீங்கள் அதற்கு எல்லாம் விதிவிலக்கு என்று கூறி இருக்கிறார்

வித்தியாசமான எடுத்துக்காட்டு
எந்த ஒரு விமர்சனத்திற்கும் கவலைப்படாமல் அசீம் என்ற ஒரு கேரக்டர் இதுதான் என எந்த ஒரு ஒளிவு மறைவும் இல்லாமல் இதுதான் நான் என்று மொத்தமாக வெளிக்காட்டி இருக்கீங்க, போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் என்று முதல் நாள் தொடங்கி 100 நாட்களைக் கடந்து இதற்கு முன்பு உள்ள சீசன்களின் போட்டியாளர்களுக்கும் இனிவரும் சீசன்களின் போட்டியாளர்களுக்கும் நீங்கள் ஒரு வித்தியாசமான எடுத்துக்காட்டு என்று கூறியிருக்கிறார்.

கதறி அழுத அசீம்
பிக் பாஸ் கூறிய வார்த்தைகளை கேட்டு அசீம் கதறி அழுது கொண்டிருக்கிறார். பின்பு அசீம் தேங்க்யூ பிக் பாஸ் என்று கூற ஒரு நடிகர், பொலிட்டிக்கல் சயின்ஸ் கிராட்டிவேட், சமூக சிந்தனை கொண்டவர் போன்ற பல முகங்களைக் கொண்ட ஒருவரை வரவேற்க தமிழ் உலகம் காத்திருக்கிறது என்று கூற அதற்கு தேங்க்யூ பிக் பாஸ் என்று கண் கலங்கியபடியே அசீம் கூறிக்கொண்டு நான் பட்ட கஷ்டங்கள் எல்லாமே இந்த வார்த்தையில் போயிடுச்சு என்று கூறி கண்கலங்கி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறார்.
-
Thangadurai: விஜய் டிவி தங்கதுரை வீட்டில் விசேஷம்.. வந்து குவிந்த பிரபலங்கள்.. நெகிழ வைத்த வெற்றி கதை -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
சிறகடிக்க ஆசையில் ரசிகர்கள் நினைத்தது நடந்தது.. இனியாவது விஜயா திருந்துவாரா? முத்து கொடுத்த செம ட்விஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications