"தகுதி இல்லை” மட்டமாக கருத்து சொன்ன அசீம்..கொதித்தெழுந்த ஆயிஷா.. கலவரமான பிக் பாஸ் வீடு
சென்னை: பிக் பாஸ் சீசன்6 ன் 12வது நாளின் முதல் ப்ரோமோ வெளியாகி பார்வையாளர்களிடையே பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
கொஞ்சம் கொஞ்சமாக தன் பெயரை கெடுத்துக் கொண்டு வரும் அசீம் தற்பொழுது அந்த பெயரை ஒரே அடியாக நாசம் செய்யும் கொள்ளும் விதமாக செய்துள்ள செயலால் ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களும் கமெண்ட்களில் அசீமை கழுவி ஊற்றி வருகிறார்கள்.
ஆரம்பத்தில் கொஞ்சம் நெகட்டிவ் இமேஜில் இருந்த ஆயிஷா படிப்படியாக தன்னுடைய இமேஜை பாசிட்டிவ் ரேஞ்சிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.

புகைச்சலை ஏற்படுத்தியிருக்கும் டாஸ்க்
கடந்த சீசன்களில் இருந்ததை விட ஆரம்பித்த வேகத்திலேயே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது பிக் பாஸ் சீசன் 6.ஒவ்வொரு டாஸ்கின் போதும் ஒவ்வொரு போட்டியாளரின் உண்மை முகம் வெளிவர துவங்கியுள்ளது.பிக்பாஸும் அதற்கேற்றார் போலயே ஒவ்வொரு டாஸ்கையும் கொடுத்து போட்டியாளர்களுக்கிடையே சண்டைகளையும் வாக்குவாதங்களையும் ஏற்படுத்தி வருகிறார்.கதை சொல்லும் டாஸ்க் பெரிய அளவிற்கு பரபரப்பு ஆகாத நிலையில் தற்போது அறிவித்திருக்கும் வரிசைப்படுத்துதல் டாஸ்க் எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்தார் போல் போட்டியாளர்களிடையே புகைச்சலை கிளப்பியுள்ளது.

ரேங்க் போடச் சொன்ன பிக் பாஸ்
வரிசைப்படுத்துதல் டாஸ்க் படி பிக் பாஸ் போட்டியாளர்களை தங்களுக்குள்ளாக 13 வரை ரேங்கிங் செய்து உள்ள சொல்கிறார்.அதன்படி ரேங்கிங் செய்யப்பட்டவர்களை குறித்து போட்டியாளர்கள் கருத்து கூறி வருகின்றனர்.அப்பொழுது வழக்கம்போல் எதை பேசினாலும் அஞ்சு பக்கத்துக்கு பேசும் ஆசீம் மகேஸ்வரி,விக்ரமன்,மற்றும் ஆயிஷா போன்றவர்களை குறித்து மட்டமான கருத்துக்களை தெரிவிக்கிறார்.ஆயிஷாவை ஒரு படி மேலே சென்று மிகவும் நோஸ்கட் செய்கிறார்.

வார்த்தை போர்
அசீம் கொடுத்த கமெண்டால் கடுப்பான ஆயிஷா,எதை வைத்து தன்னை தகுதி இல்லாத நபர் என்று கூறினீர்கள் என்று கேட்க பதிலுக்கு ஆசீமும் நீ தூங்குவதைத் தவிர வேற என்ன செய்திருக்கிறாய் என்று பதிலுக்கு கடுப்படிக்க வாக்குவாதம் முற்றி வார்த்தை போராக மாறுகிறது. மைக்கே காதை மூடிக்கொள்ளும் அளவிற்கு கத்தி கத்தி இருவரும் வாக்குவாதம் செய்ய ஒரு கட்டத்தில் ஆசீம் கோபத்தின் உச்சத்தில் ஆயிஷாவை 'வாடி.., போடி' என்று மரியாதை குறைவாக திட்டுகிறார்.எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் ஆசிம் 'வாடி..போடி'என்று சொன்னதும் ஆயிஷாவும் இன்னும் அதிகமாக சகட்டுமேனிக்கு ஆசீமிடம் கத்துகிறார்.

அசிங்கப்படும் ஆசீம்
தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி இன்றைய நிகழ்ச்சிக்கான ஆர்வத்தை பல மடங்கு கூட்டி உள்ளது. பெரிய அளவிற்கு மக்களிடம் ஆதரவு இல்லாமல் இருந்தாலும் கண்டுகொள்ளப்படாமல் இருந்த ஆசீமை இந்த ப்ரோமவை பார்த்த பார்வையாளர்கள் கமெண்ட்களில் திட்டி திட்டி டயர்ட் ஆகி வருகின்றனர்.ஆசிம் ஆயிஷாவை வாடி போடி என்று மரியாதை இல்லாமல் பேசியது தவறு என்றும், கொஞ்சம் கொஞ்சமாக ஆசிமின் முகம் வெளி உலகத்திற்கு தெரிய வருகிறது என்றும் பல்வேறு விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications