பிக் பாஸ் 6:ஜி.பி முத்துக்கு ஆதரவாக ஜனனி..தனலட்சுமியின் செயலை கலாய்க்கும் ரசிகர்கள்..இப்படி எல்லாமா?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஆறாவது சீசனில் ஜனனி ஜி பி முத்து க்கு ஆதரவாக தனலட்சுமி இன் செயலை கண்டித்து ரசிகர்களிடம் நன்மதிப்பை பெற்று இருக்கிறார்.
இன்றைய எபிசோட்டில், ஒரே அணியில் இருக்கும் ஜி பி முத்துவுக்கும் தனலட்சுமிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜனனி தன்னுடைய கருத்தை கூறி இருக்கிறார்.
ஜனனியின் பேச்சைக் கேட்டு தனலட்சுமி கதறி அழுவதை பார்த்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.

டிக் டாக் பிரபலங்களுக்குள் சண்டை
பிக் பாஸ் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி ஐந்தாவது நாளிலே தனலட்சுமிக்கு அதிகமான நெகட்டிவ்வர்ஸ் தொடங்கி விட்டனர். இவர் இந்த நிகழ்ச்சியில் ஆரம்பமாகும் போது ஜி பி முத்துவை போலவே இவருக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்தனர். ஜி பி முத்துவும் தனலட்சுமி இருவரும் டிக் டாக் பிரபலம் என்பதால் இவர்களுக்குள் ஒற்றுமையோடு இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. தற்போது தவறு என்று நினைக்கும் அளவிற்கு நடந்து வருகின்றனர்.

வலம் வரும் மீம்ஸ்கள்
ஜி பி முத்து தன்னுடைய வெள்ளந்தியான பேச்சால் ரசிகர்களை கவர்ந்து வைத்திருக்கிறார். அவர் ஜாலியாக பலரை திட்டி பேசும் வார்த்தைகள் தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்த நிலையில் நேற்று எபிசோட்டில் தனலட்சுமி ஜிபி முத்து நடிக்கிறார் என்று கூறியிருப்பதை கேட்டு ஜிபி முத்து கதறி அழுதுவிட்டார். அதை பார்த்த ஜிபி முத்துவின் ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் சமூக வலைத்தளத்தில் தனலட்சுமிக்கு எதிராக பல மீம்ஸ்களையும் கருத்துகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஜனனி கொடுத்த நெத்தியடி
இந்த நிலையில் ரசிகர்களின் கருத்து வீட்டிற்குள்ளே இருக்கும் ஜனனிக்கு தெரிந்து விட்டதா? அல்லது உள்ளே நடக்கும் நிலவரத்தின்படி ஜனனி இப்படி பேசுகிறாரா? என்று தோன்றும் வகையில் தான் ஜனனி தற்போது ஒரே அணியில் இருக்கும் தனலட்சுமி செய்தத்தது தவறு ஜி.பி. முத்து வயதில் பெரியவர் அவரிடம் இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று அறிவுரை கூறியிருக்கிறார் .அதைக் கேட்டு தனலட்சுமி கதறி அழுகிறார். இவருடைய அழுகையை பார்த்த நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை கமெண்ட்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

ரசிகர்களின் ரியாக்ஷன்
ஒரு சில நெட்டிசன்கள் தனலட்சுமி ஓவர் ஆக்டிங் செய்வதாக கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சிலர் தனலட்சுமி எவிக்சனில் வந்தால் அவர்தான் முதல் ஆளாக வெளியே செல்வார் என்று கரராக கூறி வருகிறார்கள். அது மட்டும் அல்லாமல் ஜிபி முத்துவின் ஆர்மிகள் ஒரு சில ஜனனிக்கு ஆதரவாகவும் தங்களுடைய தலைவரின் கருத்தை சரியாக புரிந்து கொண்ட ஜனனிக்கு தாங்கள் முழு ஆதரவு கொடுப்பதாக கூறி வருகிறார்கள். இன்னும் ஒரு சில ரசிகர்கள் உள்ளே வந்த பிறகு நான் வராமல் இருந்திருக்கலாம் என்று கூறலாமா என தனலட்சுமி சீண்டி வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications