பிக் பாஸ் 6: ஃபார்ம்க்கு வந்த ஜிபி முத்து..எதிர்த்து பேசினவங்களுக்கு இப்படி ஒரு பதிலா? அனல் பறக்குதே
சென்னை: 'வெந்து தணிந்தது காடு.. தனலட்சுமிய எவிக்ஷன்ல போடு' என்று இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் பிரோமோவை பார்த்தவர்கள் தனலட்சுமியை திட்டி தீர்த்து வருகிறார்கள்.
ஜி.பி முத்துவை மரியாதை இல்லாமல் பேசினாரா!? தனலட்சுமி என்று நெகட்டிவ் விமர்சனங்களையும் தனலட்சுமி மீது நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இந்த இரு டிக் டாக் பிரபலங்களுக்கு இடையே நடக்கும் மோதலால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மீதான ஆர்வத்தை ஆரம்பத்திலே கூட்டி உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.

பிக் பாஸுக்கு பிக் பாஸ்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜிபி முத்து போட்டியாளராக களம் இறங்கியதுமே "தலைவர் பிக் பாஸ் கிட்ட மாட்டல... பிக் பாஸ் தான் தலைவர் கிட்ட மாட்டிகிட்டாரு என்று சொல்லும் அளவிற்கு ஜி.பி முத்துவின் ரசிகர்கள் ஜி.பி முத்துவை சமூக வலைதளங்களில் கொண்டாட ஆரம்பித்து விட்டனர். ஏற்கனவே பெரிய அளவில் சமூக வலைதளங்களில் ரசிகர்களை வைத்திருக்கும் ஜி.பி முத்துவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தங்களது ஆதரவை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

வம்பு இழுக்கும் தனலட்சுமி
ஜி.பி முத்துவின் பேச்சு வழக்கில் அவ்வப்போது கெட்ட வார்த்தைகள் வந்து விழுவது வாடிக்கையான விஷயம், ஆனால் அதை எல்லாம் தற்பொழுது குறைத்துக்கொண்டு எப்பொழுதும் போல் குழந்தை தனமான மனிதராக பிக் பாஸ் வீட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜிபி முத்துவை பற்றி தெரிந்த பல போட்டியாளர்கள் அவரை தலைவரே என்று பாசத்தோடு அழைப்பதோடு மட்டுமின்றி நன்கு பேசி பழகவும் செய்து வருகின்றனர். ஆனால் டிக் டாக் என்ற ஒரே விஷயத்தில் பிரபலமான ஜி பி முத்துவும் தனலட்சுமி மோதிக் கொள்வது போல் வெளியாகி உள்ள பிரோமோ ரசிகர்களிடையே பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

ப்ரோமோ பற்ற வைத்த நெருப்பு
தற்பொழுது வெளியாகி உள்ள பிரோமோவில் 'தான் தன்னுடைய வேலையை மட்டுமின்றி.. பிறருக்கு உதவுவதும் என்னுடைய வேலை தான் என்று கூறி கொண்டிருக்கும் ஜி பி முத்துவை வம்பிழுக்கும் நோக்கத்தோடு ஜி பி முத்துவின் பேச்சை குறை சொல்வதும், ஜி.பி முத்துவை ஒருமையில் தனலட்சுமி பேசுவது போல் பிரமோ வெளியாகி உள்ளது இதை பார்த்த ஜிபி முத்து ரசிகர்கள் மட்டுமின்றி பொதுவான பார்வையாளர்கள் கூட தனலட்சுமி கமாண்டுகளில் திட்டி தீர்த்து வருகின்றனர்.

பொங்கிய ஜிபி முத்து ஆர்மி
ஜி.பி முத்துவின் ரசிகர்கள் பலர் ஜி பி முத்து ஆர்மி செயல்படுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், முதல் வாரத்திலேயே தனலட்சுமி ஆயிஷா இருவரை வெளியேற்ற வேண்டும் என்றும் பொங்கி வருகின்றனர்.ப்ரோமோ எப்படி இருந்தாலும் உண்மையில் நடந்தது என்ன என்பது நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது தான் ரசிகர்களுக்கு தெரிய வரும். இன்றைய ப்ரோமோ பிக் பாஸ் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கூட்டி இருப்பதோடு மட்டுமின்றி தனலட்சுமி ஆயிஷா போன்ற போட்டியாளர்கள் மீது கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது என்று பலர் கமாண்டுகளில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications