சமூக வலைத்தளத்தில் அசீமிற்கு மெசேஜ் செய்து திட்டும் நெட்டிசன்கள்.. இது தான் "அறமா” ரசிகர்கள் கேள்வி?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்து இருக்கிறது.
இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
அசீம் வெற்றி பெற்றதை ஏற்றுக் கொள்ள முடியாத ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தில் அவருக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அசீம் பல நேரங்களில் மரியாதை இல்லாமல் பிறரிடம் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பேசியதை குறித்து அவரை பலர் திட்டி வருகிறார்கள்.
விக்ரமனின் ரசிகர்கள் விக்ரமனுடைய கருத்தை பின்பற்றாமல் அசீமை திட்டி வருவதை குறித்து அசீமுடைய ரசிகர்கள் நீங்கள் செய்வது மட்டும் சரியா என கேள்வி எழுப்புகின்றனர்.

ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி இதுவரைக்கும் எந்த சீசனிலும் இல்லாத வகையில் கடைசி நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. இந்த சீசனில் ஆரம்பத்தில் இருந்து டைட்டில் வின்னர் அசீமிற்கு கிடைக்கக்கூடாது என்று ரசிகர்கள் அதிகமானோர் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தனர். அசீமிற்கு டைட்டில் கொடுத்து விட்டால் அது தப்பான முன் உதாரணமாக மாறிவிடும். காரணம் பொதுவெளியில் பல பேர் பார்க்கும் ரியாலிட்டி ஷோவில் இவர் அடுத்தவர்களை மரியாதை இல்லாமல் பேசி, பாடி லாங்குவேஜ் காட்டி, தரக்குறைவாக நடத்தி வருகிறார். இதனால் இவரைப் பாராட்டினால் இவர்களுடைய ரசிகர்களும் இதை தான் செய்வார்கள் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.

முடிவில்லாத கருத்து மோதல்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறம் வெல்லும் என்ற ஒரே வார்த்தையை கூறிக்கொண்டு எந்த இடத்திலும் தன்னுடைய நேர்மை தவறாமல், அதே நேரத்தில் பிறரை காயப்படுத்தாமல், தன்னுடைய நிலையில் இருந்து சிறிதும் பிறழாமல் இருந்த ஒரு போட்டியாளர்களில் விக்ரமன் மற்றும் ஷிவின் இருந்தனர். இவர்கள் இருவருக்கும் தான் டைட்டில் கிடைக்க வேண்டும் என்று அதிகமான ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் நிகழ்ச்சி முடிந்து இரண்டு நாட்களாக சமூக வலைதளத்தில் அதிகமான கருத்துக்களும், கருத்து மோதல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

திட்டும் ரசிகர்கள்
அதில் அதிகமான ரசிகர்கள் அசீம் பி ஆர் டீம் சப்போர்ட்டோடு ஜெயித்துவிட்டார் என்று குற்றம் சுமத்தி வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் விக்ரமன் உடைய தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத ரசிகர்கள் பலர் அசீமுடைய ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நேரடியாக அவருக்கு மெசேஜ் செய்து அதை ஸ்கிரீன்ஷாட் ஆக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் தான் டைட்டில் ஜெயித்த போட்டியாளரை இவ்வளவு ரசிகர்கள் திட்டி தீர்க்கிறார்கள். இது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ட்விட்டர் பக்கத்தில் இப்ப வரைக்கும் அசீமிற்கு எதிரான வாசகங்கள் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

இதுதான் அறமா
இந்த நிலையில் அசீமுடைய ரசிகர்கள் பலர் அசீம் செய்தது தவறு என்று கூறி அதே தவறை தானே நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள்? பொதுவெளியில் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி அசீமை திட்டிக்கொண்டு, அதை ஸ்கிரீன்ஷாட் ஆக வெளியிடுகிறீர்கள். இதுதான் விக்ரமன் சொன்ன அறமா? ஒருவரை இப்படியா தரம் தாழ்த்தி பேசுவது. நமக்கு பிடிக்கவில்லை என்றால் என்ன வேணாலும் பேசலாமா? என பல்வேறு கேள்விகளையும் ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்த மோசமான கமண்டுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அதை தங்களுடைய பதிவுகளில் பகிர்ந்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications