"விளையாட்டு மட்டும் அல்ல” அசீம் பற்றி வெளிப்படையாக பதிவு வெளியிட்ட ஏடிகே.. பல உண்மைகளை கூறிவிட்டாரே!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியில் வின்னராக அசீம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு பிறகு முதல் முறையாக அசீமை நேரடியாக சந்தித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் பலமுறை சண்டையிட்டு இருந்தாலும் வெளியே வந்த பிறகு அசீம் பற்றி ஏடிகே கூறிய வார்த்தையை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மீண்டும் அசீம் அதிகமாக செலவிட்ட இடத்திற்கே சென்று வீடியோவை எடுத்து பல ரகசியங்களை அம்பலப்படுத்தி இருக்கிறார்.

எதிர்பாராத மாற்றங்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி 105 நாட்கள் ஒளிபரப்பாகி நேற்று உடன் முடிவடைந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் இல்லாத வகையில் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்றது. ஆரம்பத்தில் இருந்து எதிர்பார்த்த வெற்றியாளர் கடைசி நேரத்தில் மாறிவிட்டார் .இது ரசிகர்களுக்கு அதிகமான அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஆனால் இவர் தான் நேர்மையாக இருக்கிறார் என்று அசீமை பாராட்டிய ரசிகர்கள் பலரும் அவருடைய வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். சமூக வலைத்தளத்தில் அசீம் மற்றும் விக்ரமுடைய ரசிகர்கள் கருத்து மோதல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அசீமுடைய வெற்றியை எதிர்க்கும் ரசிகர்கள் பலர் பிக் பாஸ் நிகழ்ச்சியை கலாய்த்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

போட்டியாளர்களின் செயல்பாடு
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை டைட்டில் ஜெயித்த அசீம் உடன் முதல் முறையாக ஏடிகே வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். ஏடிகே ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததும் விக்ரமனை சந்தித்து தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே செல்லும்போது விக்ரமனிடம் எதற்காக கட்டிப்பிடித்து அவருக்கு தன்னுடைய அன்பை காட்டவில்லை என்பதை பற்றி அந்த வீடியோவில் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து அசீமுடன் வீடியோவை எடுத்திருக்கிறார். அசீம் வெற்றி பெற்ற பிறகு பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் மேடையில் அவரோடு வெற்றியை பகிர்ந்து கொண்டாடி இருந்தனர். ஆனால் சமூக வலைத்தளத்தில் பலர் அசீமுடைய வெற்றியை கொண்டாடவில்லை.

இணைந்த குடும்பம்
ஆனால் ஏ டி கே பிக் பாஸ் வீட்டிற்குள் அதிக முறை அசீமுடன் சண்டையிட்டு கொண்டிருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதல் முறையாக அசீமை பாராட்டி அவரோடு வீடியோ எடுத்திருக்கிறார். அந்த வீடியோவிற்கு" விளையாட்டு ஒரு விளையாட்டு மட்டுமல்ல அசீம் மற்றும் நான், எங்கள் குடும்பம் பிக் பாஸ் 6 மூலம் இணைத்துள்ளோம். எங்களிடம் எவ்வளவோ வாக்குவாதங்கள் சண்டைகள் இருந்தாலும் சிறந்த நட்பை உருவாக்கினோம். விளையாட்டு மற்றும் வீடு அதை கோருகிறது. கிரிக்கெட் மேட்ச் எப்படி நடக்குமோ அப்படித்தான் நாள் முடிவில் நாங்கள் நண்பர்கள். இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கும் இடம் தான் நாங்கள் இருவரும் அதிகமாக நேரம் செலவழித்தோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ரசிகர்களின் கருத்துக்கள்
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் கலாய்த்து பதில் அனுப்பி வருகின்றனர். எடிகே கவனம் அப்புறம் சண்டைக்கு வருவார் என்று ஒரு ரசிகர் கருத்து கூற, இது புகை பிடிக்கும் அறை அதை நாங்கள் கண்டுபிடித்தோம். அப்போ நீங்க பிக் பாஸ் வீட்டிற்குள் இந்த வேலையை தான் அதிகமாக சென்றீர்களா? என்று இன்னொரு ரசிகர் கேள்வி எழுப்ப, உண்மையான நட்பு என்ன சண்டை வந்தாலும் பிறகு சேர்ந்து கொள்ளும் என்று ஒரு சில ரசிகர்கள் பாராட்டியும் வருகின்றனர். இன்னும் பல ரசிகர்கள் இந்த பிரண்ட்ஷிப் பத்தி ஒரு மாசத்துக்கு அப்புறம் சொல்லுங்க நாங்க நம்புகிறோம் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications