பிக் பாஸ் 7 ஐசு வெளியிட்ட சர்ப்ரைஸ் ஹிண்ட்.. இனி ஆட்டம் ஆரம்பம்? இப்பவாவது புரிந்ததே?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமாகி பிரபலமான ஐசு இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரே ஒருமுறை மட்டுமே எல்லாரிடமும் மன்னிப்பு கேட்டு பதிவு வெளியிட்ட ஐசு இப்போது பல நாட்கள் கழித்து பதிவு வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதே நேரத்தில் ஐசு வெளியிட்ட இந்த பதிவிற்கு என்ன காரணமாக இருக்கும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல போட்டியாளர்கள் ரசிகர்களில் மத்தியில் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் ஒருவர்தான் ஐசு. இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாக இருந்தாலும் இதற்கு முந்தைய அதாவது பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் அமீர் உடைய உறவினராக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார்.
அப்போதே இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்பது பலருடைய ஆசையாக இருந்தது. காரணம் அவரோடு சேர்ந்து ஐசு டான்ஸ் ஆடி இருந்தது பல இளைஞர்களையும் கவர்ந்தது. அதுபோல ஐசு சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். பல டான்ஸ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டிருக்கிறார்.
இதனால் சமூக வலைத்தளத்தில் இவரை அதிகமான இளைஞர்கள் பாலோ பண்ணி வருகின்றனர். பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இவர் அறிமுகமான முதல் சில வாரங்களுக்கு இவருக்கு வரவேற்பு அமோகமாக இருந்தது. பிறகு இவர் மாயா கேங் உடன் சேர்ந்து விளையாடிய விதம் ரசிகர்களின் மத்தியில் இவரை பற்றி விமர்சிக்க வைத்தது. அதுவும் நிக்சனோடு இவர் நெருங்கி பழகி வந்ததும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

இப்படியான நிலையில் தான் சில வாரங்களுக்கு முன்பு ஐசு வெளியேற்றப்பட்டு இருந்தார். அதற்கு முன்பு பிரதீப்புக்கு ஐசு ரெட் கார்டு கொடுத்ததால் அவரை பிரதீப்புடைய ரசிகர்கள் திட்டி வந்தனர். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த ஐசு பிரதீப்பிடம் மன்னிப்பு கேட்டு நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதற்குப் பிறகு சமூக வலைத்தளத்தில் எந்த போஸ்டமே போடாமல் இருந்த ஐசு இப்போது முதல் முறையாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் தம்சப் இமேஜ் வைத்திருக்கிறார்.
இது எதற்காக என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஒருவேளை பிக் பாஸ் வீட்டிற்கு மீண்டும் ஐசு அனுப்பி வைக்கப்படுகிறாரா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அல்லது நேற்று கூல் சுரேஷ் வெளியேற்றப்பட்டதற்காக ஐசு இப்படி ஒரு இமோஜி வெளியிட்டு இருக்கிறாரா என்பதும் பலருடைய கேள்வியாக இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications