Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஐசு குடும்பத்தோடு இதுதான் பிரச்சனை.. அன் ஃபாலோ குறித்து வெளிப்படையாக பேசிய அமீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் ஐந்து நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான அமீர் தன்னை வளர்த்துவிட்ட குடும்பம் என்று இப்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் ஐசுவின் குடும்பத்தை பற்றி பெருமையாக பேசி இருந்தார்.

அதோடு தனக்கு வாழ்க்கை கொடுத்து நான் இந்த அளவிற்கு வளர்ந்து வந்ததற்கு காரணம் ஐசுவின் அப்பா மற்றும் அம்மா தான் என்று பல இடங்களில் அமீர் பெருமையாக பேசி இருந்தார். ஆனால் இப்போது அமீர் அந்த குடும்பத்தோடு பேசவில்லை, பிரிந்து இருக்கிறார் என்ற செய்திகள் பரவி வருகிறது.

bigg boss tamil season 7 Aamir spoke openly about Aisu family Unfollow

இந்த நிலையில் இப்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஐசுவின் செயல் குறித்து விமர்சித்து பேசி இருக்கும் அமீர் தான் எதனால் அந்த குடும்பத்தை பிரிந்தேன் என்றும் பேசி இருக்கிறார்,

விஜய் டிவியில் நடன இயக்குனராக இருந்த அமீர் கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக வந்து சக போட்டியாளரான பாவனியை காதலித்தார். பிக் பாஸ் வீட்டிற்குள் பாவனி அமீரை காதலிக்கவில்லை என்று தம்பி என்று அழைத்துக் கொண்டு இருந்தாலும் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிக் பாஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அப்போது தன்னுடைய காதலை வெளிப்படையாக பாவனி கூறி இருந்தார்.

அதே நேரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது சைஜி மேம் மற்றும் அவருடைய கணவர் அஷ்ரப்பால் தான் நான் இந்த அளவிற்கு வளர்ந்து வந்திருக்கிறேன் என்றும் தன்னுடைய அம்மாவின் இறப்பிற்கு பிறகு தன்னுடைய வாழ்க்கையை மாற்றியது அஷ்ரக் குடும்பத்தினர் தான் என்று அமீர் கூறி இருந்தார். அதுபோல பிரீஸ் டாஸ்க்கில் எல்லா போட்டியாளர்களின் குடும்பத்தினர் வந்த போதும் அமீருக்காக அஷ்ரப் குடும்பத்தினர் தான் வந்திருந்தனர்.

அந்த அஷ்ரப் குடும்பத்தின் மூத்த மகள்தான் ஐசு தற்போது இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இப்போது நிக்சன்னோடு இவர் அதிகமாக பேசப்பட்டு வருகிறார். இவர்கள் இருவரும் பற்றி அதிகமான மீம்ஸுகளும் வீடியோக்களும் பரவி வரும் நிலையில் இது பற்றி சமீபத்தில் அமீர் பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் உள்ளே நான் உள்ளே போனால் வெளியே போட்டியாளர்களுக்கு அளித்திருக்கும் பெயரை அப்படியே கொண்டு போய் கொடுப்பேன்.

அப்போதுதான் அவர்களுக்கு வெளியே நம்முடைய பெயர் என்ன மாதிரி போய்க்கொண்டிருக்கிறது என்று தெரியும். பொதுவாக போட்டியாளர்களுக்கு வெளியே என்ன நடக்கிறது என்பது தெரியாது. உள்ளே இருப்பவர்களில் நாம் நல்லவர்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் நிஜத்தில் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள். நாம் கெட்டவர்கள் என்று முகத்துக்கு நேராக திட்டி கொண்டிருப்போம். ஆனால் அவர்கள் நல்லவர்கள் என்பது வெளியே பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தெரியும்.

அதுபோல பிக் பாஸ் வெற்றிலையில் இருக்கும் போட்டியாளர்களுக்கு உள்ளே நடக்கும் நிலவரம் அவர்களுக்கு புரியாது. அதை நான் புரிய வைப்பதற்காக முயற்சி செய்வேன். அதுபோல நான் சமீபத்தில் ஐசுவின் குடும்பத்தோடு பிரிந்து இருக்கிறேன் என்று சில செய்திகள் பரவி வருகிறது. அது குறித்து என்னால் இப்போது விளக்கம் முடியாது.

bigg boss tamil season 7 Aamir spoke openly about Aisu family Unfollow

அதே நேரத்தில் ஐசுவின் பெற்றோர்களை சமூக வலைதள பக்கத்தை அன்பாலோ செய்து விட்டேன் என்று சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய ப்ரொபைல் எடுத்துப் பார்த்தால் தெரியும். ஒருவேளை ஐசுவின் குடும்பத்தினர் வேண்டுமென்றால் என்னை அன்பாலோ செய்து இருக்கலாம். என்னை வளர்த்து விட்டவர்களை நான் எப்போதும் மறந்தது கிடையாது.

எனக்கு ஒரு சின்ன உதவி செய்தவர்களை கூட நான் பெரியதாக நினைத்திருக்கிறேன் என்றும் அந்த பேட்டியில் அமீர் கூறி இருக்கிறார்.ஆனால் ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வரும் அமீர் ஆரம்பத்தில் இருந்தே பிரதீப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார். அதுபோல ஐசு குறித்து வரும் நெகட்டிவ் கருத்துக்களுக்கும் தொடர்ச்சியாக அவர் லைக் செய்து வருவதும் கூட அஸ்ரப் குடும்பத்தினருக்கு கோபமாக இருக்கலாம் என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+