எல்லாரும் பிரதீப்க்கு சப்போர்ட் பண்றாங்க.. ஆனால் ஆரி சப்போர்ட்? அப்போ டைட்டில் வின்னர் அந்த நடிகையா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருக்கும் போட்டியாளர்களில் தன்னுடைய சப்போர்ட் யாருக்கு என்பது குறித்து
நடிகரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னருமான ஆரி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.
இணையத்தில் அதிகமான பிரபலங்கள் சமீபத்தில் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப்க்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ஆரி பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அர்ச்சனாவிற்கு தன்னுடைய சப்போர்ட் கொடுத்து அவர் வெற்றி பெற வாழ்த்தி இருக்கிறார். அதை பற்றி பார்க்கலாம்.
இப்போது இணையத்தில் ஒரு சில நாட்களாகவே பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய விவாதம் அதிகமாக இருந்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை பற்றி பல பிரபலங்களும் தொடர்ச்சியாக தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதள பக்கங்களிலும் பேட்டிகளிலும் தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் கடந்த வாரத்தில் பிரதீப் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பது பெண்களுக்கு ஆபத்து என்று அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டது குறித்து பலரும் இது தவறான முடிவு என்று கருத்து கூறி வருகின்றனர். அதோடு பிரதீப்க்கு ஆதரவாக அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் மூன்று பேரும் பேசிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு அதிகமான சப்போர்ட்டுகளும் கிடைத்துக் கொண்டிருக்கிறது.
அதே நேரத்தில் பிரதீப் வெளியே செல்வதற்கு காரணமாக இருந்த மாயா, பூர்ணிமா, ஜோவிகா, ஐசு, நிக்சன் போன்றவர்கள் பற்றி அதிகமானோர் இணையத்தில் கழுவி கழுவி ஊத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பற்றி கடந்த ஐந்தாவது சீசனில் டைட்டில் வின்னராக வந்த நடிகர் ஆரி அர்ஜுனன் எக்ஸ் தளத்தில் "அர்ச்சனா நீங்கள் விளையாட்டை தொடங்குங்கள்.. வலுவாக இருங்கள்.." என்று பதிவு வெளியிட்டு இருக்கிறார்.
இது அதிகமான கருத்துக்களையும் லைக்குகளையும் பெற்றுக் கொண்டிருக்கிறது. அதோடு ஏற்கனவே அர்ச்சனா, தினேஷ், விசித்திராவிற்கு பிரதீப் உடைய ரசிகர்கள் சப்போர்ட் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில் இப்போது இவர்களுக்கு ஆரி அர்ஜுனனின் ரசிகர்களும் சப்போர்ட் கொடுக்க தொடங்கி இருக்கின்றனர்.
இந்த வார எலிமினேஷனுக்கு நாமினேஷன் லிஸ்டில் அர்ச்சனா, விசித்திரா, தினேஷ், பிராவோ, பூர்ணிமா, ஐசு போன்றவருடைய பெயர் இருக்கும் நிலையில் இதில் அர்ச்சனா தான் இப்போது உள்ள நிலவரப்படி வாக்குகளின் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறார். அதுபோல இப்போது அர்ச்சனா தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்பது போன்று கடைசி வரை இருந்தால் இவர்தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்றும் பலர் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications