பிக் பாஸ் 7: அந்த உறவையே கொச்சைப்படுத்துறாங்க.. பிரபல போட்டியாளர்களை கிழித்தெடுத்த நடிகை சனம்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரான சனம் தன்னுடைய கருத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு இருக்கிறார்.

அண்ணன், தம்பி என்று பிக் பாஸ் வீட்டிற்குள் சொல்லி வெளியே போய் ஒன்றாக ஊர் சுத்திட்டு இருக்கிறாங்க என்று முந்தைய சீசன் போட்டியாளர்களையும் சேர்த்து சனம் திட்டி இருக்கிறார்.
அதோடு இப்போது உள்ளே இருக்கும் ஒரு சில போட்டியாளர்கள் குறித்தும் சனம் ஷெட்டி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தான் அதிகமாக இணையத்தில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது.
கடந்த சீசனில் அசல் கோளாறு சகபெண் போட்டியாளர்களிடம் தொட்டு உரசி விளையாடிக் கொண்டிருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் இப்போது பிக் பாஸ் வீட்டிற்குள்ளே நிக்சன் அடிக்கடி ஐசுவை தொட்டு தடவி அவரை கொஞ்சிக் கொண்டு அலைவது பார்ப்பதற்கு கேவலமாக இருக்கிறது என்று பலர் கலாய்த்தும் மீம்ஸ்கள் வெளியீட்டும் திட்டிக் கொண்டிருக்கின்றனர்.
இருவருக்கும் இடையே அதிகமான நெருக்கம் இருப்பதும் ஐசு மற்றும் நிக்சன் இருவரும் கண்ணாடியின் எதிர் எதிரே நின்று கொண்டு இருவரும் மாறி மாறி முத்தம் மழை பொழிந்ததும் இணையத்தில் பேசும் பொருளாக மாறி இருக்கிறது. இந்த நிலையில் நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான சனம் செட்டி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை போட்டு இருக்கிறார்.
அதில் ஐசு மீது எனக்கு இருக்கும் மிகப்பெரிய ஏமாற்றமே, தம்பி தம்பி என்று சொல்லி இப்போ வேற மாதிரி போய் இருக்குல்ல இப்போ இவர்களுடைய நடவடிக்கையும் உறவு முறையும் எந்த இடத்திற்கு சென்று இருக்கிறது பாருங்கள். இது இவர் மட்டுமல்ல அனைவருக்கும் தான் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால் அண்ணன் தங்கை உறவு என்பது மிகவும் புனிதமானது.
அப்படி ஒரு உறவை ஐசு போன்ற நபர்கள் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது இந்த சீசனில் மட்டும் நடப்பது இல்லை. இதற்கு முன்னாடி சீசனில் கூட அண்ணா அண்ணா என்று சொல்லிவிட்டு வெளியே வந்து ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் செய்ததால் தான் இவர்களும் இப்போது அப்படியே செய்கிறார்கள்.
இது பார்ப்பதற்கு ரொம்ப கேவலமாக இருக்கிறது என்று பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்து அதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அத்தோடு ஐசு தனக்கு ஏற்கனவே வெளியே ஒரு காதலன் இருக்கிறார் என்று சொன்ன பிறகும் நெக்சன் உனக்கு அவனை மூணு மாசமாக தானே தெரியும் என்று கேட்டதும், அதுபோல ஐசுவிடம் உன்னுடைய கண்கள் அழகாக இருக்கிறது, புருவம் அழகாக இருக்கிறது, உதடு அழகாக இருக்கிறது என்று தொட்டு தடவி பேசிக் கொண்டிருப்பதும் தற்போது இணையத்தில் பலரால் விவாதிக்கப்பட்டு வருகிறது
. இந்த நிலையில் தான் வைல்ட் கார்டாக உள்ளே போன போட்டியாளர்கள் இவர்கள் இருவருடைய நடவடிக்கையை குறித்து ஜாடை மாடையாக சொன்னதை வைத்து புரிந்து கொண்ட ஐசு நிக்சனிடம் இந்த வாரம் நான் வெளியே போயிட்டா நல்லா இருக்கும்னு தோணுது என்று கூற, அதற்கு நிக்சன் எனக்கு பர்சனலா உன்னை பிடிக்கும் அதே மாதிரி தான் உனக்கும்.

அது போல உன்னோட கம்பெனி எனக்கு புடிச்சிருக்கு அவ்வளவுதான். இப்போதும் நீ பர்சனலாக பேசுவதை நிறுத்திக் கொள்வோம் என்று சொன்னால் அவ்வளவுதான் முடித்துக் கொள்ளலாம் என்று சொல்லி இருந்தார். அதற்கு சரி ஓகே அப்படியே செய்வோம் என்று ஐஸு சொல்லியிருந்தார். ஆனாலும் அப்போதைக்கு இருவரும் பிரிந்து இருந்த நிலையில் சில மணி நேரம் கழித்து மீண்டும் இவர்கள் ஒரே தட்டில் சாப்பிட்டு மாறி மாறி ஊட்டி கொண்டனர். அந்த வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications