பிக் பாஸ் 7: அர்ச்சனாக்கு அந்த பிரச்சனை.. புகை பிடிக்கும் பழக்கத்தை வைத்து மோசமாக விமர்சித்த வனிதா

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருக்கும் அர்ச்சனாவை பற்றி நடிகை வனிதா தன்னுடைய ரிவியூவில் கடுமையாக விமர்சித்து இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பிக்பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா அதிகமாக புகை பிடிக்கிறார்.. அதே நேரத்தில் அர்ச்சனாவுக்கு வேறு சில பிரச்சனைகள் இருக்கிறது என்றும் வனிதா குற்றம் சாட்டி இருக்கிறார்.

அதுபோல அர்ச்சனாவின் அளவுக்கு அதிகமான கோபத்திற்கு காரணம் இதுதான் என்று சில காரணங்களை வனிதா கூறி இருக்கிறார். அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

Bigg Boss Tamil season 7 actress Vanitha criticizing Archana

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அர்ச்சனா நுழைந்திருந்தார். அர்ச்சனா ஏற்கனவே ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமாக இருந்தாலும் பிக் பாஸ் வீட்டில் ஆரம்பமான முதல் சில நாட்கள் அழுமுஞ்சாகத்தான் இருந்தார். ஆனாலும் உள்ளே சென்ற ஒரு சில நாட்கள் இவரை மாயா கேங் டார்கெட் செய்து புல்லி செய்து வந்தனர்.

ஆனால் அவர்களின் கும்பல் கேள்விகளுக்கு ஆரம்பத்தில் அமைதியாக இருந்த அர்ச்சனா பிறகு அவர்களுக்கு பதிலடி கொடுத்து ஓட வைத்தார். இதனால் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகியது. மேலும் வார இறுதி நாட்களில் இவருக்கு வரும் கைத்தட்டல்களை பார்த்து தான் செல்லும் பாதை சரி என்று புரிந்து கொண்ட அர்ச்சனா தன்னுடைய விளையாட்டை வேற லெவலில் தொடங்கி இருக்கிறார். ஆனால் இவருக்கு எந்த அளவிற்கு ஆதரவு இருக்கிறதோ அதே அளவிற்கு விமர்சனங்களும் இருக்கத்தான் செய்கிறது.

அதற்கு காரணம் இவருடைய புகைப்பிடிக்கும் பழக்கம் என்று பலர் கூறி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் ஸ்மோக்கிங் அறை இருப்பது தெரிந்த விஷயம் தான். இதில் ஆண்கள அடிக்கடி சொல்வதை விட இந்த சீசனில் அர்ச்சனா அடிக்கடி புகைபிடிக்கும் அறை அருகே செல்கிறார். அதோடு இவர் செல்வது மட்டுமல்லாமல் துணைக்கு மற்றவர்களையும் அழைத்து செல்கிறார் என்று 24 மணி நேரம் எபிசோட்டை பார்க்கும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

பூர்ணிமா, அர்ச்சனா, விஷ்ணு போன்றோர் ஒரு முறை கயிற்றில் கட்டி போடப்பட்டனர். அப்போதும் அர்ச்சனா புகை பிடிக்கும் அறைக்கு சென்று புகை பிடித்தார். இது குறித்து அர்ச்சனா புகைபிடிப்பதால் தன்னுடைய ஆரோக்கியம் கெட்டு பாதிக்கபடுகிறது என்று விஷ்ணு நான் கமல் சாரிடம் சொல்ல போகிறேன் என்றும் கூறியிருந்தார். இப்படியான நிலையில் நடிகை வனிதா இது குறித்து ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார்.

அதில் ட்ரிங்க்ஸ், ஸ்மோக்கிங் பழக்கம் அர்ச்சனாவிற்கு இருக்கிறது. ட்ரிங்க்ஸ் என்பது டீ, காபி குடிக்கும் பழக்கம். காபி கிடைக்கவில்லை என்று நான் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமாக சண்டை போட்டு இருக்கிறேன். அதை பெரிதாக பேசினால் இதுவும் பேச தான் வேண்டும். இதெல்லாம் ஒரு விதமான போதை பொருள் தான். அர்ச்சனா கோபப்பட்டு கத்துவதற்கு இப்படி நடந்து கொள்வதற்கும் இதுதான் காரணம் என்று அந்த வீடியோவில் வனிதா கூறி இருக்கிறார்.

இதற்கு பலரும் வனிதாவை கிண்டல் செய்து கமெண்ட் வெளியிட்டு வருகிறார்கள். காரணம் ஏற்கனவே வனிதா புகை பிடிப்பது, மது பாட்டில்களை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இந்த நிலையில் நீங்கள் அடுத்தவர்களை எப்படி குறை சொல்ல முடியும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. ஆனாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு அர்ச்சனா இதற்கெல்லாம் என்ன பதிலடி கொடுக்கப் போகிறார் என்பதும் பலருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+