பிக் பாஸ் 7: பாரதி கண்ணம்மாவை விடுங்க.. பிக் பாஸ்க்கு வந்ததுமே வினுஷா தேவி செய்த அதிரடி சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பிரமாண்டமாக தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அதில் போட்டியாளர்கள் வரிசையாக அறிமுகப்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

bigg boss tamil season 7 actress Roshini Haripiriyan fighting with Pradeep

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமான நடிகை வினுஷா தேவி முதல் நாளே பிரதீப் உடன் தலைவர் பதவிக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார் அது பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் ரசிகர்கள் அதிகமாக எதிர்பாத்தப்படியே இந்த முறை பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள அறிமுகம் ஆகி கொண்டிருக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனில் பேசப்பட்ட பாரதிகண்ணம்மா சீரியல் நடிகை வினிஷா தேவி போட்டியாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

இந்த நிலையில் ஐந்தாவது போட்டியாளராக என்ட்ரியான வினுஷா தேவி மேடையில் கமல்ஹாசன் முன்பு தன்னுடைய நிறத்தை குறித்து தான் பட்ட அவமானங்கள் குறித்தும், தற்போது தான் தன்னுடைய நிறத்தினாலே தனக்கு வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருப்பது குறித்தும் தன்னை போலவே பலர் நிறத்தை குறித்து வருத்தத்தை இனி தவிர்க்க வேண்டும் என்பதற்காக தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பதாகவும் பேசிக் கொண்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றதும் ஆரம்பத்தில் அனைவரிடமும் அறிமுகம் ஆகிக் கொண்டு பிறகு இந்த வார தலைவர் பதவிக்காக அதற்கு முன்பு தலைவராக இருந்த நடிகர் பிரதிப்போடு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அதில் நான் ஏற்கனவே ஸ்கூல் காலேஜில், எல்லாம் லீடராக இருந்திருக்கிறேன். ஆனால் அங்கே எல்லாம் ரூல் பண்ண முடியவில்லை. ஆனால் இந்த வீட்டிற்குள் நான் முதல் வாரத்திலேயே லீடராக இருந்து எல்லாரையும் ரூல் பண்ண வேண்டும். என்னை பற்றி எல்லோருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் அதற்கு பிரதீப் இதை எல்லாம் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் தலைவர் பதவிக்கு போட்டி போட்டால் இனி வரும் போட்டியாளர்களையும் நீங்கள் எதிர்த்து அவர்களுடைய வெறுப்பை சந்திக்க வேண்டியது இருக்கும். ஆனால் நீங்க இந்த தலைவர் பதவியை எனக்கு விட்டு தந்தால் நான் இனி வரும் போட்டியாளர்களையும் பகைத்துக் கொள்ள ரெடி. அவர்களை எல்லாம் உங்களுக்காக செட் பண்ணி தருவேன் என்று பேசிக் கொண்டிருந்தார்.

Bigg Boss season 7: முதல் கேப்டன் யார்? வந்ததுமே சண்டையை மூட்டி விட்ட பிக் பாஸ்!

அதற்கு வினுஷா தேவி நீங்க யாரு அவர்களை எனக்கு செட் பண்ணி தருவதற்கு. நானே அவர்களோடு பழகி விடுவேன். எனக்கு சண்டை போட்டு தான் அவர்களை ஜெயிக்க வேண்டும் என்று இல்லை. அதுபோல நான் யாரிடம் பழக வேண்டுமோ அதை நானே பார்த்துக்கொள்வேன் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். பாரதி கண்ணம்மா சீரியல் கண்ணமாவாக போல்டாக பலருக்கும் பரீட்சையமானது போலவே முதல் நாள் தன்னுடைய பதிலடி போல்டாக எடுத்து வைத்திருக்கிறார். இனி வரும் நாட்களில் எப்படி இருக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+