நிக்சன் உருவ கேலி மட்டும் செய்யல.. வினுஷா திடீர் பதிவு.. ஆதரவுக்கு வந்த நடிகை.. நடந்தது இதுதானாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை வினுஷா தேவி இருக்கும்போது அவரை சக போட்டியாளராக இருந்த நிக்சன் உருவ கேலி செய்திருக்கிறார்.

வினுஷா பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த வரைக்கும் இது அவருக்கு தெரியாமல் இருந்த நிலையில் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேறிய பிறகு அந்த வீடியோக்களை முழுசாக பார்த்து இருக்கிறார்.

Bigg Boss Tamil season 7 actress Vinusha Devi was mocked by co-contestant Nixon

அதே நேரத்தில் நேற்று நிக்சன் தான் வினுஷா உடல் அமைப்பை பற்றி பேசியதற்கு வினுஷாவிடம் மன்னிப்பு கேட்டு விட்டேன் என்று கூறியிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்து வினுஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இப்போது சண்டை சச்சரவுகள் மட்டுமல்லாமல் சர்ச்சைகளால் வைரலாக தொடங்கி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டது பெரிய அளவில் பேசப்பட்டு கொண்டிருக்கிறது. ஆனால் பிரதீப்பை விடவும் மோசமாக உள்ளே நிக்சன் வினுஷாவை உடல் அமைப்பை வைத்து கிண்டல் செய்து இருக்கிறார்.

ஆனால் அதை சொல்லி வினுஷாவிடம் மன்னிப்பு கேட்காமல் அனுப்பி இருக்கிறார். அதை வினுஷா தேவி வெளியே வந்த பிறகு தெரிந்து கொண்டதும் பல பேட்டிகளில் நிக்சன் நடந்து கொண்ட விதம் குறித்து தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு இருந்தேன். இப்படியாக இருக்கும் நிலையில் நேற்றைய எபிசோடில் இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் மற்றவர்களை பற்றி தவறாக பேசியிருக்கிறார்களோ அவர்கள் பேசிய வசனங்கள் டிவியில் போடப்பட்டது.

அதோடு அதற்கான விளக்கத்தையும் ஹவுஸ்மெட்டுகள் கொடுத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில் வினுஷா தேவியின் உடல் அமைப்பை பற்றி நிக்சன் தவறாக பேசியது பற்றியும் அனைவருக்கும் தெரிய வந்திருக்கிறது. அதில் நிக்சன், வினுஷாவை பார்க்க பிடிக்கல. அவர் வேலைக்காரி மாதிரி இருக்கிறார்.

மண்டை சிறியதாக இருக்கிறது. அங்கங்க இருக்க வேண்டியது இல்லை. கண்கள் அழகாக இருக்கிறது என்று வந்து பேசி இருக்கிறார். இந்த வீடியோ வினுஷா பிக்பாஸுக்குள் இருக்கும்போதே சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இதற்கு வருத்தம் தெரிவித்து வினுஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு போட்டு இருக்கிறார்.

அதில் பிக்பாஸ் உள்ளே நான் இப்போது இல்லாமல் இருக்கலாம். ஆனால் நான் இதை எல்லாருக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். முதல் வாரத்தில் நிக்சனுக்கும் எனக்கும் நல்ல உறவு இருந்தது. நான் அவரை ஒரு சகோதரனாக உண்மையாகவே கருதினேன். நான் அவருடன் அப்படித்தான் நடந்து கொண்டேன்.

Bigg Boss Tamil season 7 actress Vinusha Devi was mocked by co-contestant Nixon

ஆரம்பத்தில் அவர் எப்போதும் என்னை ட்ரோல் செய்ய தொடங்கினார் என்பதை நான் பொருட்படுத்தவில்லை. அது நன்றாக வேடிக்கையாக இருந்தது. ஆனாலும் நாட்கள் செல்ல செல்ல அவர் எல்லை கடந்து பேச தொடங்கினார். மேலும் அவருடைய நடவடிக்கைகள் என்னை கஷ்டப்படுத்தியது.

அதனால் நான் அதை அவரிடம் நிறுத்தும்படி சொல்லி இருந்தேன். அவர் இந்த நடத்தைக்காக தான் என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால் அவர் என்னை ட்ரோல் செய்து என்னுடைய உடல் அமைப்பை வைத்து கிண்டல் செய்தது குறித்து என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. அதோடு நான் சிலவற்றை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது நிக்சன் என்னுடைய உடலைப் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்கவில்லை. ஆனால் நேற்று நிக்சன் இதை என்னிடம் சொன்னதாகவும் இவை அனைத்தும் எனக்கும் தெரியும் என்று பொய்யான ஒரு தகவலை கொடுத்துக் கொண்டிருந்தார். அது கண்டிப்பாக இல்லை.

எனக்கு நிக்சன் பேசியது தெரியாது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகுதான் நான் நிக்சன் பேசியதை தெரிந்து கொண்டேன். இப்போது நிக்சன் மன்னிப்பு கேட்டாலும் அது நிக்சனை நல்ல நபராக மாற்றாது. அவர் புள்ளி கும்பலோடு சேர்ந்து என்னை கிண்டல் செய்வது எனக்கு அது சந்தோஷமாகவோ ஜாலியாகவோ இல்லை.

அதுபோல கடந்த வாரத்தில் உரிமை குரல் எழுப்பிய அந்த பெண்ணியவாதிகள் எங்கே( பெண்களுக்காக கடந்த வாரத்தில் நிக்சனும் குரல் கொடுத்திருந்தார்) என்று கேள்வி கேட்டு, எனக்காக பேசிய விசித்திராவிற்கு நன்றி மற்றும் அவரோடு குரல் எழுப்பிய சிலருக்கும் எனது நன்றிகள் என்றும் அந்த பதிவில் கூறி இருக்கிறார்.

இதில் வினுஷா தேவிக்கு ஆதரவாக கனாக்கானும் காலங்கள் சீரியல் நடிகையான தீபிகா, 'நீங்கள் இப்போது கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். இப்போது நடக்கும் எல்லாம் பிரச்சனைகளையும் உங்களுக்கு தெரிய வைத்திருக்கிறார். நீங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு மாதம் முழுவதும் இவர்களோடு சகித்த உங்கள் பலத்தை கண்டு நான் வியக்கிறேன்' என்று தன்னுடைய கமெண்டை கொடுத்திருக்கிறார்.

அதோடு அதிகமான ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வினுஷா, நீங்க கவலைப்படாதீங்க என்று வினுஷாவிற்கு ஆறுதல் கூறி சிலர் இப்படித்தான் நேரில் ஒன்றும் முதுகுக்கு பின்னாடி ஒன்றும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது பலருக்கும் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது என்று வினிஷாவிற்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.

அதேபோல நேற்றைய எபிசோட்டில் நிக்சன் தான் பேசிய வார்த்தைகள் டிவியில் தோன்றிய போது நான்தான் இதை வினுஷாவை பற்றி பேசினேன். அது குறித்து வினிஷாவிடம் சொல்லி மன்னிப்பும் கேட்டு விட்டேன். என்னை யாரும் தவறாக நினைத்து விடாதீர்கள். வினிஷா நாங்கள் பேசியதை பெரியதாக எடுக்கவில்லை. அவர் ஜாலியாகத்தான் இருக்கிறார்.

ஆனால் உள்ளே இப்போது வந்திருக்கும் ஒரு சிலர்தான் இந்த விஷயத்தை பெரிதுபடுத்துகிறார்கள் என்று பேசியிருந்தார். அதுக்கு தான் இப்போது வினுஷாவும் இவ்வளவு பெரிய விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் பிரதீப்புக்கு ரெட் கார்ட் கொடுத்தது போல இந்த வாரம் நிக்சன் பற்றி கமல்ஹாசன் விசாரிக்க வேண்டும் என்றும் பலர் தொடர்ச்சியாக கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+