பிக் பாஸுக்குள் ஐசு காதல் விளையாட்டு..! குவியும் கமாண்டுகள்.. கோபத்தில் தந்தை வெளியிட்ட பதில்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்து கொண்டு ஐசு மற்றும் நிக்சன் செய்யும் செயல் இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
இவர்கள் இருவரும் எப்போதும் ஒன்றாக சுற்றிக்கொண்டு இருப்பதும் கண்ணாடியில் இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்டது போன்ற செயல்களால் பலர் திட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஐசுவின் தந்தையான அஷ்ரப் தன்னுடைய மகளை பற்றி நெகட்டிவாக பேசிக் கொண்டிருப்பவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான ஐசு ஏற்கனவே பிக்பாஸ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்தான். இவர்லகடந்த பிக் பாஸ் தமிழ் ஐந்தாவது சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக வந்த அமீரின் குடும்பத்தினர் தான். அமீர் உடைய வளர்ச்சிக்கு ஐசுவியின் குடும்பத்தினர் பெறும் உதவியை செய்திருப்பதாக அமீர் தன்னுடைய கதை சொல்லும் டாஸ்கில் கூறியிருந்தார்.
அப்போதே யார் அந்த குடும்பம் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் பேமிலி ரவுண்டில் ஐசு தன்னுடைய அம்மா மற்றும் தங்கையோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அதிகமான ரசிகர்கள் ஐசு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறி வந்தனர். அதை தொடர்ந்து இந்த சீசனில் அவர் ஒரு போட்டியாளராக அறிமுகமான போது அவரைப் பற்றி எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
ஆரம்பத்தில் எந்த இடத்திலும் கத்தி பேசாமல் தன்னுடைய கியூட்டான பேச்சால் அனைவருடைய மனதையும் கவர்ந்திருந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல மணி மற்றும் பிரவீனா இருவரும் நெருங்கி பேசி பழகி வருவது குறித்து தன்னுடைய கவலையை ஐசு வெளிப்படுத்தி இருந்தார். அதை தொடர்ந்து நிக்சனோடு ஐசு நெருங்கி பழக தொடங்கிவிட்டார்.
இப்போது இவர்கள் இருவரும் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமாக ஒன்றாகவே சுற்றிக் கொண்டிருக்கும் ஜோடி கிளியாக வலம் வருகிறார்கள். இது இணையத்தில் அதிகமாக கலாய்க்கப்பட்டு வருகிறது. கடந்த சீசனில் அசல் கோளாரு பெண்களை தடவிக் கொண்டிருக்கிறார் என்று அதிகமான மீம்ஸ்கள் வெளியிட்டு அவரை கலாய்த்து திட்டியது போன்று இப்பொழுது நிக்சனை சமூக வலைத்தளத்தில் பலர் திட்டி வருகின்றனர்.
அதோடு ஐசு தனக்கு வெளியே காதலன் இருக்கிறார் என்று சொன்ன பிறகும் அவர் பின்னாடியே சுற்றிக்கொண்டு அவருக்கு சாப்பாடு ஊட்டி கொண்டு இருப்பதை பார்க்கும்போது பலர் திட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ஐசுவின் தந்தையான அஸ்ரப் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு நாட்களுக்கு முன்பாக ஐசுவின் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அப்போது ஒரு ஒரு நபர் இவளை பார்த்தாலே இரிடேடிங்கா இருக்கு என்று கருத்து வெளியிட்டு இருக்கிறார். அதற்கு நீங்கள் 24/7 மணி நேர காட்சிகளை பாருங்கள் உங்களுக்கு பிடித்து விடும் என்று பதில் கொடுத்து இருக்கிறார். தற்போது இது இணையத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் அதற்கு பிறகு ஐசுவின் அம்மாவோ அப்பாவோ எந்த பதிவுகளையும் போஸ்ட் பண்ணவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனால் அவர்கள் ஐசுவின் மீது கோபத்தில் இருக்கிறார்களா? என்று கேள்விகளும் எழுகிறது. ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் வரும்போது எங்க அம்மா சொல்லி தான் அனுப்பி இருக்காங்க எந்த ஒரு கெட்ட பெயரும் எடுத்து விடக்கூடாது என்று என ஐசு பேசிக் கொண்டிருந்தார். அதுபோல அஸ்ரப் பலரும் வியந்து பார்க்கும் ஒரு மனிதராகத்தான் இருக்கிறார்.
அவருடைய உறவினர்கள பலர் அவருடைய குழந்தைகளை மீடியா துறையில் அனுப்பி வைக்கும் போது தடுத்திருக்கிறார்கள். அதனால் அவர்களோடு பேசாமல் குடும்பத்தை ஒதுக்கி வைத்திருந்த நிலையிலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அஸ்ரத் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்காகவே மொத்த குடும்பத்தையும் எதிர்த்து அவர்களுடைய ஆசையை நிறைவேற்றி இருந்தார்.

அது போல தான் அமீரை கூட ஐசு மற்றும் அவருடைய தங்கை தான் தங்களுடைய மாஸ்டருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று சொல்லி வீட்டிற்கு கூட்டிக்கொண்டு வந்து தங்க வைத்ததாகவும் ஏற்கனவே அமீரும் கூறி இருக்கிறார். இந்த நிலையில் இப்போது ஐசு பற்றி சமூக வலைதளத்தில் அதிகமான நெகட்டிவ் கருத்துகளும் மீம்ஸ்களும் பரவி வரும் நிலையில் அவருடைய தந்தை மற்றும் தாயின் மனநிலை எவ்வளவு கஷ்டப்படும் என்றும் பலர் பீல் பண்ணி வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications