பிக் பாஸுக்குள் காதல் சர்ச்சை.. வெளியே ஐசுவின் பெற்றோர் வெளியிட்ட பதிவு.. என்ன ஆச்சு திடீர்னு இப்படி?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஐசு கலந்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமீரின் குடும்பத்தினர் தான்.
இந்த நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் ஐசுவுக்கும் நிக்சனுக்கும் இடையே இருப்பது காதலா? நட்பா? என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது.

வீட்டிற்குள் நிக்சனிடம் ஐசு அதிகமாக நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் தான் அதிகமாக வெளியே காட்டப்பட்டு கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் ஐசுவின் பெற்றோர் வெளியே தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில வீடியோக்களை பகிர்ந்து இருக்கின்றனர். அது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம் அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் சர்ச்சைகளும், காதல் கண்டண்டுகளும், சண்டை சச்சரவுகளும் பஞ்சம் இல்லாமல் தான் இருக்கிறது.
உள்ளே சண்டை போட்டுக் கொண்டிருந்த போட்டியாளர்கள் கூட வெளியே சகஜமாகி பேசியிருப்பவர்களும் இருக்கிறார்கள். அதே நேரத்தில் உள்ளே நாங்கள் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று என்று ஒரே டீமாக இருந்தவர்கள் பிக் பாஸை விட்டு வெளியே வந்த பிறகு முகத்தை கூட பார்க்காமல் திருப்பிக் கொண்டு போனவர்களும் ஏராளம்.
அதோடு காதல் கதைக்கு சொல்லவே வேண்டாம் உள்ளே உண்மையாக காதலிக்கிறார்களா? கண்டண்டுக்காக காதலிக்கிறார்களா? என்று கூட இருப்பவர்களாலும் ரசிகர்களாலும் புரிந்து கொள்ள முடியாமல் சில சீசன்களில் இருந்திருக்கிறது. ஆனால் வெளியே வந்த பிறகு ஆளாளுக்கு வெவ்வேறு பாதையில் பயணித்திருப்பவர்களும் இருக்கிறார்கள்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்து ரவீனா மற்றும் மணி இருவரும் நெருக்கமாக பழகிக்கொண்டு வருவதை பார்த்ததும் அவர்கள் காதலிக்கிறார்களா? இவ்வளவு க்ளோஸ் ஆக இருக்கிறார்கள் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்திருந்தனர். அதற்கு பலமுறை நாங்கள் காதலிக்கவில்லை நண்பர்கள் என்று இருவருமே விளக்கமும் கொடுத்திருந்தனர்.
வெளியே நாங்கள் எப்படி இருக்கிறமோ அப்படித்தான் உள்ளேயும் இருக்கிறோம் என்று இவர்கள் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இப்போது அவர்களை தொடர்ந்து ஐசு மற்றும் நிக்சன் நடவடிக்கை சர்ச்சையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. இருவரும் கண்ணாடிக்கு எதிரெதிரே நின்று முத்த காட்சிகளில் ஈடுபட்டது. கொஞ்சிக் கொண்டிருப்பது போன்ற வீடியோவில் இணையத்தில் வைரலாகி கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் இப்போது வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த உள்ளே போனதும் இவர்களுடைய விளையாட்டு முறை பற்றி அவர்கள் கொடுத்த க்ளு காரணமாகவே இப்போது ஐசு நிக்சனிடம் எனக்கு ஏற்கனவே வெளியே பாய்பிரண்ட் இருக்கிறார் என்று நேரடியாக கூறி இருந்தார். அதோடு நாம் காதலிப்பது போன்ற எல்லாம் பேசிக் கொண்டிருக்க வேண்டாம்.
இதை வெளியே எங்க அம்மா அப்பா பார்க்கும்போது தவறா நினைச்சுக்குவாங்க என்று ஐசு சொல்ல, அதற்கு நிக்சன் அவங்க இதை பத்தி ஏதாவது கேள்வி கேட்டா இது பிக் பாஸ் கொடுத்த டாஸ்க் என்று சொல்லிவிடலாம் என்று பேசிய வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது. இதே நேரத்தில் ஐசுவின் பெற்றோர் அஷ்ரப் மற்றும் சைஜி இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐஷு பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடிய வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
ஆனால் கடந்த ஐந்து நாட்களாக இவர்கள் எந்த பதிவையும் வெளியிடாமல் இருக்கின்றனர். இது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. கடைசியாக இவர்கள் இருவரும் வெளியிட்ட பதிவில் ஐசு ஆக்ஸிஜன் சிலிண்டர் டாஸ்கில் விளையாடும் போது "நடக்கிறத பார்த்தா நீ உயிரோட வீட்டுக்கு திரும்பி வந்துருவியா..?" என்கிற மாதிரி தலைப்பில் கேப்ஷன் கொடுத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் இப்போது நிக்சனும் ஐசுவும் விளையாடும் விதம் அவருடைய பெற்றோருக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறதா? அதனால் தான் எந்த போஸ்டும் போடாமல் இருக்கிறார்களா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் சிவானியின் அம்மா வீட்டிற்குள் வந்து ஷிவானியை திட்டியது போன்று இந்த சீசனில் ஐசுவின் அம்மா நடந்து கொள்வாரா? என்று பலர் கேள்வி எழுப்பி காத்திருக்கின்றனர். ஆனாலும் என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications