லவ் பண்ண சொன்ன பிரதீப்.. தினேஷ் இப்படி செய்து இருக்ககூடாது.. கேள்வி கேட்ட அக்ஷயாவின் பெற்றோர்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட அக்ஷயா குறித்து அவருடைய பெற்றோர் சில தகவல்களை பிரபல சேனல் ஒன்றுக்கு பகிர்ந்து இருக்கின்றனர்.
அதோடு பிக் பாஸ் வீட்டில் அக்ஷயாவிடம் பிராவோவை காதலிக்க சொன்ன பிரதீப் பற்றியும் தங்களுடைய கருத்துக்களை அக்ஷயாவின் பெற்றோர் பேசி இருக்கின்றனர்.

அது மட்டும் அல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குள் நடக்கும் நிகழ்வுகளை பற்றி அவர்கள் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வகையில் விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களில் இருந்து உள்ளே சண்டை சச்சரவுகள் தான் அதிகப்படியாக இருந்து வருகிறது. இந்த சீசனில் அதிகமான போட்டியாளர்கள் ரசிகர்களுக்கு பரீட்சயமான முகங்களாக இருக்கின்றனர். அதிலும் ஒரு சில போட்டியாளர்கள் மட்டும்தான் புதியவர்களாக ரசிகர்களுக்கு தெரிகின்றனர்.
அந்த வகையில் ஒருவர்தான் அக்ஷயா. இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு இளைஞர்களின் மத்தியில் இவருக்கு ரசிகர்கள் அதிகரித்து இருக்கின்றனர். அதே நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் இவர் அதிகமாக வெளியே காணவில்லை என்றும் இவர் தன்னுடைய கேரக்டரை இன்னும் வெளியே காட்டவில்லை என்பதும் பலருடைய கருத்தாக இருக்கிறது.
அதனால் தான் இன்று அவரை சிறையில் அடைத்திருக்கின்றனர். இந்த நிலையில் அக்ஷயாவின் பெற்றோர் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்திருக்கின்றனர். அதில் அக்ஷயா ரொம்பவே சாப்ட்டான பொண்ணு. பிக் பாஸ் வீட்டிற்குள் இவர்கள் பேசும் வார்த்தைகளை கேட்டு அவா கொஞ்சம் மிரண்டு தான் போய் இருப்பா. வெளியில இந்த மாதிரி கெட்ட வார்த்தைகளும் கோபமான வார்த்தைகளையும் கேட்டு இருக்க மாட்டா.
அதுபோல அக்ஷயாவுக்கு வயசானவங்க தான் ரொம்ப பிடிக்கும். அவங்கள பாசமா பாத்துக்குவா. அதனால்தான் பவா செல்லதுரை உள்ளே இருக்கும்போது அவரிடம் பேசிக் கொண்டிருந்தா. அப்போ அவர் வெளியே போன பிறகு அக்ஷயா ரொம்பவே வருத்தப்பட்டு இருந்தா. பிறகு இப்போது கானா பாலா வந்த பிறகு கூட அதனால் தான் அவரோடு டான்ஸ் ஆடி பாட்டு பாடினா.
அது போல அக்ஷயாவிற்கு நடிப்பு ரொம்ப பிடிக்கும். எங்ககிட்ட சொல்லிக்கிட்டே தான் உள்ளே போனா, நான் என்னுடைய டான்ஸ் நடிப்பை அங்க முழுமையா காட்டுவேன் என்று, அடிக்கடி சொல்லிட்டு இருந்தா. வெளியே வரும் போதும் கமல் சார்கிட்ட நான் இதை சொல்லிட்டு தான் வருவேன் என்றும் சொல்லி இருந்தா. நேற்று டேலண்ட் ஷோ நடைபெற்றது.

அப்போ தினேஷ் அக்ஷயா மற்றும் பூர்ணிமா டான்ஸ் ஆடும் போது அவங்களுக்கு சரியான டைம் கொடுக்கல. அதனாலதான் அவ திறமையை அவளால அங்க காட்ட முடியாம ஆகிட்டுனு நினைக்கிறேன். அதுபோல பிக் பாஸ் வீட்டுக்குள்ள இப்ப இருக்குறதுல மாயா மற்றும் பிரதீப் தான் சரியாக விளையாடி கொண்டு இருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் தான் பிக்பாஸ் வீட்டிற்கு கண்டன்ட் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.
அது போல பிரதீப் பிராவோ கூட காதல் வச்சுக்க என்று சொல்லி இருந்தார். ஆனால் அப்படி எல்லாம் செய்கிற ஆளு அக்ஷயா கிடையாது. அக்ஷயா மனசுக்கு புடிச்சவங்க கூட மட்டும் தான் பேசுவா. ஆனால் இந்த மாதிரி தவறா வழி நடத்தவும் கூடாது. அதுபோல இவங்க பிரச்சனையில் பிராவோ மாட்டிக் கொள்ள மாட்டார் என்று நான் நினைக்கிறேன் என்று அக்ஷயாவின் பெற்றோர் கூறியிருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications