பிக் பாஸ் 7: அர்ச்சனாவை பற்றி தினேஷ் சொன்னது உண்மையா? விஷ்ணுவோடு சண்டையில் இதை கவனிச்சீங்களா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இன்றைய ப்ரோமோக்களில் அதிகமாக விஷ்ணு மற்றும் அர்ச்சனா சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தினேஷ் ஏற்கனவே அர்ச்சனாவை பற்றி பேசிய வீடியோவை ரசிகர்கள் இப்போது ட்ரெண்ட் செய்து கொண்டிருக்கின்றனர்.

அடித்து விடுவேன் என்று சொன்ன விஷ்ணுவிடம் அடி பார்க்கலாம் என்று மல்லுக்கு நிற்கும் அர்ச்சனாவை பார்த்து தினேஷ் சொன்னது போலவே அர்ச்சனா இப்போது ஓவியாவாக மாறுவதற்கு முயற்சி செய்கிறாரா? என்று பலர் கேள்வி கேட்கின்றனர்.
அந்த வகையில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராத பல நிகழ்வுகள் நடந்து விடுகிறது. ஆரம்பத்தில் வைல்ட் கார்ட் என்ட்ரியாக அறிமுகமானதும் அர்ச்சனா ஏற்கனவே இருந்த ஹவுஸ் மேட்களால் ஸ்மால் பாஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டதும் தன்னுடைய கோபத்தை அழுகையோடு காட்டி இருந்தார்.
ஒரு வாரம் முழுக்க அடிக்கடி அழுது கொண்டிருந்த அர்ச்சனாவை இப்போது வரைக்கும் அதை சொல்லியே சில போட்டியாளர்கள் அர்ச்சனாவை சீண்டி பார்க்கின்றனர். ஆனால் எத்தனை பேர் என்னை ரவுண்டு கட்டினாலும் நான் வாயாலே எல்லாரையும் சமாளித்து விடுவேன் என்று கெத்து காட்டி அர்ச்சனா இளம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமூக வலைத்தளத்திலும் அர்ச்சனாவுக்கு அதிகமான சப்போர்ட் எகிறி வருகிறது. இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் இன்று முழுக்கவே அர்ச்சனா மற்றும் விஷ்ணு சண்டையிட்டு வருகின்றனர். விஷ்ணு பிக் பாஸ் வீட்டிற்குள் அதிகமாக பெண் போட்டியாளர்களிடமே சண்டையிட்டு வருகிறார். அந்த வரிசையில் இப்போது ஒரு சில நாட்களாக அர்ச்சனாவோடு அடிக்கடி சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்.
விஷ்ணு வீட்டில் ஒரு டாஸ்க்கில் எல்லோருக்கும் பெயர் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அர்ச்சனாவிற்கு தொட்டால் சிணுங்கி என்று பெயரை வைத்திருந்தார். இது எனக்கு சரி இல்லை என்று அர்ச்சனா அதற்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். அது கமல் முன்னிலையிலும் விவாதிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் இதை ஏற்றுக் கொள்ளாத விஷ்ணு மீண்டும் மீண்டும் அர்ச்சனாவை சீண்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் இன்று காலையிலிருந்து 24 மணி நேர எபிசோடில் அர்ச்சனா மற்றும் விஷ்ணு தான் அதிகமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் சண்டையை பார்த்து ஒரு கட்டத்தில் அலுத்துப்போன ஹவுஸ் மேட் நீங்கள் ஒரு பக்கத்தில் சண்டை போடுங்கள் நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம் என்று டான்ஸ் ஆடியபடியே வீட்டு வேலைகளை செய்திருந்தனர்.
இதுவும் இரண்டாவது ப்ரோமோவில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் மூன்றாவது ப்ரோமோவில் அர்ச்சனாவை பார்த்து விஷ்ணு தண்டம் என்று திட்ட அதற்கு அர்ச்சனா அங்கிருக்கும் குப்பை தொட்டியை தூக்கி காட்டி நான் தண்டம் என்றால் நீ இதுதான்.. போயா என்று பதிலடி கொடுக்கிறார். அதற்கு விஷ்ணு போ போய் பெட்ஷீட் போத்திகிட்டு அழு என்று சொல்ல, அதற்கு அர்ச்சனா இனி நான் அழுதுட்டா பாத்துக்குறேன் என்று சவால் விடுகிறார்.
அதேபோல ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் அர்ச்சனா செய்யும் செயல்களை பார்த்து தினேஷ் ஒரு முறை சக போட்டியாளர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது அர்ச்சனா அடுத்த ஓவியாவாக ஆவதற்கு ட்ரை பண்றாங்க என்று கூறியிருப்பார். இந்த நிலையில் இப்போது விஷ்ணுவோடு அர்ச்சனா சண்டை இடுவதை பார்த்து அதிகமான ரசிகர்கள் தினேஷ் சொன்னது சரிதான் இவர்தான் அடுத்த குட்டி ஓவியா என்று மீம்ஸ்களை தெறிக்க விடுகின்றனர்.












Click it and Unblock the Notifications