சீச்சீ.. பாத்ரூமுக்குள்ள 2 பேரும்.. மணி- ரவீனா பற்றி அர்ச்சனா வைத்த குற்றச்சாட்டு.. லீக் ஆன வீடியோ
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கு மேலே சர்ச்சைகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் வைல்ட் கார்டு போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தற்போது பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வார போரிங் பெர்பாமன்ஸ் என்ற அடிப்படையில் அர்ச்சனா மற்றும் விசித்திராவை ஜெயிலுக்கு அனுப்பி இருந்த நிலையில் அங்கு அர்ச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள்ளே மணி மற்றும் ரவீனா இருவரும் செய்யும் செயல் குறித்து விமர்சித்து பேசி இருக்கிறார்.

அதில் மணி மற்றும் ரவீனா இருவரும் ஒரே பாத்ரூமிற்குள் சென்று ஹேர் கட் பண்ணி கொள்கிறார்கள். ஹேர் கலரிங் பண்ணி கொள்கிறார்கள் என்று அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை அர்ச்சனா வைத்திருக்கிறார்.
சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாத வகையில் தான் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இருந்து வருகிறது. கடந்த சீசனை விட இந்த சீசன் சுவாரசியம் அதிகமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் நினைத்திருந்த நிலையில் இப்போது போட்டியாளர்கள் நாங்கள் கண்டண்டுக்காக செய்கிறோம் என்று வெளிப்படையாகவே பேசிக் கொண்டிருக்கின்றனர்.
காதல் கண்டண்டு கொடுக்கிறோம் என்று காது கூச வைக்கும் அளவிற்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதோடு அடிக்கடி சண்டை சச்சரவுகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர். கமல்ஹாசன் முன்னிலையில் கூட பலர் நாங்கள் கண்டெண்டுக்காக தான் சார் இப்படி எல்லாம் செய்தோம் என்று வெளிப்படையாக பேசியதும் உண்டு.

இப்படியாக இருக்கும் நிலையில் ஆரம்பத்தில் இருந்தே இந்த சீசனில் சில போட்டியாளர்களின் நடவடிக்கைகளை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள். அதில் மணி மற்றும் ரவீனாவின் பழக்கம் குறித்து பலரும் கலாய்த்து மீம்ஸ் வெளியிட்டும் வருகின்றனர். இருவரும் நண்பர்களா? அல்லது காதலர்களா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பிக் பாஸ் வீட்டிற்குள் இருப்பவர்களுக்கும் இருக்கிறது.
இது பற்றி தான் நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள்ளே பெரிய விவாதம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது. ஏற்கனவே பல இடங்களில் ரவீனா மற்றும் மணி இருவரும் சேர்ந்து பழகுவதை குறித்து சக போட்டியாளர்களே பேசி இருக்கின்றனர். ஆனாலும் சம்பந்தப்பட்ட இவர்கள் இருவரும் எப்போதும் போலத்தான் இருக்கிறார்கள். இந்த நிலையில் நேற்று போரிங் பர்பாமன்ஸ் என்று விசித்ரா மற்றும் அர்ச்சனாவை சக போட்டியாளர்கள் தேர்ந்தெடுத்திருந்தனர்.
அதை இருவருமே ஆரம்பத்தில் ரொம்பவே எதிர்த்து இருந்தனர். பிறகு வேறு வழி இல்லாமல் இருவரும் ஜெயிலுக்கு சென்றிருந்தனர். அங்கு கடும் கோபத்தில் இருந்து அர்ச்சனா தன்னை போரிங் கண்டஸ்டண்ட் என்று சொன்ன ரவீனா மற்றும் மணி குறித்து திட்டிக் கொண்டிருக்கிறார். அப்போது அர்ச்சனா பேசுகையில், நான் சரி பாவம் வெளியே பெயர் கெட்டுப் போய் விடும், ஃபியூச்சர் மோசமாகி விடக்கூடாது என்பதற்காக மணி மற்றும் ரவீனாவை தனித்தனியாக கூப்பிட்டு இப்படி நடந்து கொள்ளாதீர்கள் என்று அட்வைஸ் கொடுத்திருக்கிறேன்.
அப்போ எல்லாம் சரி சரி என்று சொல்லிவிட்டு நேற்று என்னைப் பற்றி சொல்லும் போது மணி சொல்கிறான் நீங்க எங்க பிரைவேசிக்குள்ள எட்டிப் பார்த்த மாதிரி இருக்கு என்று சொல்கிறான். அது எப்படி சரியா வரும்? இவங்க ரெண்டு பேரும் நடந்துக்கிற மாதிரி பார்க்கில் யாராவது நடந்துக்கிட்டா கூட போலீஸ்காரங்க வந்து அடிச்சு துரத்திடுவாங்க.

இது வீடு அதுவும் 24 மணி நேரமும் எல்லாரும் பார்த்துக்கிட்டு இருக்கிற பொது நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் இவர்கள் இரண்டு பேரும் செய்யறது சரியா இருக்கா? எப்போதும் ரெண்டு பேரும் தனியா பாத்ரூமுக்குள் போய் ஹேர்கட் பண்ணிக்கிறாங்க. ஹேர் கலரிங் பண்ணிக்கிறாங்க. எல்லாரும் ஹாலில் உட்கார்ந்தா இவங்க ரெண்டு பேரும் மட்டும் காணாமல் போயிடுறாங்க, ஒருத்தர் மேலே தொங்கிக்கிட்டு வராங்க.
இதுவெல்லாம் பாக்குறதுக்கு அசிங்கமா இருக்கு. இவங்க இதை பண்ணனும்னா வேற எங்கேயாவது போய் பண்ணட்டும். என் கண்ணு முன்னாடி பண்ணுனா எனக்கு மைண்ட் டிஸ்டர்பன்ஸ் ஆகுது. அதனால நான் கண்டிப்பா சொல்லத்தான் செய்வேன் என்று அர்ச்சனா கடும் கோபமாக திட்டிக் கொண்டிருக்கிறார்.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது. இதற்கு அதிகமான ரசிகர்கள் அர்ச்சனா சொல்வதும் சரிதான் என்று பாராட்டுகின்றனர். அதே நேரத்தில் இன்னும் பல ரசிகர்கள் அர்ச்சனா எதற்காக பூமர் மாதிரி இப்படி நடந்துக்கிறாங்க? தான் செய்வது மட்டும்தான் சரி என்று ஆணவத்தில் ஆடுகிறார்களா? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications