நேற்று பிக்பாஸ் செய்த அலட்சியம்.. அர்ச்சனா மைக்கில் சொல்லிய உண்மை .. நிக்சன் குட்டு உடைந்தது
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய எபிசோடில் டிக்கெட் டூ ஃபினாலே முயல் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அதில் விளையாடிய போட்டியாளர்கள் விதியை மீறி அனைவரையும் ஏமாற்றி விளையாடி இருக்கின்றனர். அதனை ஆதாரத்தோடு அர்ச்சனா பிக் பாஸ் இடம் காட்டிக் கொடுத்திருந்தார்.
அதாவது அந்த டாஸ்க் கொடுக்கப்பட்ட கார்டில் எலிமினேஷன் என்ற கார்டில் மட்டும் அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதை அர்ச்சனா சொல்லிக் கொடுத்திருந்தார். இந்த நிலையில் உள்ளே நடந்த மேலும் சில சம்பவங்களை பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கிய நாளிலிருந்து சண்டை சச்சரவுகளும், சர்ச்சைகளும் தான் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இதுவரைக்கும் இல்லாத வகையில் இந்த சீசனில் அதிகமான விதிமீறல்களும் இருக்கிறது. பல நேரங்களில் பிக்பாஸை மட்டும் இல்லாமல் கமல்ஹாசனையும் கூட ஒரு சில போட்டியாளர்கள் திட்டி தீர்த்து இருக்கின்றனர்.
அதுவும் பூர்ணிமாவும், மாயாவும் 24 மணி நேர லைவில் சுற்றி இத்தனை கேமரா இருக்கிறது என்பதை கூட மறந்து கமல்ஹாசனை குடிகார அங்கிள் என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது. இப்படியான நிலையில் ஒவ்வொரு டாஸ்கிலும் இந்த சீசனில் போட்டியாளர்கள் விதி மீறி நடந்து கொள்வதை பார்க்க முடியுது. அதிலும் உள்ளே போட்டியாளர்கள் கேங் ஃபார்ம் பண்ணி இரண்டு அணியாக விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.
அதிலும் மாயா போன்றவருடைய கேங் புல்லி கேங் ஆகவும் தினேஷ் விஷ்ணு போன்றவருடைய கேங் பூமர் கேங் என்றும் பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் சரி வெளியேவும் அழைக்கப்பட்டு வருகிறது. இவர்கள் இந்த சீசனில் எந்த டாஸ்க் கொடுத்தாலும் அதில் விதியை மீறி நடந்து கொள்கிறார்கள். அதனால் ஒரு கட்டத்தில் பிக் பாஸை கோபத்தில் போட்டியாளர்களை திட்டியதை பார்க்க முடிந்தது.
இதுவரைக்கும் எந்த சீசனிலும் பிக் பாஸ் இவ்வளவு கோவப்பட்டது கிடையாது. ஆனால் இந்த சீசன் எல்லாவற்றிற்கும் மேலே என்று சொல்வது போலத்தான் உள்ளே நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோடில் பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் 2 பினாலே டாஸ்க்கான இரண்டாவது முயல் டாஸ்க் நடைபெற்றது. அப்போது சில கார்டுகள் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த கார்டில் என்ன எழுதி இருக்கோ அதுபடி நடக்க பிக் பாஸ் கூறியிருந்தார்.
அதாவது அந்த கார்டில் எலிமினேஷன் என்று எழுதப்பட்டிருந்தால் தனக்கு யாரை பிடிக்கவில்லையோ அவர்களை இந்த கேமில் இருந்து எலிமினேஷன் செய்து கொள்ளலாம் இது நிக்சனுக்கு இரண்டு முறை வந்தது.ரவீனாவிற்கு ஒரு முறை வந்தது. முதலாவதாக ரவீனாவிற்கு வந்ததும் அவர் விஷ்ணுவை வெளியேற்றி இருந்தார். அதற்கு பிறகு நிக்சனுக்கு இரண்டு முறை எலிமினேஷன் கார்டு வந்ததும் எல்லோருக்கும் சந்தேகம் வந்தது.
அப்போது ஏற்கனவே இந்த டாஸ்க் போட்டியாளர்களால் விளையாட முடியாமல் வெளியே அனுப்பப்பட்ட அர்ச்சனா மற்றும் விஜய் தான் இந்த டாஸ்கை வழிநடத்திக் கொண்டிருந்தனர். அப்போது விஜய் கையில் தான் கார்டு இருந்தது. அதில் ஒரு கார்ட்டில் விஜய் கைவிரலை வைத்து அடையாளப்படுத்த அப்போது நிக்சன் அந்த கார்டை சரியாக எடுத்துக்காட்டி இருந்திருக்கிறார். அந்த கார்டில் நெயில் பாலிஷ் வைத்து மூன்று புள்ளிகள் வைக்கப்பட்டு இருக்கிறது.

அதை தடவி பார்த்தாலே இதில் வித்தியாசம் தெரிந்து இருக்கிறது. இதை வைத்து அடையாளப்படுத்தி அந்த கார்டை வைத்து எதிர் அணியில் இருந்து ஒவ்வொருத்தராக நிக்சன் காலி செய்து இருக்கிறார். இதை அர்ச்சனா பிக் பாஸ் இடம் மைக்கில் முறையிட்டு இருக்கிறார். அதற்கு பிக் பாஸ் நீங்க அந்த கார்டை எடுத்து தூரமா வச்சிருங்க என்று சொல்லி இருக்கிறார்.
ஆனால் இதை 24 மணி நேரமும் கேமராவில் பார்த்துக் கொண்டிருக்கும் பிக் பாஸ் இதை எப்படி கவனிக்காமல் விட்டார் என்று தெரியவில்லை என்பது பலருடைய கேள்வி. அதுபோல பிக் பாஸும் நிக்சன் பூர்ணிமா கேங் உடன் சேர்ந்துதான் அவர்களை ஜெயிக்க வைப்பதற்காக இப்படி உண்மையை மறைக்கிறார்களா? என்றும் பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இது குறித்து சனிக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் குறும்படம் போட்டு நிக்சனுக்கு பனிஷ்மென்ட் கொடுப்பாரா? அல்லது வழக்கம்போல இதையும் தட்டிக் கழிக்கப் போகிறாரா? என்று ரசிகர்கள் பலர் காத்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications