பிக் பாஸ் 7: மாயா மீது கோபத்தில் அர்ச்சனா செய்த செயல்.. ஒரே நாளில் ரசிகர்களின் மனதை கவர்ந்த விக்ரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் மாயா மீது இருக்கும் கோபத்தில் அர்ச்சனா விக்ரமிடம் தனக்கு டீ போட்டு தரவில்லை என்று சண்டை செய்ய அதை பிக் பாஸ் அம்பலப்படுத்தி இருக்கிறார்.

அர்ச்சனாவுக்கு ரசிகர்களிடம் அதிகமான வரவேற்பு இருக்கும் நிலையில் நேற்று அவர் செய்த செயல் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது.

டீ போட தெரியாத விக்ரமை அர்ச்சனா படுத்தி இருந்த பாடு குறித்து அதிகமான ரசிகர்கள் விக்ரமுக்கு ஆதரவை தெரிவித்து வருகின்றனர். என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

bigg boss tamil season 7 Archana has exposed her anger towards Maya to fight Vikram

அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் சரி யார் தவறு என்று யூகிக்க முடியாத வகையில் தான் ஒவ்வொருவருடைய கேரக்டரும் இருக்கிறது. உள்ளே இதுவரைக்கும் அதிகமான பாசிட்டிவ் கருத்துக்களோடு வரவேற்பை பெற்று இருந்த அர்ச்சனா நேற்றைய எபிசோட்டில் செய்த செயல் பலரையும் அதிர்ச்சடைய வைத்திருக்கிறது.

இதுவரைக்கும் மாயா மற்றும் பூர்ணிமா கேங்க் சேர்ந்து கொண்டு தன்னை டார்கெட் செய்கிறார்கள், விஷ்ணு தன்னிடம் வேண்டுமென்றே சண்டை இழுக்கிறார் என்று பிரச்சனை செய்து கொண்டிருந்த அர்ச்சனா நேற்று வெளியான எபிசோடில் அதாவது வழக்கம்போல கமல்ஹாசன் நேற்று எபிசோடு ஆரம்பத்தில் வெள்ளிக்கிழமை என்ன நடந்தது என்பதை பார்க்கலாம் என்று சொல்ல அப்போது ஸ்மால் பாஸ் வீட்டிற்குள் அடுப்பு பக்கத்திலேயே அர்ச்சனா மற்றும் பூர்ணிமா உட்கார்ந்து இருக்கின்றனர்.

அப்போது பிளாக் டீ அர்ச்சனா கேட்க அதற்கு டீ போட தெரியாத விக்ரம் டீ போட்டுக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் டீ ரொம்ப நேரம் அடுப்பில் வைக்கப்பட்டு இருந்ததால் அதன் கசப்பு சுவை அதிகமாய் இருக்கிறது. இதனால் கோபத்தில் அர்ச்சனா விக்ரமை திட்டிக் கொண்டிருக்கிறார். அதற்கு விக்ரம் பாவமாக எனக்கு டீ போட தெரியாது.

நான் உங்களிடம் கேட்டு தானே டீ போட்டேன். ஒருவேளை நான் செய்வது தப்பு என்றால் நீங்கள் என்னிடம் அப்போதே சொல்லி இருக்கலாமே. பக்கத்தில் தானே இருக்கிறீர்கள் அடுப்பை ஆப் செய்து இருக்கலாம். ஆனால் இப்படி என்னை குறை சொல்கிறீர்களே என்று கேட்க அதற்கு அர்ச்சனா, நீ மாயாவிற்கு அங்கு இருக்கும் கப்பை கழுவி டீ ஊத்திக் கொடுக்கிற,

எனக்கு ஒழுங்கா டீ போட்டு தர முடியாதா? என்று அங்கிருந்தவர்களிடம் டீயை குடிக்க சொல்லி கொண்டு இருந்தார். இது மாயா மீது இருக்கும் கோபத்தால் விக்ரமை வேண்டும் என்றே பழி போடுவது போன்றே இருந்தது. அப்போ விக்ரம் மீண்டும் மீண்டும் சொல்கிறார், எனக்கு டீ போட தெரியாது.

நீங்கள் பக்கத்திலேயே பார்த்து கொண்டு இருந்தீர்கள் நீங்களாவது சொல்லி இருக்கலாமே என்று கேட்க அதற்கு அர்ச்சனா பக்கத்தில் இருந்த பூர்ணிமா ஏன் அடுப்பை ஆஃப் பண்ணவில்லை என்று கேள்வியை மாற்றுகிறார்.அதுபோல மீண்டும் மீண்டும் மாயாவிற்கு டீ கப்பை கழுவி கொடுத்த உன்னால் எனக்கு ஒழுங்கா டீ போட்டு தர முடியவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க அதனால் விக்ரம் பீல் பண்ணி இருந்தார்.

இந்த காட்சிகள் ஒளிபரப்பானதிலிருந்து ரசிகர்கள் விக்ரமுக்கு அதிகமாக சப்போர்ட் செய்து வருகின்றனர். இவர் புல்லிகேங்கில் இருந்தாலும் யாரையும் டார்கெட் பண்ண வில்லை. மாயா மற்றும் பூர்ணிமா சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடுகிறார் அவ்வளவுதான். ஆனால் இந்த அர்ச்சனா எதற்காக இப்படி வேண்டுமென்றே விக்ரமிடம் பிரச்சனை செய்ய வேண்டும் என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. இது பற்றி உங்களுடைய கருத்தை தெரிவிக்கலாம் நேற்று அர்ச்சனா நடந்து கொண்டது சரியா இல்லை தவறா என்பதை சொல்லிட்டு போங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+