பிக் பாஸ் 7: திடீரென்று நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் பவா செல்லதுரை.. காரணம் இதுதானா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பவா செல்லத்துரை தான் உடனடியாக வெளியேற வேண்டும் என்று பிக் பாஸ் இடம் கேட்டு இருக்கிறார்.
இன்னும் சற்று நேரத்தில் அவர் வெளியேறி விடுவார் என்று கூறப்படுகிறது.

ஒரு வாரத்திற்குள் பவா செல்லதுரை நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதற்கான காரணம் அவரே கூறியிருக்கிறார். அது பற்றி பார்க்கலாம்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு ஒளிபரப்பாக இதில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில் கதை சொல்லியாகவும் பிரபல எழுத்தாளராகவும் நடிகராகவும் இருக்கும் பவா செல்லத்துரை ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் ஒரு வாரம் இந்த நிகழ்ச்சி முடிவடைந்திருக்கும் நிலையில் தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டும் என்று இவர் பிக் பாஸ் இடம் கேட்டு இருக்கிறார்.
போட்டியாளர்கள் இவருக்கு ஆறுதல் சொல்லிப் பார்த்தும் இவர் மனம் மாறவில்லை. நான் என்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதோடு தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு தனக்கு சுகர் இருப்பது ஏற்கனவே எல்லோருக்கும் தெரியும். ஆனால் இங்கே நேரத்திற்கு சாப்பாடு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
கடந்த வாரத்தில் ஆரம்பத்தில் ஒரு சில நாட்கள் நேரத்திற்கு சாப்பாடு கிடைத்தது. சாப்பாடும் தரமாக இருந்தது. ஆனால் இப்போது சாப்பாடு சரியான நேரத்திற்கு கிடைக்கவில்லை. அதனால் என்னுடைய உடல்நிலை சரியில்லாமல் உணர்கிறேன். அதுபோல இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லோரும் பெரிய நடிகராக வேண்டும் என்று வந்திருக்கிறார்கள். ஆனால் நான் அப்படியெல்லாம் இல்லை என்னை பலருக்கும் தெரிய வைக்க வேண்டும் என்று நினைத்தேன். நான் வந்த வேலை ஒரு வாரத்திற்குள் முடிந்து விட்டது.
அதனால் இன்னும் சிறிது நேரத்திற்குள் என்னை வெளியேற்றி விடுங்கள் என்று பிக்பாஸ் இடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு இப்போது நீங்கள் என்னை வெளியேற்றினால் தான் சரியாக இருக்கும். நான் இங்கிருந்து பஸ் ஏறினால் நான்கு மணி நேரம் ஆகும் என்னுடைய ஊருக்கு போவதற்கு என்று பிக் பாஸ் தமிழ் சீசன் 7, 24 மணி நேர காட்சி பவா செல்லதுரை பேசிக் கொண்டிருக்கிறார். இதற்கு அதிகமான ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications