அடேங்கப்பா! அர்ச்சனா 12thல வாங்கிய மார்க் தெரியுமா? 10thலும் அசத்தல்.. பார்த்தா அதிர்ச்சி ஆகி விடுவீங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக அறிமுகமாகி இப்போது பைனலிஸ்ட் ஆக தேர்வாகி இருக்கும் அர்ச்சனாவின் சிறுவயது புகைப்படங்கள் மற்றும் அவருடைய பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மார்க் லிஸ்ட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அவருடைய மதிப்பெண்களை பார்த்த ரசிகர்கள் வியப்பின் உச்சத்தில் இருக்கின்றனர்.

ஏற்கனவே அர்ச்சனா தான் படிப்பில் கெட்டிக்காரி என்று பிக் பாஸ் வீட்டில் சொல்லி இருக்கும் நிலையில் அதை உண்மை என்று சொல்லும் வகையில் அந்த மார்க் சீட்டில் இருக்கும் மதிப்பெண்கள் எடுத்துக்காட்டாக இருக்கிறது. அதாவது பத்தாம் வகுப்பு தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு அர்ச்சனா 491 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.

அதுபோல பன்னிரண்டாம் வகுப்பு தேர்விலும் ஆயிரத்திற்கு மேலே மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். இந்த நிலையில் அர்ச்சனா எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தார். எந்த வருடத்தில் பள்ளி முடித்து இருந்தார் என்பது பற்றிய விபரங்கள் அந்த மார்க் சீட்டில் இருக்கிறது. அது பற்றி எந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

Bigg Boss Tamil season 7 contestant Archana 10th and 12th Mark List

பிக் பாஸ் வீட்டிற்குள் யாருடா இந்த பொண்ணு பலரையும் வியப்பில் ஆழ்த்திய அர்ச்சனா தான் எப்போது இணையத்தில் அதிகமாக பேசப்படும் ஒரு பெயராக இருக்கிறது. இவர் ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்தான். ராஜா ராணி சீரியலில் வில்லியாக நடித்திருந்தாலும் பாதிக்கு மேலே இந்த கேரக்டர் நமக்கு செட்டாகாது நாம நடிச்சா ஹீரோயினியாக தான் நடிக்கணும் என்று நினைத்து அர்ச்சனா சீரியலுக்கு டா டா சொல்லிவிட்டு வெளியே வந்து விட்டார்.

ஆனாலும் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வந்த அர்ச்சனாவிற்கு பெரிய அளவில் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஒரு வருடமாக வீட்டில் சீரியலுக்கு வருவதற்கு முன்பு எப்படி இணையத்தில் போட்டோ சூட் நடத்திக் கொண்டிருந்தாரோ அதுபோலவே போட்டோ சூட் நடத்திக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.

Bigg Boss Tamil season 7 contestant Archana 10th and 12th Mark List

அதுவும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஆரம்பத்திலேயே இவர் கலந்து கொள்வார் என்று இவருடைய பெயர் அடிபட்டுக் கொண்டிருந்தது ஆனால் அப்போது கலந்து கொள்ளவில்லை. அதற்கு பிறகு சில வாரங்கள் கழித்து வைல்ட் கார்டு என்ட்றியாக 5 போட்டியாளர்களில் ஒருவராக என்ட்ரி கொடுத்தார்.

பொதுவாக ஒரு சிலருக்கு ஆரம்பமே அசத்தலாக இருக்கும்... ஆனால் சிலருக்கு ஆரம்பமே சொதப்பலாக இருக்கும் அந்த மாதிரி ஆரம்பமான ஒரு சில நாட்கள் உள்ளிருக்கும் போட்டியாளர்கள் தன்னிடம் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து அர்ச்சனா அழுதப்படியே இருந்தார். முதல் நாள் அழுத போது இருந்த அனுதாபம் அடுத்தடுத்து இவர் அழுகும் போது ரசிகர்களுக்கு குறைய தொடங்கியிருந்தது.

அந்த நேரத்தில்தான் தன்னுடைய குறையை நிவர்த்தி செய்து தன்னை நோக்கி அம்பு எய்தவர்களை தைரியமாக திருப்பித் தாக்கி வேற லெவலில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். இப்போதும் ஒரு சில ரசிகர்கள் அர்ச்சனா பி ஆர் வைத்து இத்தனை நாட்களாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து வருகிறார் என்று இவர் மீது குற்றம் சாட்டினாலும் அதிகமான ரசிகர்கள் இவருக்கு சப்போர்ட் கொடுத்து வருவதை பார்க்க முடிகிறது.

இந்த நிலையில் தான் அர்ச்சனாவின் சிறுவயது புகைப்படங்கள் மற்றும் அவருடைய பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மார்க் சீட் போன்றவை பிரபல சேனல் ஒன்றில் வெளியாகி இருக்கிறது. அது தற்போது இணையதளத்தில் அர்ச்சனாவின் ரசிகர்கள் ட்ரண்டு செய்து கொண்டிருக்கின்றனர்.

Bigg Boss Tamil season 7 contestant Archana 10th and 12th Mark List

அந்த வகையில் அர்ச்சனா பத்தாம் வகுப்பு தேர்வில் 500 மதிப்பெண்களுக்கு 491 மதிப்பெண் பெற்றிருக்கிறார். அதாவது தமிழில் 97 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், கணிதத்தில் 100க்கு 100 மதிப்பெண்களும், அறிவியலில் 97 மதிப்பெண்களும், சமூக அறிவியல் பாடத்தில் 98 மதிப்பெண்களும் ஆக மொத்தம் 491 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.

Bigg Boss Tamil season 7 contestant Archana 10th and 12th Mark List

அதுபோல 12 ஆம் வகுப்பு தேர்வில் அர்ச்சனா அறிவியல் குரூப் எடுத்து இருக்கிறார். அதில் தமிழில் 185 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 177 மதிப்பெண்களும், இயற்பியலில் 146 மதிப்பெண்களும், வேதியியலில் 155 மதிப்பெண்களும், தாவரவியலில் 156 மதிப்பெண்களும் மற்றும் கணிதவியலில் 156 மதிப்பெண்களும் ஆக மொத்தம் 1200 மதிப்பெண்களுக்கு 1005 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். தற்போது இந்த மார்க்சீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதுபோல அர்ச்சனா பத்தாம் வகுப்பு தேர்வை 2013 ஆம் ஆண்டும், 12-ம் வகுப்பு தேர்வை 2015 ஆம் ஆண்டும் எழுதியிருக்கிறார். அதோடு பள்ளிகளில் படிக்கும்போது பல பாட்டு போட்டி டான்ஸ் களில் கலந்து கொண்டு குழந்தை பருவத்திலேயே பல பரிசுகளை வாங்கி இருக்கிறார். அந்த புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+