பிக் பாஸ் லைவ்: மாயாவிடம் மன்னிப்பு கேட்ட அர்ச்சனா.. ஆனா காரணமே வேறு! இப்படி வேற நடந்திருக்கா?
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் ஏற்கனவே இந்த சீசனில் கலந்து கொண்டு எலிமினேஷன் ஆகி வெளியே போயிருந்த போட்டியாளர்கள் இது கடைசி வாரம் என்பதால் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருக்கின்றனர். அந்த வகையில் ஒரு சிலர் வெளியே நடக்கும் நிகழ்வுகளை உள்ளிருக்கும் போட்டியாளர்களிடம் ஒப்பித்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்படித்தான் நேற்று ஜோவிகா பூர்ணிமா என உள்ளே வந்த ஒரு சில போட்டியாளர்கள் மாயாவிடம் வெளியே தங்களுக்கு இருக்கும் பெயர் குறித்தும் மாயாவிடம் அர்ச்சனா பழகுவது குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றனர். இதனால் மாயா அர்ச்சனாவிடம் சில கேள்விகளை கேட்டு இருந்தார்.
இதில் ஆரம்பத்தில் நன்றாகவே பதில் சொல்லிக் கொண்டிருந்த அர்ச்சனா ஒரு கட்டத்தில் தான் செய்தது தவறு என்று நினைத்து மாயாவிடம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டிருந்தார். இந்த செய்தி தான் இப்போது இணையத்தில் அதிகமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எதற்காக மாயாவிடம் அர்ச்சனா மன்னிப்பு கேட்டார் என்பதை பற்றி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வர இருக்கிறது. இன்னும் இரண்டு நாள் மட்டுமே இந்த சீசன் முடிவடைவதற்கு இருந்தாலும் இந்த சீசனில் மட்டும் இதுவரைக்கும் இல்லாத வகையில் போட்டியாளர்களுக்குள் வன்மம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது.
இதற்கு முந்தைய சீசன்களிலாவது ஆரம்பத்தில் இருந்து ஹீரோ வில்லன் ரேஞ்சில் அடித்துக்கொண்டு முட்டிக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள் கூட கடைசி வாரத்தில் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்கிற மாதிரி கூடி கும்மாளம் விடுவதை பார்க்க முடியும். இது நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரசியத்தையும் ஏற்படுத்தும். ஆனால் இந்த சீசனில் தான் நாளை நிகழ்ச்சி முடிவடைய இருக்கும் நிலையிலும் உள்ளே சண்டை சச்சரவுகளும் இரண்டு அணியாக பிரிந்து ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கி கொள்வதும் தான் நடக்கிறது.
இந்த சீசனில் அதிகமாக பெரிய அளவில் டாஸ்க் கொடுக்காமல் வாயை வைத்தே வடை சுடும் கதையாக ஒருவரை மற்றி ஒருவர் குற்றம் சாட்டும் வகையில் தான் டாஸ்க்களும் கொடுக்கப்பட்டது. அது போலவே இப்போதும் போட்டியாளர்களும் நடந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ஏற்கனவே இந்த சீசனில் எலிமினேஷன் ஆகி வெளியே போன போட்டியாளர்கள் மீண்டும் கடைசி வார கிராண்ட் பினாலேவை கொண்டாடுவதற்காக உள்ளே வந்து கொண்டிருக்கின்றனர்.
அப்படி உள்ளே வந்த ஒரு சில போட்டியாளர்கள் உள்ளிருக்கும் ஐந்து போட்டியாளர்களுக்குள் பற்ற வைத்து கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள். அந்த மாதிரி தான் நேற்று கூட ஜோவிகா பிக் பாஸ் வீட்டிற்குள் எல்லோரிடமும் சகஜமாக பேசி இருந்த நிலையில் அர்ச்சனாவிடம் மட்டும் தன்னுடைய கோபத்தை காட்டிவிட்டு போயிருந்தார். அதைத் தொடர்ந்து மாயாவிடம் நீங்க அர்ச்சனா கிட்ட ரெண்டு வாரமா பேசுறது எங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கல. அர்ச்சனா நாங்க உங்க கூட இருக்கிறதை எப்படி எல்லாம் பேசினாங்க தெரியுமா?
உங்க மாயா கூட இருக்கிறவங்களுக்கு மூளை கிடையாதுன்னு சொன்னாங்களே இப்ப அவங்க மட்டும் உங்க கூட வந்திருக்காங்களே அப்போ அவங்களுக்கு மூளை இல்லையா? நீங்க அதை எல்லாம் மறந்துட்டீங்களா? என்று ஏத்தி விட அதனால் கோபமான மாயா நேரடியாக வந்து நீங்க என்கிட்ட இப்போ நடிச்சுக்கிட்டு இருக்கீங்களா? இல்ல உண்மையிலேயே பழகிக்கிட்டு இருக்கீங்களா அர்ச்சனா? என்று கேள்வி கேட்க அதற்கு அர்ச்சனா உண்மையில் நான் இப்போ உங்களை நம்பி தான் உங்ககிட்ட பழகுறேன் என்று சொல்ல,
நீங்க வந்த புதுசில் மட்டும் நான் வெளியில் இருந்து எல்லாத்தையும் பாத்துட்டு வந்துருக்கிறேன் என்றும் நான் தான் வில்லி என்கிற மாதிரி பேசுனீங்களே என்கூட பழகுறவங்களுக்கு மூளை கிடையாதுன்னு சொன்னீங்களே அப்போ உங்களுக்கு மூளை இல்லையா என்றெல்லாம் கேள்வி கேட்க ஒரு கட்டத்தில் தான் பேசியது தவறு என்று நினைத்து அர்ச்சனா மன்னிப்பு கேட்டு இருந்தார்.
பிறகு அதை ஏற்றுக் கொள்ளாமல் போன மாயாவிடம் பூர்ணிமா நீங்க ஏன் இப்படி கடுமையா பேசுறீங்க, நிகழ்ச்சி முடிய இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு. ஆரம்பத்துல நாம அவங்கள டார்கெட் பண்ணுனதுனால தான் அவங்க ஹீரோயினி ரேஞ்சுக்கு மாறிட்டாங்க. இப்போ நீங்க போய் பிரச்சனை பண்ணுனீங்கன்னா அவங்களுக்கு அனுதாபம் அதிகரிச்சிடும் என்று சொன்னதுனால மீண்டும் வந்து நான் உங்க மன்னிப்பை ஏத்துகிறேன் உங்களை நல்ல தோழியாக ஏற்றுக் கொள்கிறேன் என்று மாயா சொல்லி இருந்தார். இது 24 மணி நேர எபிசோட் நேற்று நடைபெற்றுக் கொண்டிருந்தது.












Click it and Unblock the Notifications