பிக் பாஸ் 7 ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஒரே ஒரு தவறால் அதிரடியாக வெளியேற்றப்பட்ட தினேஷ்
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு 94 வது நாளில் நேற்று பிக் பாஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.. அதாவது நேற்று நடந்த டாஸ்க்கில் தினேஷ் செய்த சிறு தவறால் அவரால் தொடர்ந்து டாஸ்க்கில் கலந்து கொள்ள முடியாமல் ஆகி இருக்கிறது.
அதாவது நேற்று பிக் பாஸ் டாஸ்க் ஒன்று கொடுத்திருந்தார். அது இரண்டு கட்டமாக நடைபெற்றது. அப்போது டாஸ்க் விளையாடிக் கொண்டிருக்கும் போது தினேஷ் மெத்தனமாக நடந்து கொண்டதால் அவர் காலில் காயம் ஏற்பட்டிருக்கிறது.

அதனால் தான் நேற்று வெளியான மூன்றாவது ப்ரோமோவில் தினேஷ் காணப்படாமல் இருந்திருக்கிறார். தினேஷ் ப்ரோமோவில் காணாததும் ரசிகர்கள் அவர் பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு வெளியே வந்து விட்டாரா என்று கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் அங்கு என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.
அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்கிற மாதிரி தான் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி 94 நாட்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. ஆனாலும் இந்த சீசனில் யார் டைட்டில் வின்னர் என்று மக்களால் உறுதியாக கூற முடியாத நிலை தான் இருக்கிறது.
இந்த நிலையில் வைல்ட் கார்டு என்ட்ரி ஆக உள்ளே நுழைந்த தினேஷுக்கு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. ஆனால் சமீப காலமாக இவர் விசித்திராவிடம் அடிக்கடி சண்டை இட்டு வருவது குறித்து பலர் விமர்சித்து வருகிறார்கள். ஒரு சிலர் தினேஷுக்கு ஆதரவும் கொடுத்து இருக்கிறார்கள். இப்படியான நிலையில் நேற்றைய எபிசோடில் சில சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.
அதாவது நேற்று பிக் பாஸ் வீட்டிற்குள் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது. அது இரண்டு கட்டமாக நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது கார்டன் ஏரியாவில் இருக்கும் தடைகளை தாண்டி முதல் மூன்று இடங்களுக்குள் வரும் போட்டியாளர்கள் இரண்டாவது டாஸ்க்கில் கலந்து கொள்ளலாம். அங்கு பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்த நிகழ்வுகள் குறித்து கேள்விகள் கேட்கப்படும் அதில் யார் சரியாக அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார்களோ அவர்களே வின்னர் என்று கூறப்பட்டிருந்தது.
அதன்படி முதல் டாஸ்க் நடைபெற்றது அங்கு பல தடைகள் இருந்தது. அதில் எல்லாம் முன்னேறிய மூன்று போட்டியாளர்கள் முதல் டாஸ்க்கில் வெற்றி பெற்று இருந்தனர். அது யார் என்றால் பூர்ணிமா, மணி, விஜய் தான் இவர்கள் இரண்டாவது டாஸ்க்கில் கலந்து கொண்டிருந்த நிலையில் மணி தன்னிடம் கேட்கப்பட்ட கேள்வியை தவறாக புரிந்து கொண்டு விடை அளித்து அவர் தோற்றுப் போயிருந்தார். அந்த டாஸ்க்கில் எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் அளித்தது பூர்ணிமா தான்.
அவர்தான் வெற்றி பெற்று இருந்தார். ஆனால் பிக் பாஸ் இவர்களுக்கு சதி செய்யும் விதமாக கடைசியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஒரே ஒரு கப் ஐஸ்கிரீம் மட்டும் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருந்தார். அதை பார்த்த அர்ச்சனா இந்த ஒரு சின்ன கப் ஐஸ்கிரீம் எனக்கு கூட போதாது என்று பிக் பாஸ் இடம் கோபப்பட்டு இருந்தார். அதை அனைவரும் ஷேர் செய்து சாப்பிட்ட பிறகு பிக் பாஸ் மேலும் 2 கப் ஐஸ்கிரீம் கொடுத்திருந்தார்.
ஆனால் இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் தினேஷ் செய்த சொதப்பல் அவருக்கு வினையாக மாறி இருந்தது.. அதாவது முதல் டாஸ்க் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது தடைகளை சரியாக முதலில் தாண்டி வந்த தினேஷ் கடைசி நேரத்தில் என்டர்டைன்மென்ட் செய்கிறேன் என்கிற பெயரில் ஒரு டயரை தாண்டும் போது சரியாக காலை வைக்காததால் வழுக்கி விழுந்து விட அவருடைய கால் முட்டி பகுதியில் அடிபட்டு இருந்தது.
அப்போதே அவர் முகத்தில் அந்த வலியை அவர் காட்டி இருந்தாலும் அதை வெளியே சொல்லாமல் மறைத்திருந்தார். ஆனால் சிறிது நேரத்திற்கு பிறகு அவரால் எதுவும் செய்ய முடியாத அளவிற்கு கால் வலி அதிகரிக்க பிறகு மெடிக்கல் ரூமுக்கு சென்று விட்டு அவர் ரெஸ்ட் எடுத்திருந்தார். அதனால் தான் அடுத்ததாக நடந்த இன்விசிபிள் டாஸ்கில் தினேஷ் கலந்து கொள்ளவில்லை.
அதனால் தான் மூன்றாவது ப்ரோமோவில் தினேஷ் இல்லாமல் இருந்திருக்கிறார். தினேஷ் பிக் பாஸ் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்கும் போது அவரிடமே விஷ்ணு உங்கள் உடம்பில் அதிகமாக கொழுப்பு இருக்கிறது அதனால் தான் இப்படி உங்களுக்கு ஆகி இருக்கிறது என்று நக்கலாக பேசியது பல ரசிகர்களின் மைண்ட் வாய்ஸ் ஆகவே இருந்தது. இன்னும் நிகழ்ச்சி முடிய ஓரு சில நாட்களே இருக்கும் நிலையில் ஏன் இந்த விபரீத செயல் என்று பலரும் தினேஷுக்கு அட்வைஸ் கொடுக்கிறார்கள்.
ஆனால் பிக் பாஸ் வெறும் ஒரு கப் ஐஸ்கிரீம்க்காக இவ்வளவு பெரிய டாஸ்க் கொடுத்து ஒருத்தருடைய காலை உடைத்து வைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இது போல டாஸ்க் கொடுக்காத பிக் பாஸ் இப்போ மட்டும் ஏன் இந்த கொலைவெறி என்பது பலருடைய கேள்வி.... தினேஷ் உடைய விளையாட்டு சரிதானா என்பது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்பதை தட்டி விடுங்க.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications