Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிக்பாஸால் உடைந்ததா நட்பு? பூர்ணிமாவை அன்ஃபாலோ செய்த நடிகை இந்துஜா.. காரணம் இதுதானா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் பூர்ணிமாவை அவருடைய நெருங்கிய தோழியான நடிகை இந்துஜா instagramல் அன் ஃபாலோ செய்து இருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் பட ப்ரொமோஷனுக்காக வந்த இந்துஜா பூர்ணிமாவிடம் சரியாக பேசவில்லை என்று பூர்ணிமா வருத்தத்தை தெரிவித்துக் கொண்டிருந்தார்.

Bigg Boss Tamil Season 7 contestant in Poornima about unfollowing actress Induja

இந்த நிலையில் பூர்ணிமாவை இந்துஜா அன் ஃபாலோ செய்து விட்டார் என்று ரசிகர்கள் ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்கள். அது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை பூர்ணிமா ரவி யூடியூபில் அராத்தி என்ற வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர். இந்த சீசனில் பிக் பாஸில் அவர் வரும்போது செமையாகவே கேம் விளையாட போகிறார் என்று அவருடைய ரசிகர்கள் காத்திருந்தனர். ஆரம்பத்தில் சில நாட்கள் நன்றாக இருந்த பூர்ணிமா பிறகு மாயா கேங்கோடு சேர்ந்து விளையாடியது பூர்ணிமாவின் இமேஜை மொத்தமாக காலி செய்தது.

முதல் நாள் தைரியமாக தனக்கு தலைவர் பதவி வேண்டும் என்று பூர்ணிமா பேசிய விதம் அவருடைய விளையாட்டு குறித்து ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து பிரதீப் ஆண்டனிக்கு எதிராக பூர்ணிமா சிவப்பு கொடிகாட்டி ரசிகர்களின் மத்தியில் வெறுப்பை வாங்கி கட்டிக் கொண்டார். அதுவும் எப்போதும் பூர்ணிமா மற்றும் மாயா சேர்ந்து கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுவது இருவரும் சேர்ந்து பிற போட்டியாளர்களை காலி பண்ணுவதற்காக பிளான் போடுவது போன்ற பல செயல்கள் ரசிகர்களின் மத்தியில் பூர்ணிமாவிற்கு நெகட்டிவ் இமேஜை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

அதனாலே கடந்த இரண்டு வாரங்களாக எலிமினேஷனில் வந்து கொண்டிருக்கும் பூர்ணிமா கடைசி இடத்தில் ஒவ்வொரு வாரமும் காப்பாற்றப்பட்டு வருகிறார். இதனால் இவர் youtube மூலம் சம்பாதித்த ரசிகர்கள் கூட இப்போது அவருக்கு குறைய தொடங்கி விட்டதாக பலர் கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து இவர்கள் கேங்கில் இருந்து வெளியே வந்த ஐசு ஓப்பனாகவே தான் பூர்ணிமா மற்றும் மாயா உடன் சேர்ந்து விளையாடியது வெட்கப்படுவதாக இருப்பதாக ஸ்டேட்மெண்ட் கொடுத்து இருந்தார்.

இதனாலையே ஒவ்வொரு வாரமும் கமல்ஹாசனிடம் பூர்ணிமா வாங்கி அழுது கொண்டு இருப்பதும் அடுத்த நாள் பழையபடி தன்னுடைய விளையாட்டை தொடங்குவதுமாக இருக்கிறார். இந்த நிலையில் பார்க்கிங் பட ப்ரொமோஷனுக்காக நடிகை இந்துஜா மற்றும் நடிகர் ஹரிஷ் கல்யாண் இருவரும் வந்திருந்தனர். இந்துஜாவும் பூர்ணிமாவும் கல்லூரி படிக்கும் போது இருந்தே நெருங்கிய நண்பர்கள். இது பற்றி பற்றி பூர்ணிமா ஒரு விருது வாங்கிய நிகழ்ச்சியில் சொல்லி இருப்பார்.

ஆனாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த இந்துஜா பூர்ணிமாவை கண்டு கொள்ளவே இல்லை. மற்ற போட்டியாளர்களிடம் சகஜமாக பேசிய அளவு கூட பூர்ணிமாவிடம் பேசவில்லை. இதனால் பூர்ணிமா ரொம்பவே மனசு உடைந்து போய்விட்டார். அப்போது இது பற்றி விஷ்ணு மற்றும் மாயாவிடம் புலம்பி இருந்தார். அதில் என்னமோ நடக்குது, எனக்கு தெரியல. நாங்கள் நல்ல நண்பர்கள். ஆனால் இந்துஜா என்னிடம் சரியாக பேசவே இல்லை.

Bigg Boss Tamil Season 7 contestant in Poornima about unfollowing actress Induja

வெளியில் நடப்பதை குறித்து நான் அவளிடம் எதுவும் கேட்கவில்லை. ஆனால் அவள் என் கண்ணை பார்த்து கூட பேசவில்லை. ஏதோ தப்பா இருக்கிறது. வேறு ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அவள் என்னை பார்த்தால் எப்படி நடந்து கொள்வாள் என்று எனக்கு தெரியும். இது ரொம்பவே கஷ்டமா இருக்கு என்று பீல் பண்ணி பூர்ணிமா பேசியிருந்தார்.

இந்த நிலையில் பூர்ணிமா சொல்வது உண்மையா என்பதை சோதிப்பதற்காக இந்துஜாவின் இன்ஸ்டாகிராம் ஐடியில் அவருடைய பாலோவர்ஸை செக் பண்ணி பார்த்த ரசிகர்கள் அங்கு இந்துஜா பூர்ணிமாவை பாலோ செய்யவில்லை. இதனால் பூர்ணிமாவை இந்துஜா அன்பாலோ செய்து விட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+