சாப்பாடு விஷயத்தில் விசித்ரா செய்த செயல்.. அம்மானு சொல்லிட்டு இந்த ஓரவஞ்சனையா? குவியும் கருத்து
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக இருக்கும் விசித்ராவின் செயல்கள் குறித்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டிற்குள் தன்னை அம்மா என்று அழைக்க சொல்லும் விசித்ரா சாப்பாடு விஷயத்தில் போட்டியாளர்களிடம் பாரபட்சம் காட்டுவது குறித்து பலரும் விமர்சித்து வருகிறார்கள்.

ஆரம்பத்தில் அதிகமான சப்போர்ட்டோடு இருந்த விசித்திராவின் செயல்களில் தெரியும் மாற்றத்தால் இப்போது ரசிகர்களின் மத்தியில் அவர் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
அந்த வகையில் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி 93 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவுக்கு வருகிறது இந்த நிலையில் உள்ளே இருக்கும் போட்டியாளர்களில் யார் டைட்டில் ஜெயிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு இருக்கிறது.
அதே நேரத்தில் ஆரம்பத்தில் அதிகமான வரவேற்பு பெற்ற போட்டியாளர்கள் கூட நாட்கள் செல்ல செல்ல இப்போது ரசிகர்களின் மத்தியில் அவர்களுடைய நடவடிக்கை அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதில் ஒருவர் தான் விசித்திரா. விசித்திராவுக்கு பிக் பாஸ் வீட்டில் முதல் வாரத்திலேயே ஜோவிகாவோடு படிப்பு விஷயத்தில் கருத்து மோதல் ஏற்பட்டது. அப்போது ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல பிரபலங்களும் விசித்திரா படிப்பு முக்கியம் என்று சொன்னதற்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.
பிறகு இதுவரைக்கும் எந்த போட்டியாளர்களும் அதாவது வயதான போட்டியாளர்களுக்கும் கிடைக்காத வரவேற்பு ரசிகர்களின் மத்தியில் விசித்ராவுக்கு கிடைத்து வந்தது. அதனாலேயே இத்தனை நாட்களை விசித்திரா பிக் பாஸ் வீட்டிற்குள் கடந்து இருந்தார். ஆனால் கடந்த ஒரு சில வாரங்களாக அடிக்கடி தினேஷோடு சண்டை சச்சரவுகளில் விசித்திரா ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். இதில் தினேஷின் பர்சனல் வாழ்க்கை குறித்தும் கடந்த வாரத்தில் விசித்ரா விமர்சித்து பேசி இருந்தார்.

அதற்கு கமல்ஹாசன் அட்வைஸ் செய்திருந்த நிலையில் அவர் போனதுமே மீண்டும் தன்னுடைய கருத்து தான் சரி என்று தினேஷ் பற்றி அவதூறாக பேசிக்கொண்டே இருக்கிறார். அதுபோல சாப்பாடு விஷயத்திலும் நடந்து கொண்ட விதம் குறித்து சில போட்டியாளர்கள் உள்ளே புலம்பி கொண்டிருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் ஸ்மால் பாஸ் வீட்டில் இருந்த விசித்திரா சமையல் பொறுப்புகளை கவனித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அவரிடம் அர்ச்சனா கொஞ்சம் தயிர் கேட்டிருக்கிறார். அதற்கு விசித்ரா முடியாது என்று மறுத்திருக்கிறார். அதற்கு ஒரு ஸ்பூன் தயிராவது தாருங்கள் என்று கெஞ்சி கேட்ட பிறகும் விசித்திரா அது முடியவே முடியாது இங்கே கொஞ்சம் தான் இருக்கிறது. எல்லாருக்கும் சமமாக பங்கு வைத்து தான் கொடுக்க வேண்டும் என்று மறுத்திருக்கிறார். ஆனால் சிறிது நேரம் கழித்து பூர்ணிமா விசித்ராவிடம் தயிர் கேட்கும் போது ஒரு டப்பா தயாரை அப்படியே எடுத்து கொடுத்திருக்கிறார்.

அதுபோல மணி சிக்கன் பீஸ் கேட்டபோது விசித்ரா கொடுக்க மறுத்துவிட்டு நிக்சன் மற்றும் மாயா, பூர்ணிமாவிற்கு இன்னும் வைத்துக் கொள்ளுங்கள் இன்னும் வைத்துக் கொள்ளுங்கள் என்று எடுத்து எடுத்து கொடுத்து இருக்கிறார். அதனால் கடந்த வாரத்தில் மணி ஏன் இந்த அம்மா இப்படி நடந்துக்கிறாங்க தன்னை எல்லோரும் அம்மானு கூப்பிடனும்னு சொல்றவங்க இப்படி ஒரு வேலை பார்க்கலாமா? சாப்பாடு விஷயத்தில் எதுக்கு இந்த ஓரவஞ்சனை என்று புலம்பி கொண்டு இருந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வர இதுகுறித்து ரசிகர்கள் விசித்திராவை திட்டி வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications